இந்தியாவுக்கு அணுஆயுதம் அவசியமா?

Posted on ஓகஸ்ட் 4, 2009

4


இந்தியாவுக்கு (உலகிற்க்கும் கூட) அணுஆயுதம் அவசியமா? இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் சொல்லுவேன்…..

முக்கியமாக நான் தற்போது ஹிரொஷிமாவில் படித்துக்கொண்டிருப்பதால் அவ்வப்போது இந்த கேள்வியை நான் எதிர்கொள்ள நேரிடுகிறது! அதற்கு என்னுடைய பதில் எப்போதும்…..”பாதுகாப்பிற்காக”, என்பது தான்.அப்படி ஒரு ஆசிரியரிடம் நான் இன்று கூறியபோது, அவர் என்னிடம் முன்வைத்த கருத்தும் கேள்வியும்:

“உண்மையில் எங்களுக்கு தான்(ஜப்பானியர்களுக்கு) அணுஆயுதம் பாதுகாப்பிற்க்காக மிக மிக அவசியம்.ஏனென்றால், நாங்கள் இரு முறை பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு,பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.எனவே அப்படி தேவைப்படும் நாங்களே அதை வேண்டாம் என்றும், உலக அழிவை தடுக்க வேண்டும் என்று போராடும் போது, அது அவசியப்படாத நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்” என்றார்.நான் சற்று குழம்பித்தான் போனேன்.ஆகவே என் வலயுலக நண்பர்களான உங்களிடம் இந்த கேள்வியை முன்வைக்க எண்ணிணேன்.உங்கள் கருத்துகளை தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

சில புகைப்படங்கள்…..உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்….!!

ஹிரொஷிமா, அணுஆயுத தாக்குதளுக்கு முன்பு(ஆகஸ்டு 5,1945)……

hpiphbefore(ஹிரோஷிமா மாநகர இன்டஸ்ட்ரியல் ப்ரொமோஷன் ஹால்,கட்டிடம்)

ஹிரொஷிமா, அணுஆயுத தாக்குதளுக்கு பின்பு(ஆகஸ்டு 6,1945)……

91847-004-669368AC

ஹிரோஷிமா நினைவுச்சின்னம், இன்று……

genbaku_dome_present_hiroshima_atomic_bomb

இந்தியாவுக்கு (உலகிற்க்கும் கூட) அணுஆயுதம் அவசியமா? இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் சொல்லுவேன்…..

உங்கள் பதில்??? பகிர்ந்து கொள்ளுங்கள்…….

Advertisements