இப்படியும் காதல்…..

Posted on ஜூன் 10, 2009

2


அவள் வரும் சத்தம்கூட

மனப்பாடம் செய்திருந்தது மனது

எதிரே அவள்

என்னுள்ளே வார்த்தைகள்

இதயம் இப்போது இரண்டுமடங்கு

வேலை செய்தது!

உதடுகள் மட்டும்…..

ஏனோ இயங்க மறுத்தன

அவள் கடந்து போனாள்…..

மனது உதடுகளையும்

உதடு மனதையும்

மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டன!

விழிகள் மட்டும்

அவள் திசையை நோக்கி

பரிதாபமாக!

Advertisements
Posted in: காதல்