பசங்க…..என் பார்வையில்!

Posted on ஜூன் 8, 2009

2


pasangaபசங்க……

அண்மையில் மலர்ந்த

சினிமா தோட்டத்து குறிஞ்சிப்பூ!

மலரும் நினைவுகளின்

புன்னகைப் பூங்கொத்து.

தவறாகிப்போன திரைப்பட இலக்கணத்தின்

அழகான பிழைத்திருத்தம்……கவிதை!

என்னை வருடங்கள் பல

பின்னோக்கி அழைத்துச்சென்று

ஆறாம் வகுப்பில் மீண்டும் பயிலச்செய்த

காலஎந்திரம்!

நம்மையும் நம்மைச்சார்ந்தவரையும்

சரியான வாழ்க்கை வாழ்கிறோமா

என பார்த்து திருத்திக்கொள்ள

பாண்டிராஜ் கொடுத்த சினிமாக்கண்ணாடி!

மொத்தத்தில்……

சமீபத்தில் நம்மை இதமாக வருடிச்சென்ற

பருத்திவீரன்,சுப்பிரமணியபுரம்,பூ,குங்குமபூவும் கொஞ்சுபுறாவும்

வரிசையில் மற்றுமோர் திரைதென்றல்!

பாண்டிராஜுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்…..!

Advertisements