தமிழுக்கு போறாக்காலம்….

Posted on ஜூன் 10, 2009

3


கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு

முந்தோன்றி சங்கம் வளர்ந்த தாய்தமிழ்

இன்று…..

மண்தோண்டி புதைக்கப்படும்

பேரவலம் கண்முன்னே நடக்கிறது!

அன்று…..

தாயநாட்டு விடுதலைக்காக போராடினார்கள்

இன்றோ…..

தாய்மொழி விடுதலைக்காக போராட

வேண்டிய அவலநிலை!

யாரிடமிருந்து?

அரைகுறை ஆங்கிலம் பேசும் அரைவேக்காடுகள்,

வெட்டி பந்தா செய்யும் வெண்ணைகள்,

ஊர்மெச்ச வேண்டி உளறும் ஊதாரிகள் என

தொடரும் பட்டியல்…..

“காலமும் கடல் அலைகளும்

யாருக்காகவும் பொறுத்திருப்பதில்லை”

காலம் கனியும் என்று

காத்திருந்தோமேயானால்…..

காணாமல் போய்விடக்கூடும் நம் தாய்மொழி!

எனவே விழித்துக்கொள்வோம்…..

தமிழ்மொழிச் சிதைவை எதிர்த்து

உறத்துச்சொல்வோம்…..வாழ்க தமிழ்!

ஒழிக (ஆங்கில)மொழிக்கலப்பு!

விரைவில் நிச்சயம் வெல்வோம்

தமிழ்மொழிச் சிதைவுக்கெதிறான போரில்!

வாழ்க தமிழ்…..ஒழிக மொழிச்சிதைவு!

Advertisements