“தானாபாதா”-நட்சத்திர காதலர் தினம்!

Posted on ஜூலை 7, 2009

0


“தானாபாதா”, என்பது ஒரு ஜப்பானிய திருவிழா. இது நட்சத்திர காதலர்களான “ஒரிஹிமெ(Vega) மற்றும் ஹிகோபோஷி(Altair) ஆகிய இருவரும் வருடத்தில் ஒரே ஒரு முறை(என்ன கொடுமை சரவணன் இது?!) சந்திக்க அனுமதிக்கபட்ட நாள் எனப்படுகிறது!

tanabataஅடிப்படையில் இது ஒரு சீன திருவிழாவாகும்.சீனத்தில் இது “கி ஜி” என அழைக்கப்படுகிறது.சீனத்தில் இருந்து பெறப்பட்டாலும் சப்பானியர்கள் தங்களுக்குறிய தனித்தன்மையுடன் இதை கொண்டாடுகிறார்கள்.இத்திருவிழா, “நட்சத்திர காதலர் திருவிழா”,நட்சத்திர திருவிழா”, “நட்சத்திர நெசவாளர் திருவிழா” என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இது பொதுவாக இரவு நேரங்களில் கொண்டாடப்படுகிறது.

tanabata-at-night

இந்த திருவிழாவினை பற்றிய கதைகள் பல இருப்பினும் நான் கீழே குறிப்பிட்டுள்ள கதை மிகவும் பிரபலமானது!

magpie-bridgeஇக்கதையின் நாயகி “தானாபாதா”, சொர்கக்கடவுளின் ஒரே செல்ல மகளாவாள்.இவளது அன்றாட கடமையானது, தனது தந்தைக்கு ஆடை நெய்வது.திடீரென்று ஒரு நாள் ஹிகோபோஷி என்னும் அழகான ஆடவன் ஒருவன் தனது காளையுடன் செல்வது அவள் பார்வையில் விழ, தானாபாதா, ஹிகோபோஷியின் அழகில் மயங்கி தன் மனதை பறிகொடுத்தாள். ஆனால் எல்லா தந்தையர் போலவே தானாபாதாவின் தந்தையும் தன் மகளின் காதல் தெரிந்தவுடன் உடனே வேறொரு ஆண்மகனுடன் அவளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டார்.இதையறிந்த தானாபாதா, தன் கடமையிலிருந்து தவறி காதல் சோகத்தில் ஆழ்ந்தாள்.ஹிகோபோஷியும் காதல் சோகத்தில்!

இதையறிந்த சொர்கக்கடவுள் அவர்களிருவரும் சந்திக்காமலிருக்கச்செய்ய உடனே இருவரையும் சொர்க்க நதியின் கரைகளிருந்து பிரிக்க உத்தரவிட்டார்.ஆனால் பரிந்த காதலர்களின் துயரம் பார்க்க முடியாமல் சொர்க்க கடவுள் மனமிறங்கி, ஒவ்வொரு வருடமும் ஏழாவது மாதம்,ஏழாம் நாள் இரவு மட்டும் காதலர்கள் சந்திக்க அனுமதி கொடுத்தார் என்பது கதை! அவ்வாறு வருடாவருடம் சந்திக்கும் தானாபாதாவையும்,ஹிகோபோஷியையும் வானவீதியில் காண சப்பானிய(சீன மக்களும்)மக்கள் ஒவ்வொரு வருடமும் ஏழாவது மாதம்,ஏழாம் நாள் இரவு( அதாவது இன்று!) வானவீதியில் நீல,பச்சை,சிவப்பு,மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளிரும் நட்சத்திர காதலர்களான தானாபாதா(star Vega) மற்றும் ஹிகோபோஷி யை(star Altair) கண்டுகளிப்பதே “தானாபாதா” என்னும் இத்திருவிழாவின் சிறப்பாகும்!

vega-and-altair

சரி என்ன இன்னும் சும்மா பார்த்துகிட்டே இருக்கீங்க…..வாங்க போகலாம் தானாபாதாவையும் ஹிகோபோஷியும் பார்த்துட்டு,வாழ்த்திட்டு வரலாம்.

சரி உங்கள் அனைவருக்கும் என் இனிய தானாபாதா தின வாழ்த்துக்கள்!

உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்க்கிரேன். வருகைக்கு நன்றி!

Advertisements