டான் ப்ரவுனின் “ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்”

Posted on ஓகஸ்ட் 8, 2009

0


ரான் ஹாவர்டின் ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் 29ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. டாவின்சி கோட் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது இப்படம்.

Angels_and_Demons_Wallpaper_1_1280இயேசு பிரம்மச்சாரி அல்ல. அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் என்று கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிராக உருவானது டாவின்சி கோட். வாடிகான் இந்தப் படத்தை கடுமையாக எதிர்த்தது. பல நாடுகள் படத்தை தடை செய்தன. தமிழகத்திலும் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
Tom_Hanks_in_Angels_and_Demons_Wallpaper_2_1024இந்த கடுமையான எதிர்ப்பை தாண்டி படம் வசூலை வாரி குவித்தது. மாறாக, ஏஞ்சல்ஸ் அண்டு டீமனஸ் படத்தை, ஆபத்தில்லாத கேளிக்கை படம் என வரவேற்றது வாடிகான். எந்த நாடும் படத்தை தடை செய்யவில்லை.

ஆனால் வசூல்…?

இதுவரை 81,5 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது. டாவின்சி கோட் படத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

இந்நிலையில் சோனி நிறுவனம் ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸை இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வரும் 29ஆம் தேதி முதல் இந்தியாவில் வெளியிடுகிறது. எதிர்பபே இல்லாத சூழலில் டாவின்சி கோட் படத்தின் வசூலை இப்படம் எப்படிப் பிடிக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: வெப்துனியா
Advertisements