கமலும் “அந்த” 6 வாரங்களும்….

Posted on ஓகஸ்ட் 26, 2009

4


12.08.09- கமல் 50 ஆண்டுகள் திரையுலகில்!

கடந்த 12.08.09 புதன் கிழமை தமிழக ஏன இந்திய திரையுலகில் ஒரு பொன்னான நாள் என்றால் அது மிகையல்ல.உலக நாயகன் திரு.கமலஹாசன் அவர்கள் நம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.இதை அன்று மட்டுமே கொண்டாட விருப்பமில்லாத தமிழ் மக்களை எண்ணத்தைப் புரிந்து கொண்ட விஜய் டிவியும் தமிழ் திரை உலகத்தினரும் ஒரு முடிவு செய்துள்ளார்கள்.

சுட்டிப்பையன் கமல்

சுட்டிப்பையன் கமல்

திரைஉலகில் 50 ஆண்டுகளைக் கடந்த உலக நாயகன் கமல்!

திரைஉலகில் 50 ஆண்டுகளைக் கடந்த உலக நாயகன் கமல்!

விஜய் டிவியும் கமலின் “அந்த” ஆறு வாரங்களும்:

கமலின் பொன் விழாவையொட்டி விஜய் டிவி ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்துகிறது.இது திரு.கமலஹாசன் அவர்களுக்கு தமிழகம் அளிக்கும் பாராட்டுவிழா! இந்த விழாவின் ஏற்பாட்டாளர்கள் குழு:

விழா குழுவினர்

விழா குழுவினர்

kamal-haasan-02-17-08-09

முதல் வாரம்:

முதலில் கமல் பேருந்து தமிழகம், பாண்டி‌ச்சே‌ரி மற்றும் பெங்களூருவை வலம் வரும். இந்த பேருந்தில் கமலின் அ‌ரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் என்கிறார்கள்.

கமல் திரையின் பல்வேறு முகங்கள்!

கமல் திரையின் பல்வேறு முகங்கள்!

இரண்டாம் வாரம்:

இயல்,இசை, நாடகத் திருவிழா!

இலக்கியவாதிகள் பங்குபெறும் கருத்தரங்கு மதுரையில் நடைபெறும். கருத்தரங்கின் தலைப்பு, கமலும் தமிழும். திரைப்படங்களில் கமல் கையாண்ட வெ‌வ்வேறு வட்டார வழக்குகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

மூன்றாம் வாரம்:

கமலும் காதலும் இசைவிருந்து!

கோயம்புத்தூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கமல் படங்களின் ஹிட்ஸ் மட்டும் இடம்பெறும். சென்னையில் கமல் திரைப்பட விழாவை மூன்று வாரங்கள் சத்யம் சினிமாசுடன் இணைந்து நடத்தவும் திட்டமிட்டுள்ளது, விஜய் டிவி.

கமலின் 50 ஆண்டு திரைவிழாவின் உச்சகட்டம்:

பொன்விழாவின் முத்தாய்ப்பு!

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சகட்டமாக பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்திய திரையுலகைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிமுக விழாவில் பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கமலின் அலுவலகம் அமைந்துள்ள எல்டாம்ஸ் சாலையின் பெயரை டாக்டர் கமல்ஹாசன் சாலை என மாற்ற முதல்வ‌ரிடம் நடிகர் சங்கம் சார்பில் கோ‌ரிக்கை வைக்கப்படும் என தெ‌ரிவித்தார்.உன்னைப்போல் ஒருவன் படத்தில் பாடல் எழுதியிருக்கும் கவிஞர் மனுஷ்யபுத்ரன், கமல் குறித்த புத்தகம் ஒன்றை தயா‌ரித்து வருகிறார்.

இன்னும் ஆறு வாரங்களுக்கு, சந்தேகமில்லாமல் கமல் வாரம்தான்.

Advertisements