பார்வையில்லாதவரும் வாகனம் ஓட்டலாம்!

Posted on ஜூலை 17, 2009

3


வாழ்க்கையில் கொடுப்பினை இல்லையென்றால்,சில வசதிகளை அனுபவிக்க முடியாது என்று சொல்வது வழக்கம்! அவற்றுள் ஒன்றுதான் பார்வையற்றோரின் ஆசைகளெல்லாம் நிராசையாகிப்போவது.ஆனால் இதுவரை பார்வையற்றோர் அனுபவிக்க பல வசதிகளை விஞ்ஞானிகள் செய்து கொடுத்திருப்பினும், ஒன்று மட்டும் இயலாமலிருந்தது! அது வாகனம் ஓட்டுவது தான்.

ஆனால் இனி அந்த ஆசை நிராசையல்ல! ஏனென்றால் பார்வையற்றோரும் வாகனம் ஓட்ட ஏதுவாக “வர்ஜீனியா டெக் ரோபாடிக்ஸ்” விஞ்ஞானிகள் ஒரு அதி நவீன வாகனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள்!

090715160813-large

ராடார் கருவி, ஒலி எழுப்பி மற்றும் பல அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட இந்த வாகனம் சில வருடங்களில் நமது சாலைகளிலும் காணக்கிடைக்கும் என நம்பலாம்! பார்வையற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Advertisements