விண்டோஸ் போய் கூகுள் குரோம் ஓஎஸ் வரும்?!! டும் டும் டும்!!!

Posted on ஜூலை 18, 2009

1


கணினி உலகின் இன்றைய ஜாம்பவான் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட்! காரணம்…மைக்ரோசாப்டின் விண்டோஸ் மற்றும் விண்டோசின் சமீபத்திய வரவான விண்டோஸ் 7 வரையிலான ஓ.எஸ் எனப்படும் செயலம் (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் என்னும் இணைய வலையோடியும் தான்.ஆனால், இன்றைய கணினி உலகத்தையும்,இணையத்தையும் ஆள்வது ஓ.எஸ் அல்ல என்பது தான் ஆச்சரியமான ஆனால் நிதர்சன உண்மை!

இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.ஓ.எஸ் எனப்படும் கணினி செயலம் என்னும் மென்பொருள் கணினியின் பயன்பாடுகள் அனைத்தும் இணையம் சம்பத்தபடாதது.அதாவது, அலுவலகம்,கல்வி,ஆராய்ச்சி,கணிதம் என பல்வேறு வேலைகள் சம்பத்தப்பட்டது.ஆனால் இன்றைய கணினி உலகில் நமது கணினியின் மென்பொருள்கள்,இடம் போன்றவற்றின் அவசியம் இன்று மிகக்குறைந்து விட்டது என்பது தான்.அதனால் இன்றைய கணினி உலகம் வாழ்வது “மேகக் கணினினீயம்” எனும் “cloud computing” என்பதில் தான்.இதைப்பற்றி என்னுடைய அடுத்த கட்டுரையில் விளக்க இருக்கிறேன்.

இன்றைய கணினி உலகை ஆள வேண்டுமென்றால் “cloud computing” எனும் “மேகக் கணினினீயம்” என்னும் தொழிட்நுட்பத்தில் வல்லுனராக இருக்க வேண்டும்.இந்த துறையில் இன்று கோலோச்சி கொண்டிருக்கும் கூகுல் தான் இன்றைய இணையத்தின் கதாநாயகன்! காரணம், கூகுல் இதுவறை இணையத்தேடலில் மட்டுமே ஆர்வம் காட்டிக்கொண்டிருந்ததது.ஆனால், இன்னும் சில மாதங்களில் கூகுளின் ஓ.எஸ்ஸான கூகுல் குரோம் ஓ.எஸ்  மைக்ரோசாப்ட்டின் வின்டோஸ் 7- ஐ தூக்கி சாப்பிட்டு இணையத்தை ஆளப்போகிறது!

எனவே இன்றைய கணினி உலகின் கூற்று இது தான்…..

அன்று……

windows-7-aurora-green-wallpaperஇன்று……

104195_matter 104195_chrome-500

Advertisements