என்னவளின்….

Posted on ஜூன் 11, 2009

0


விழிகள்…..

இமைதூரிகை எழுதி

மறைத்து வைத்த உயிரோவியம்!

பார்வை….

தென்றலும் தோற்றிட

எனைத்தீண்டும் இதமான சாரல்!

மௌனம்…..

நான் மட்டும் வாசிக்க

அவள் எழுதிய புதுக்கவிதை!

இதழ்கள்….

புன்னகை தூவானம்

எனக்காக சிந்திடும் செவ்வானம்!

புன்னகை….

பல நூறு பட்டாம்பூச்சிகள்

என்னுள்ளே பறக்கச்செய்யும் மாயம்!

இரவுகள்….

நான் மட்டும் சஞ்சரிக்கும்

ரகசிய கனவுகளின் உலகம்!

காதல்….

என்னுள் மறைந்திருந்த

நானறிந்திராத என்னை

எனக்கு காட்டிய மாயக்கண்ணாடி!

Advertisements
Posted in: காதல்