அழகே…..

Posted on ஜூலை 22, 2009

0


தோட்டத்து மலர்கள் எல்லாம்…..

விசும்புகின்றன

தங்களை யாரும் ஏறெடுத்தும்

பார்க்கவில்லை என்று….

நீ அவற்றை கடந்து சென்றபின்!

விண்மீனெல்லாம்….

வெட்கித் தலைகுனிந்து மறைந்துபோயின

உன் புன்னகை கண்டபின்!

தென்றல்…..

என்னை தீண்டுவதில்லை

உன் ஓரவிழி பார்வை கண்டபின்!

செவ்வானம்…..

ஏனோ இன்று சீக்கிரம் மறைந்துவிட்டது

உன் செவ்விதழை கண்டிருக்கக்கூடும்!

நிலவும்கூட…..

என்னை பார்த்து கேட்டது

உன்னவள்…..

என்னைவிட அழகானவளா என்று!

நான் சொன்னேன்…..

உன்னை பிறந்ததிலிருந்து

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

ஆனால்…..

என்னவளை பார்த்தபொழுதெல்லாம்

மீண்டுமொருமுறை

பிறந்துகொண்டிருக்கிறேன்!

Advertisements
Posted in: காதல்