இனியும் ப்ராஞ்ஜலீனாவா…..ப்ராட் பிட்,ஏஞ்ஜலீனா ஜோலியா?

Posted on ஓகஸ்ட் 17, 2009

0


ஏஞ்சலினா ஜோலியும், பிராட்பிட்டும் திருமண பந்தத்தில் இணைந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஹாலிவுட்டை பொறுத்தவரை இது மிக நீண்ட காலம். அதனால்தானோ என்னவோ பொறாமைக்காரர்கள் இருவரும் பி‌ரியப் போவதாக வதந்தி பரப்பி தி‌ரிகிறார்கள்.

இன்குளோ‌ரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் பி‌ரிமியர் ஷோவுக்கு வந்த பிராட்பிட்டிடம் இது குறித்து கேட்டதற்கு மனிதர் பொ‌‌ரிந்து தள்ளிவிட்டார்.ஜோலிக்கும் தனக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் பி‌ரிவதற்கான வாய்ப்பே இல்லை என வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ச‌ரி, ஜோலி என்ன சொல்கிறார்?

அவர் பிராட்பிட்டை விட ஒருபடி மேல். பேட்டியொன்றில் பிட் தன்னை சோல்மேட் என்று சொன்னதை குறிப்பிட்டு ஒரே புளகாங்கிதம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லையென்றவ‌ர், எப்போதுமே பிராட், மை மேன் என்று வதந்தியை ஒரேயடியாக பொசுக்கிவிட்டார்.

எல்லாம் ப்ராஞ்ஜலீனா செயல்……ஒன்றும் சொல்வதற்கில்லை!!

Advertisements