மரணத்தை வென்று புன்னகையுடன் ஹன்னா க்ளார்க்!

Posted on ஜூலை 24, 2009

0


இங்கிலாந்தில் உள்ள கார்டிப் வேல்ஸ் எனும் நகரத்தில் 1993 ஆம் பிறந்தவர் ஹன்னா க்ளார்க். இந்த சிறுமிக்கு, கார்டியோமயொபதி எனும் இதயக்கோளாறு பிறப்பிலேயே இருந்தது.இதனால் மிகவும் அவதியுற்ற ஹன்னாவுக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தார் மேக்டி யாகுப்,இவர் உலகின் தலைசிறந்த இருதய அருவைச் சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர்!

ஹன்னா க்ளார்க்:

_41554856_clark_pa_203_b

இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் மேக்டி ஹன்னாவுடன்:

_41555232_hannah_pa_203long

ஆனால் இந்த சிறுமியின் இருதய நோய் சற்று சிக்கலானது.அதாவது, பொதுவாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும்போது, நோயாளியின் இருதயத்தை அகற்றிவிட்டு பின் வேறொருவரின் இருதயத்தை பொருத்துவது வழக்கம்.மாறாக மாக்டி அவர்கள், ஹன்னாவுக்கு செய்ய முடிவு செய்தது என்னவென்றால், ஹன்னாவின் இருதயத்துடன், இன்னொரு இருதயத்தை பொருத்துவதுதான்.காரணம், அவர் ஹன்னாவின் இருதயம் முழுவதும் பழுதுபடவில்லை என நம்பினார்.எனவே, அவர் ஒரு புது யுக்தியை கையாள எண்ணி, ஹன்னாவின் இருதயம் தற்காலிகமாக வேலை செய்யாமல்(குணமடைய!) இருக்க,வேறொரு இருதயத்தை பொருத்தினார்.இது நடந்தது 1995 ஆம் ஆண்டு,பிப்ரவரி மாதம்.இது உலகில் முதல்முறையாக கையாளப்பட்ட முயற்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது! இத்தகைய சிகிச்சையின் மூலம், நோயாளியின் இருதயத்திற்க்கு தற்காலிக ஓய்வு கொடுத்து அது சீராகச் செய்யும் முயற்ச்சி! இது எந்த அளவு சாத்தியம் என்பது 1995-ல் யாருக்கும் தெரியாது! இது முற்றிலும் ஒரு சோதனை முயற்ச்சியே!

ஹன்னாவின் இருதய அறுவை சிகிச்சை செயல்முறை விளக்கப்படம்:

_41557070_heart_transplant_416_2

மேலுள்ள விளக்கப் படத்தில் குறிப்பிட்டபடியே ஹன்னாவின் இருதயமும்,பொருத்தப்பட்ட இருதயமும் வேலை செய்த்து ஒரு உலக அதிசயம் என்றே சொல்லலாம்! இதைவிட பெரிய ஆச்சரியம்,அதிசயம் என்னவென்றால், வலது பக்க படத்தில் குறிப்பிட்டுள்ளபடி(ஆங்கிலம்…..சிறமத்திற்க்கு மன்னிக்கவும்!) பத்து ஆண்டுகளுக்கு பிறகு, ஹன்னாவை சோதித்த மருத்துவர் மாக்டிக்கு பெரிய அதிர்ச்சி,ஆச்சரியம்! அது என்னவென்றால் ஹன்னாவின் இருதயம் இப்போது முழுமையாக குணமடைந்து,நன்றாக வேலை செய்து கொண்டிருந்தது தான்! இதை கண்ட மாக்டி அவர்கள், ஹன்னாவின் பொருத்தப்பட்ட இருதயத்தை அகற்றினால் என்ன என்று எண்ணினார்.ஆனால் அப்படி அகற்றுவதால், நேரும் சிக்கல் பற்றி அவறால் உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை! இருந்தாலும் அவ்வாறு செய்வதால் அசம்பாவிதம்,உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாது என முழுமையாக் நம்பிய மாக்டி அந்த இருதயம் அகற்றும் அறுவைச்சிகிச்சையை செவ்வனே செய்து முடித்தார்! அவர் நினைத்தபடி அவர் கூற்று ஊர்ஜிதமானதோடு, ஒரு உலக அதிசயமும் நடந்தேறியது  ஹன்னாவின் இந்த அறுவைச்சிகிச்சையினால்!

மாக்டியின் கூற்று: பழுதுபட்ட ஒரு நோயாளியின் இருதயத்திற்க்கு தற்காலிக ஓய்வு கொடுத்து, வேறொரு இருதயத்தைப் பொருத்துவது மூலம், நோயாளியின் இருதயம்சீராகச் செய்து, பின்பு பொருத்தப்பட்ட இருதயத்தை அகற்றி நோயாளிக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்பதே!

இன்று ஹன்னா நல்ல ஆரோக்கியத்துடன், பள்ளி செல்கிறாள்…..மரணத்தை வென்று!!
வாழ்க ஹன்னா……வாழ்க மருத்துவர் திரு.மாக்டி யாகுப்!!

மீண்டுமொறு இன்று ஒரு தகவலில் சந்திப்போம்.நன்றி!

Advertisements