தாய்தமிழ் காக்க…..

Posted on ஜூன் 10, 2009

0


இன்பத்தமிழ் இங்குண்டு

இரவல்மொழி ஏனின்று?

பல்லாயிரமாண்டு வரலாறுண்டு

எனினும்…..

பலர் எள்ளி நகைக்க

ஆளானதேனின்று?

கற்கள்கூட இங்கே தமிழ்பேச

இன்று நம் காதலனோ……

ஆங்கிலத்தில் “ஐ லவ் யூ”!

கொஞ்சம் அச்சமாகத்தானிருக்கிறது இன்று

மெய்த்துவிடுமோ…..

“தமிழினி மெல்ல சாகும்” எனும்

பாரதியின் சாபம் என்று!

தமிழ்மொழிச் சிதைவு….

ஆங்கில மோகம்….

மேற்கத்திய கலாச்சார வழிபாடு…..

எங்கே செல்கிறது இந்த பாதை?

விடைதேடி பயனில்லை

தோழா……

விழிதனை இமைகாக்க

விளைநிலம் நீர்காக்க

தாய்தமிழ் நீ காக்க…..

கரமொன்று கொடு….. செல்லுமிடமெங்கும்…..

தமிழ் விதையொன்று நடு!!

தமிழனென்று சொல்லடா…. தலைநிமிர்ந்து நில்லடா!

வாழ்க தாய்தமிழ்.

Advertisements