வேண்டாம் வரதட்சணை

Posted on ஓகஸ்ட் 19, 2009

0


ஈழத்தில் இட்டதீ சீதைக்கு! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! – வாழாது
மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!

தாலிகட்ட நூறுபவுன்! தாயாக்க வேறுபவுன்!
கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப
ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுடைத் தாசனே!
வேண்டாம் வரதட் சணை!

(நன்றி: கனி)

Advertisements
குறிச்சொற்கள்: , ,