மீண்டும் பாப் மகாராஜா மைக்கேல் ஜாக்ஸன்!

Posted on ஓகஸ்ட் 17, 2009

0


பாப் மகாராஜா மைக்கேல் ஜாக்சன், உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவர் நடன அசைவுகள் இன்னும் உலகை விட்டு மறையவில்லை என்பது உண்மை! காரணம் அவர் ரசிகர்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற அதிரவைக்கும் அந்த நடன அதிர்வுகள்.எனவே மீண்டும் நம்மிடையே பாப் மகாராஜா மைக்கேல் ஜாக்சன்! எப்படி என்கிறீர்களா?

michael-jackson-neverland

திஸ் இஸ் இட்… இதுதான் மைக்கேல் ஜாக்சன் பற்றி சோனி பிக்சர் என்டர்டெயின்மென்ட் வெளியிடும் திரைப்படத்தின் பெயர்.

jacksonitx-topper-medium

கிங் ஆஃப் பாப் மைக்கேல் ஜாக்சனின் இழப்பிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. தாங்கக் கூடிய இழப்பா அது? எம்ஜே-வை பற்றிய திரைப்படத்தை சோனி தயா‌ரித்து வருகிறது. இதில் எம்ஜே-யின் பேக் ஸ்டே‌ஜ் நிகழ்ச்சிகளுடன் அவர் நடன ஒத்திகை செய்வது, அவருக்கு நெருக்கமானவர்களின் பேட்டிகள் என பல விஷயங்கள் இடம்பெறுகிறது.

எம்ஜே-யின் புகழை பணம் பண்ணும் வேலைகள் உலகம் முழுவதும் ஜரூராக நடந்து வருகிறது. அவரது சாயலில் பொம்மைகளும் விற்பனைக்கு வரவிருக்கின்றன. அவரது வீடியோக்களை அனுமதி பெறாமல் விற்பனை செய்வதும் அதிக‌ரித்துள்ளது.சோனி தயா‌ரிக்கும் படம் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அவரது குடும்பத்தின‌ரிடம் ட்ரெஸ்டுக்காக அளிக்கப்படுமாம்.

[polldaddy rating=”366239″]

Advertisements