ஜப்பானின் பொம்மை உலகம்

Posted on ஜூலை 24, 2009

1


ஜப்பான் நாட்டு மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் இரு விடயத்தில் அலாதி பிரியம் கொண்டவர்கள்! அவை, உணவு மற்றும் பொம்மைகள்.பொம்மைகள் என்றால் இயந்திர மனிதனான ரோபோவையும் சேர்த்துதான்! என்வே ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள், புதிய புதிய பொம்மைகள் உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது வழக்கம்.அதன் பயனாக வருடம் ஒரு புதிய வகையான பொம்மையை உலகுக்கு அறிமுகப்படுத்துவார்கள்!

அந்த வரிசையில் இந்த வருடத்திற்கான பொம்மை வரவுகளில் குழந்தைகளை கவரும் வகையில் சந்தைக்கு வந்துள்ள பொம்மையைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்! இதன் பெயர் “டி.வி.குளோப்” அதாவது தொலைக்காட்சி உலகம்/உலகத்தொலைக்காட்சி என்பது அர்த்தம்!

globe-tv

இதில் புதுமை என்ன என்று கேட்கிறீர்களா……வருகிறேன்.அதாவது, இதற்கு முன்பும் இது போன்ற பொம்மைகள் உருவாக்கப்பட்டன என்றாலும் இந்த பொம்மையில் வித்தியாசம் என்னவென்றால், இந்த பொம்மையில் உள்ள பேனாவினால்(பார்க்க: படம்,கீழே) உலகப்பந்தில் எந்த இடத்தைச் சுட்டினாலும் அந்த குறிப்பிட்ட இடத்தின் (அதாவது உலகின் நாடு/நகரம்) முழு விவரங்களும் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சியில் படமாக ஓடும் என்பதே இந்த பொம்மையின் விஷேசம்! இதற்க்கு முந்தைய பொம்மைகளில் வெறும் செய்தியாகவோ, நிழற்ப்படமாகவோ தான் உலகின் எல்லா பகுதிகளின் விவரங்கள் காண்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது!

globe-tv-2

ம்ம்ம்….இன்னும் என்ன தாமதம், சென்று உங்கள் சுட்டிக்கு இந்த பொம்மையை வாங்கிக்கொடுங்கள் என்று சொல்லிவிடலாம்.ஆனால் அது தற்போது இயலாது என்பதெ விஷயம்.கவலை வேண்டாம், அதிகபட்சம் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியக் கடைகளில் இந்த பொம்மை கிடைக்கும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்!

நன்றி. தங்கள் மேலான விமர்சனங்களை தந்துவிட்டு செல்லுங்கள் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

Advertisements