ஜப்பானிய அழகிகளும் நூதன விவசாயமும்

Posted on ஓகஸ்ட் 21, 2009

9


ஷிஹொ ஃபுஜிதா

ஷிஹொ ஃபுஜிதா

மேலே உள்ள புகைப்படத்தில் தோன்றும் பெண்ணைப் பார்த்தால் முதலில் என்ன தோன்றுகிறது உங்களுக்கு? குறைந்த பட்சம் யாரோ ஒரு ஜப்பானிய இளம்பெண் என்றாவது தோன்றும்! நானும் உங்களைப் போலத்தான் நினைத்தேன்.என்ன, நான் ஜப்பானில் 2 வருடமாக வசிப்பதால் ஒரு படி மேலே போய்….”ம்ம்ம் இந்த பொண்ணுகூட ரயில்வண்டிக்குள்ள ஏரி அழகுசாதனப் பெட்டிகூட குடித்தனம் நடத்த ஆரம்பிக்கிற சராசரி பொண்ணுங்கள்ல ஒண்ணுன்னு நினைத்தேன் அவ்வளவுதான்! ஆனால் அப்படி நினைத்த நீங்களும் நானும் ஏமாந்து விட்டோம்.

சரியாச் சொல்லனும்னா…..இந்த பொண்ணு பாரதி கண்ட புதுமைப்பெண்ணுங்க! என்ன….ஜப்பானில் வாழ்கிற பாரதி கண்ட புதுமைப்பெண்.சரி விஷயத்துக்கு வருவோம், இந்த பெண்ணுடைய பெயர் ஷிஹொ ஃபுஜிதா.சொந்த ஊர் டோக்கியோவின் ஷிபுயா எனப்படும் நகரம்.அடிப்படையில் இந்த பெண் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்! இவள் தொழில் பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் சம்பத்தப்பட்டது.இவள் இணையதளத்தில் மிகவும் பிரபலம் ஜப்பானில்.இவளுக்கு சமுதாயம் சூட்டிய பெயர் ஷிபுயா காள்(shibuya gal) ஆனால் அதுவல்ல விசேஷம்!

டோக்கியோவின் ஷிபுயா நகரம்

டோக்கியோவின் ஷிபுயா நகரம்

இதுவரை ஃபேஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவந்த ஷிஹோ சமீபத்தில் விவசாயத்தில் ஒரு பெரிய இணையப் புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறாள் என்பது விஷேஷமான் செய்தி! பொதுவாக ஜப்பானிய இளம்பெண்களைப் பொருத்தவரை அவர்கள் நிறைய நேரம்,பணம் விரயம் செய்வது அழகுசாதனப் பொருட்கள் வாங்குவதிலும் பின் தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும்தான். அதனால் அவர்களை சிலர் ஃபாஷன் ஃப்ரீக்ஸ்(அழகுப் பைத்தையங்கள்!( ஜப்பானிய அழகிகள் மன்னிக்க!)) என்று அழைப்பவர்களும் உண்டு! மேலும் இவர்கள் பள்ளி முடித்தவுடன் பெரு நகரங்களில் வேலை தேடித்தான் பெரும்பாலும் செல்வது வழக்கம் ஜப்பானில்! அப்படிப்பட்ட ஜப்பானிய இளம்பெண்களைத் தற்போது விவசாயத் தொழிலில் ஈடுபட ஊக்குவித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறாள் வெறும் 24 வயதே ஆன ஷிஹொ( நம்மவர்கள் கவனிக்க!)

அழகிய ஷிஹோ நெல் நாற்றுடன் நஞ்சையில்!

அழகிய ஷிஹோ நெல் நாற்றுடன் நஞ்சையில்!

நம்  நாள்/வார இதழ்களின் அட்டைகளில் அவ்வப்போது காட்சிதரும் நடிகைகள் போல எப்போதும் குட்டைப்பாவாடை/கால்சட்டையுடன் ஷிபுயா(ஜப்பான்) வீதிகளில் வலம்வரும் ஜப்பானிய இளம்பெண்களை…..நம் நஞ்சைகளில் நெல் நாற்றுடன் அழகாக நாற்று நடும் கிராமத்து குயில்கள் போல மாற்றிய சாதனை/பெருமை ஷிஹோவை மட்டுமே சாறும்!

நாற்று நடும் அழகிகளுடன் ஷிஹொ(நடிவில்)

நாற்று நடும் அழகிகளுடன் ஷிஹொ(நடிவில்)

அதுமட்டுமல்ல….நம் பாரதிகண்ட புதுமைப்பெண் ஷிஹோ என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் அவள் விவசாயம் முழுமையாக (உழுதல்,செப்பனிடுதல்,நீர்பாசனம் போன்ற அனைத்தையும்) தானே செய்கிறாள் என்பதுதான்!( பார்க்க படம்)

ஷிஹோ ட்ராக்டரில்.....

ஷிஹோ ட்ராக்டரில்.....

இப்படிக்கூட நாங்க போஸ் கொடுப்போம்!

இப்படிக்கூட நாங்க போஸ் கொடுப்போம்!

சரி இது எந்த அளவுக்கு ஜப்பானிய பெண்களிடமும், விவசாயிகளிடமும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்றால் மிக மிகப் பெரிய அளவில்தான் என்று சொல்ல வேண்டும்! ஏனென்றால் ஷிஹொவின் திறமையைப் பார்த்து அதிக பட்சமாக 24 ஏக்கர் நிலங்களைக்கூட குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள் ஜப்பானிய விவசாயிகள்! மேலும் இதுவரை அழகு சாதனப் பெட்டிகளுடனும், நகர வேலை தேடியும் திரிந்த ஜப்பானிய இளம் பெண்கள் இப்போது பெரும் எண்ணிக்கையில் நெல்வயல்களைத் தேடிச்செல்கிறார்கள்! (என்ன கொடுமை சரவணன் இது!!)

விளைவு…..ஷிஹோ தற்போது “ஷிபுயா காள் ரைஸ்” எனும் புதிய வகை அரிசியை அறிமுகப்படுத்தி அது தற்போது மிகுந்த வரவேற்ப்போடு சக்கைப் போடு போடுகிறது ஜப்பானில். அப்படி போடு! ஆமாம்….நம்ம போண்ணுங்க என்ன பண்றாங்க இப்பெல்லாம்? (2 வருஷமா ஜப்பான்ல இருக்கேங்க அதான் தெரிஞ்சுக்கலாமேன்னு!) எது எப்படியோ…..அட்டைப்படத்துல வருகிற மாதிரி குட்டைப்பாவாடை/கால்சட்டையோடு திரியாமல் இருந்தால் சரி!!

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்……கொஞ்சம் சொல்லுங்களேன்!

Advertisements