என்ன கொடுமை சரவணன் இது?

Posted on ஜூன் 22, 2009

2


090619121443இது ஒன்றும் ரஜினியின் சந்திரமுகியில் வசனம் பற்றிய கட்டுரை அல்ல நண்பர்களே! மனிதத்தன்மையும்,இரக்கமும் வற்றிப்போன நம்மில் பலருக்கு உலக மக்களின் வறுமையை வெளிச்சம் போட்டுக்காட்டும் இந்த செய்தியை தெரிவிக்கவும்……

மனிதத்தன்மையும்,இரக்கமும் இன்னும் மிச்சம் மீதி ஒட்டிக்கொண்டிருக்கும் நம்மில் பலரை உலக மக்களின் வறுமையை போக்க ஏதுவாக ஏற்ப்படுத்தப்பட்டுள்ள பல இணையதள முகவரிகளை இங்கே தொகுத்து,உலக மக்களின் வறுமையை போக்க உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளவுமே!

சரி விஷயத்துக்கு வருவோம்……

சமீபத்திய ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக்குழுமத்தின் (Food and Agriculture Organization (FAO) செய்தியின்படி சுமார் 102 கோடி பேர் இன்று உலகில் பசியுடன் உள்ளார்கள் என்ற மிகவும் வருத்தத்திற்க்குறிய விடயம் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.அதில் நம்மவர் பலரும் அடக்கம் என்பதும் மிகக்கொடுமை! இந்த உலக பிரச்சனைக்கு நம்மால் பல வகையில் இயன்றவரை கண்டிப்பாக உதவ முடியும்! எப்படி என்றால்……. பணவிரயம்,பொருட்ச்செலவில்லாமல் கூட என்பதுதான் நான் கூறவிரும்பும் நற்ச்செய்தி! இதில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், நமக்கும் மிகுந்த பயனுள்ள வகையில் என்பதுதான் அது!

இனி உங்களுக்கு பொறுமை இல்லை என்பது புரிகிறது.எனவே நான் கீழ்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளுக்கு தயவு செய்து சென்று உலக மக்களின் வறுமையை போக்க உதவுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

1. http://www.freerice.com/

2.http://www.thehungersite.com/

3. http://www.stopthehunger.com/

4. http://www.stophungernow.com/

Advertisements