சூரிய கிரகணம்,ஜூலை 22,2009

Posted on ஜூலை 22, 2009

0


இன்று  ஜூலை 22,2009, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சூரிய கிரகணம் காணப்படும்.முழு சூரிய கிரகணம் 00:51  UT நேரத்திற்கு,அரபிக்கடலில்( இந்திய கடலோரம்)தொடங்கும். சூரிய கிரகணத்தின் பாதை 200 கி.மீ என நாசா விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர். இந்த சூரிய கிரகணம் மத்திய இந்தியாவைக் கடந்து நேபாலம்,வங்கதேசம்,பூடான் மற்றும் மியான்மரைக் கடந்து சீனாவை அடைகிறது! இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் 00:51  UT நேரத்திற்கு தொடங்கி பாலினேசிய தீவுகளில் 04:19:26 UT  நேரத்திற்கு முடிவடைகிறது.அதிகபட்ச சூரிய கிரகணம் தென்படும் நேரம் 02:35:21 UT, மேலும் இது 6 நிமிடம் 39 வினாடிகள் நீடிக்கும்!

TSE2009globe1b

முழு சூரிய கிரகணம் ஜப்பானில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு வருவதாக கூறுகிறார்கள்! முடிந்தால் நீங்களும் கண்டுகளியுங்கள்.ஆனால் தகுந்த உபகரணங்களோடு மட்டுமே! வாழ்த்துக்கள்!

Advertisements