என்று தணியும் இந்த இனவெறி??

Posted on ஓகஸ்ட் 10, 2009

0


இன்னும் நின்றபாடில்லை இந்தியர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் என வெறி(?!).சனிக்கிழமை இரவு  இந்தியாவின் இன்டோரைச் சேர்ந்த மோஹித் மங்கள் எனும் எஞ்ஜினியர் பீர் பாட்டில் மற்றும்,பேஸ்பால் மட்டையால் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்!

தற்போது நல்ல நிலையில் இருந்தாலும் இடுப்பு மற்றும் கால் காயங்களுடன் மருத்துவமனையில் சகிச்சை பெற்று வரும் இவர் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஆஸ்திரேலிய அதிகாரிகளைச் சந்தித்த பின் தாக்கப்படும் நான்காவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆமாம் ஏன் இந்த கொலைவெறி இந்த ஆஸ்திரேலியர்களுக்கு? என்ன தான் சாதிக்கப் போகிறார்கள் இத்தகு கீழ்த்தரமான செயல்களால்?! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!?? பின்ன……இந்திய அரசாங்கமும் ஆஸ்திரேலிய அரசாங்கமும்தான் இதுவரைக்கும் ஒன்றும் செய்தபாடில்லையே!

இதெல்லாம் கொடுமைங்க……அப்பா,அம்மா,சொந்தம்,பந்தம் எல்லாம் விட்டு வெளிநாடு வந்து படிக்கலாமென்று வந்தால் தரங்கெட்ட இந்த இனவெறி கும்பலால் அடிபட்டுச் சாவது என்ன விதியோ??

கடவுளே நீயாவது அந்த இந்திய நண்பர்களை தயவு செய்து காப்பாத்து!

[polldaddy rating=”366239″]

Advertisements