கல்லூரி வாழ்க்கை

Posted on ஓகஸ்ட் 11, 2009

2


காலம் கடந்து

பழைய பாதைகளில்

பயணிக்கிற போது

பழைய ஞியாபகங்கள்…..

அந்த

அறைகள்தான்

எங்களின் சொர்கங்கள்…..

அந்த

மைதானங்கள்தான்

எங்கள் நட்பு வளர்த்த

ஊடகங்கள்…..

அந்த

அடுமணைகள்தான்

அன்பு வேரோட

தேனீர் ஊற்றிய

அட்க்ஷய பாத்திரங்கள்…..

காக்கைகளாய்தான்

இல்லை இல்லை

காக்கைகளாய் மட்டுமே

வாழ்ந்தோம்…..

காரணம் இல்லாமல்

இறுகிப் போனோம்…..

உயிரோடு

உயிராய்

உருகிப்போனோம்…..

பகலை இரவாக்கி

இரவை பகலாக்கி

காலத்தை

வென்றிருக்கிறோம்…..

எங்கள்

குரல் கேட்காத

திரையரங்குகள் இல்லை…..

நாங்கள்

பயணிக்காத

இரவுநேர

பேருந்துகள் குறைவு…..

பணம் எங்களை

பாகுபடுத்தவில்லை…..

குணம்

பார்த்து நாங்கள்

பழகியதில்லை…..

எதன் பொருட்டும்

எங்கள் நட்பில்லை…..

அமைந்து போனது

அப்படித்தான்…..

பிரியும் நேரம்

வந்தது…..

பிரிவு

உபச்சாரங்கள்…..

அழுகைகள்…

அரவணைப்புகள்….

ஆட்டோகிராப்புகள்…..

பிரிய

மனமில்லாமல்…..

வேறு

வழியில்லாமல்…..

பிரிந்து

போனோம்…..

காலம் கடந்தது…..

வயது கரைந்தது…..

நண்பர்கள்

உயர்ந்தார்கள்…..

உருமாறிப்

போனார்கள்…..

இறுகி

உயிராய் கிடந்த

ஓரிரு நண்பர்கள்

சந்தித்து கொண்டோம்

வாழ்க்கைப் பயணத்தில்…..

அழுது

அரற்றிய

அதே நண்பர்கள்….

கண்ணீர்

சிந்திய

அதே கண்கள்…..

இரும்பாய்

கணத்த

அதே மனது…..

இவை எல்லாம்

இரண்டு

நிமிடத்துக்கு மேல்

என்னோடு

நேரம் செலவிட

தயாராய் இல்லை…..

அடுத்தமுறை

அவசியம்

வீட்டுக்கு வா…

வீட்டருகே சொன்னார்கள்….

நேரத்தின்

முக்கியத்துவம்

அவர்களுக்கு…..

இப்போதெல்லாம்

மரியாதைக்குரிய

மனிதர்களை

எதிரிலே பார்த்தால்

விலகியே போகிறேன்…..

காலத்தின்

பிணைக் கைதிகள்

அவர்கள் மீது

தவறில்லை…..

நிகழ்கால

மாற்றம் பார்த்து

பழைய கல்வெட்டுகளை

அழித்தெழுத

நான் தயாராய் இல்லை…..!!

[polldaddy rating=”366239″]

Advertisements