கலிகாலமும் கால்சென்டரும்…..

Posted on ஓகஸ்ட் 10, 2009

4


539w

அன்னியச்செலாவனியை அதிகரிக்க பல அன்னிய சர்வதேச நிறுவனங்கள் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இன்று நாடு முழுவதும் கால் சென்டர்கள் பெருத்துவிட்டன! இதனால் நம்மவர்களுக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ….நிச்சயம் வேலை என்ற பெயரில் உள்ளே நுழைந்து தங்கள் லீலைகளை அரங்கேற்றிக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கிறதென்பது யாரும் மறுக்க முடியாத உண்மை! இதற்க்கு சமீபத்திய சான்று….

ராணா என்கிற(திறமைசாலி??!!) இளைஞரின் கால் சென்டர் லீலை. டெல்லியில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரியும் இந்த பெரிய திறமைசாலியான(கற்பழிப்பதில்?!) ராணா தன்னுடன் பணிபுரியும் சக பணியாளரான 27 வயதான ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து எங்கோ கொண்டு சென்று தன் காமப்பசியைத் தணித்துகொண்டு விட்டு(இந்த மானங்கெட்ட பொழப்புக்கு பேசாம இவனுங்க எல்லாம் தூக்கு போட்டுத் தொங்கலாம்!) அந்த பெண்ணை அங்கேயெ விட்டு விட்டு எஸ்ஸாகியிருக்கிறார்.

மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் (பாவம்…..சும்மா விடுமா ராணாவை?) தான் நன்றாக ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து உடனே போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்! போலீசும் ராணாவை கைது செய்து விசாரித்து வருகிறது!

கால் சென்டர்களில் வேலை செய்யும் தோழிகளே சற்று யோசியுங்கள்…..அதிகம் கவனமாயிருங்கள்!!

இதுக்கு எல்லாம் காரணம் யாரு? தெரியும்……ஆனா…… தெரியாது……ஹி ஹி ஹி…!

தெரிஞ்சா நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்கலேன்!

[polldaddy rating=”366239″]

Advertisements