என்னைப் பற்றி

அடடே….வாங்க வாங்க, வணக்கம். நல்லாயிருக்கீங்களா? முதல்ல, என்னைப் பத்தி தெரிஞ்சிக்க வந்ததுக்கு நன்றி!

நம்மளப் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் பெருசா இல்லீங்க! உயிர்தொழில்னுட்பவியலில் முதுகலைப் பட்டம், இப்போ  மருத்துவத்தில் முனைவர் பட்டப்படிப்பு “மார்பகப் புற்றுநோய் (புற்றுநோய் குறுத்தனுக்கள் பற்றியது)” ஜப்பானில்! மத்தபடி கற்றது கைம்மண்ணளவே அப்படீன்னு நினைக்கிற சராசரிகளில் நானும் ஒருத்தன்!

படிக்கிற பல விஷயங்கள்ல சில, நம்மையும் தாண்டி பொதுமக்களுக்கு பயனுள்ளதா இருக்குங்கிறதுனால,  அந்த வகைச் செய்திகள உங்க எல்லார்கூடயும் பகிர்ந்துக்கனும்னு தோனினப்போ, ஒரு வெகுஜன ஊடகம் மூலமா கருத்துப் பரிமாற்றம் செய்யலாம்னு இந்த வேர்டுப்ரஸ் வலைப்பயணத்தை தொடங்கினேன்.

மேலிருப்பான் என்னும் தலைப்பு பற்றிய விளக்கம்!

மேலிருப்பான் அப்படீங்கிற தலைப்பு பத்தி சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கான விளக்கத்தை, ஒரு நண்பரின் கேள்விக்கு பதிலாக என் 200-வது பதிவில் மறுமொழியிட்டிருந்தேன். அது உங்கள் பார்வைக்கு…..

“கடலூர் மாவட்டத்திலுள்ள, “மேலிருப்பு” என்னும் ஊர்தான் நமக்கு பிறப்பிடம். “பிறந்த ஊருக்கு பெருமை சேரு” என்பதற்கேற்றார் போல, நான் பிறந்த ஊரின் பெயருடனே என் இணைய அடையாளம் இருக்கட்டுமே என்றுதான் வலைப்பக்கத்துக்கு “மேலிருப்பான்” என்று பெயர் வைத்தேன்!”

டிஸ்கி:

இங்கே நீங்க படிக்கிற செய்திகள் எல்லாமே, நான் ஆய்வறிக்கைகளில் படித்தவையும், இணையத்தில் இன்னபிற அறிவியல் தளங்களில் படித்தவையும்தான். நான் எழுதும் பதிவுகளில் சில/பல தவறுகள் இருக்க வாய்ப்புண்டு அப்படீங்கிறதுனால, இவ்வலைப்பக்கத்தில் வெளியாகும் செய்திகள் குறித்த மேலதிக தகவல்களுக்கு, ஒவ்வொரு பதிவிலும் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகளுக்கு சென்று படித்துக்கொள்ளுமாறு வாசக நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

காப்புரிமை:

மேலிருப்பான் by Harinarayanan is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License. Based on a work at padmahari.wordpress.com.

இவ்வலைப்பக்கத்தில் வெளியாகும் எல்லா பதிவுகளின் உரிமையும் மேலிருப்பானுக்கே சொந்தமானது. பதிவுகளை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நன்றி

தொடர்புக்கு:

பதிவுகள் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும், இத்தளத்தை மேலும் பயனுள்ளதாக மாற்ற ஏதேனும் அறிவுறைகளிருப்பின் அவற்றையும், கீழ்கண்ட என் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். உங்களின் தொடர்ந்த ஆதரவையும் எனக்கு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னைத் தொடர்புகொள்ள, இந்த மின்னஞ்சல் முகவரி(கள்): harinarayananj@gmail.com, padmaharij@gmail.com

வருகைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி,

மீண்டும் பதிவுகளில் சந்திப்போம்,

அன்புடன்,

பத்மஹரி.

Advertisements
56 Responses “என்னைப் பற்றி” →
 1. வாழ்த்துக்கள், நீங்கள் பேச நினைப்பதெல்லாம் கேட்பதற்கு அடலேறு தயார். தாருங்கள் உங்கள் பதிவை கடலாக. வாழ்த்துக்கள்.

  மறுமொழி
 2. romba bhayangaramana tamizha iruku…. adhena adaleru??

  மறுமொழி
 3. It doesnt get displayed in tamil

  மறுமொழி
 4. சரியாக சொன்னீர்கள் பத்மஹரி , ஆமாம் நந்தினி அடலேறு என்பதற்கு வலிமை மிகுந்த

  சிங்கம். அது மட்டும் இல்லாம ஜல்லிகட்டுல யாருமே அடக்க முடியாத காளைக்கு

  அடலேறுன்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்க காளையா சிங்கமான்னு கேக்க கூடாது 🙂

  அது மட்டும் இல்லாம போரில் புற முதுகு காட்டாதவன் அடலேறு.

  மறுமொழி
 5. வாழ்த்துக்கள் நண்பரே.. என் வலையில் வந்த அண்மைய பதிவுகள் மூலம் உங்கள் வலைக்குள் வந்தேன். உங்களுக்கு எதிர்மரையானவள் நான். இணையத்தில் உலாவுவது இப்போது தான் ஆரம்பம். நானும் வலைபதித்தலுக்கு புதியவள் தான். உங்களின் வழிகாட்டுதல் என் வலைதளத்திற்க்கு தேவை. kapilashiwaa.wordpress.com

  மறுமொழி
  • வணக்கம் கபிலாசிவா(உச்சரிப்பு சரிதானே?).இந்த கத்துக்குட்டியிடம் வழிகாட்டுதல் எதிர்பார்க்கும் இணையத்தோழியே வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! கவலை வேண்டாம் நானும் வலைப்பதிவுக்கு புதியவனே! என்னால் இயன்றவரை கண்டிப்பாக உங்களுக்கு உதவ முயற்ச்சிக்கிறேன்.ஒரு சின்ன யோசனை, அதாவது உங்கள் வலைப்பக்கத்தில் இயன்றவரை தமிழிலேயே எழுத முயற்ச்சியுங்கள்! மீண்டும் வாருங்கள்.உங்கள் விமர்சனங்களை தாருங்கள்.நன்றி!

   மறுமொழி
 6. நிச்சயமாக நண்பரே. இதுவரை நான் ஆங்கிலம் பயன்படுத்தவில்லை. இனியும் அப்படிதான்.
  அப்புறம் அது கபிலசிவா என்று வாசியுங்கள். நன்றி மீண்டும் வருகிறேன்.

  மறுமொழி
  • மிக்க மகிழ்ச்சி கபிலசிவா! அப்புறம் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், என் பெயர் பத்மஹரி ஆகவே நீங்கள் கூட நண்பரே என்று சொல்வதற்க்கு பதிலாக பத்மஹரி என்று அழைக்கலாமே! வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் வலைப்பக்கத்திற்கும்.தமிழ் மட்டுமே நீங்கள் பயன்படுத்துவது கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி

   மறுமொழி
 7. ALL THE BEST

  மறுமொழி
  • மிக்க நன்றி கார்த்திகேயன்.ஊக்கமளிக்கும் வார்த்தைகள்.தமிழிலிருந்தால் இன்னும் சந்தோஷம்.தமிழ் எழுதி எனும் மென்பொருளைப் பயன்படுத்த முயற்ச்சியுங்கள் அடுத்த முறை.வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!

   மறுமொழி
 8. nambikkai enum naaikutti padiththen
  unmaiyil nambikkai valarkkum katturai paarattukkal.

  மறுமொழி
  • பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பாரதிமோஹன்.மிகவும் நம்பிக்கையூட்டும் உண்மை நிகழ்வுதான் இந்தக் கட்டுரை.வருகைக்கு நன்றி.மீண்டும் வருக!

   மறுமொழி
 9. வாழ்த்துக்கள்..

  மறுமொழி
 10. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்பரசு.உங்கள் ஆதரவு தொடரட்டும்! நன்றி.

  மறுமொழி
 11. thanx for visiting my site and encouraging me.
  pls also visit my latest post and enter your views. As a person from immunology department your comments would be valuable.
  http://vaarththai.wordpress.com

  மறுமொழி
 12. you are welcome soundr! By the way, how do you know that Iam from immunology department?? Anyways, I will try to read your post and let you know.

  What do you do? student?? As a matter of fact I like your style of writing! Good luck dude.

  Keep visiting me too….thanks for the visit and comment!

  மறுமொழி
 13. Thanks your Net News. Best Regards… Take care…

  மறுமொழி
 14. முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி ஃபிரோவ்ஸ்! உங்கள் ஊக்கம் என் ஆக்கங்களில் ப்ரதிபலிக்கும் என நம்புகிறேன்.

  உங்கள் ஆதரவு தொடரட்டும். நன்றி!

  மறுமொழி
 15. neengalum namma ooru pakkamthan

  மறுமொழி
 16. அப்படியா பாலாஜி? சொல்லவே இல்ல?! ரொம்ப சந்தோஷம் பாலாஜி.ஆமா எந்த ஊரு நீங்க?

  மறுமொழி
 17. virudhachalam than.ippo DUBAI cityla work.DEC;08.2009 Oorukku sssssssssssssssssssssssssssssssssssssssss

  மறுமொழி
 18. விருத்தாச்சலமா நீங்க….சந்தோஷம்! ஊருக்குப் போறீங்க, நல்லா ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க!

  மறுமொழி

 19. யூர்கன் க்ருகியர்

  மார்ச் 1, 2010

  உங்கள மாதிரி ஆளுங்க தான் பதிவுலகத்திற்கு தேவை …
  ஆதரவை அள்ளி வழங்கிட வேண்டியதுதான் ..!!

  மறுமொழி
 20. யூர்கன், இது ஒன்னும் வஞ்சப்புகழ்ச்சி இல்லியே?! எப்படியோ, இதை ஒரு பெரிய பக்கபலமாக எடுத்துக்கொள்கிறேன் நான்! ஊக்கத்துக்கு மிக்க நன்றிங்க!

  மறுமொழி
 21. pls……visit this buminathan’s blog……if u have time

  http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2010/03/sorkkamumnaragamum.html

  மறுமொழி
  • வாங்க பூமிநாதன்,
   கண்டிப்பா முயற்ச்சி பண்றேன். மேலிருப்பான் பதிவுகளைப் பற்றிய உங்க கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்!

   முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி!

   மறுமொழி
 22. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  You can add the vote button on you blog:

  http://thalaivan.com/page.php?page=blogger

  THANKS

  Regards,
  Thalaivan Team
  thalaivaninfo@gmail.com

  மறுமொழி
  • வாங்க தல,
   வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி. ஆனா, ஒரே ஒரு சின்ன பிரச்சினை. உங்க தளத்துல இடுகைகள இணைக்க முற்படும்போது, மிகவும் குறைந்த வார்த்தைகளையே முன்னுரையாக இட வேண்டியுள்ளது. இது மிக கடினமாக இருக்கிறத்ய். அதை கொஞ்சம் என்னன்னு பார்த்தீங்கன்னா, இணைக்கறதுக்கு இன்னும் சவுகரியமா இருக்கும். நன்றி!

   மறுமொழி
 23. மேலிருப்பானின் மேலான பணிக்கு இந்த நுனிப்புல் நுகர்வோனின்
  செம பாராட்டுகள். சரக்கு மட்டும்தான் ஜோர் என்லதில்லை. ஆளும்
  தூக்கலாய்த்தான் உள்ளீர்.

  மறுமொழி
  • வாங்க தணிகாசலம்,
   //மேலிருப்பானின் மேலான பணிக்கு இந்த நுனிப்புல் நுகர்வோனின்
   செம பாராட்டுகள். சரக்கு மட்டும்தான் ஜோர் என்லதில்லை. ஆளும்
   தூக்கலாய்த்தான் உள்ளீர்.//
   உங்க வெளிப்படையான பேச்சுக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க நண்பரே! மேலிருப்பானின் எழுத்தை மட்டுமில்லாம, என் தோற்றத்தையும் விமர்சித்த முதல் வாசகர் நீங்கதான் (இனிமே நான் தினமும் கண்ணாடிய ரெண்டு தரம் அதிகமா பார்ப்பேன்னு நெனக்கிறேன் 😉 )

   உங்கள மாதிரியேதான் நானும் நுனிப்புல் நுகர்வோன்தான். அதனால கவலையே படாதீங்க, ரெண்டு பேரும் சேர்ந்தே மேலிருப்பான் தளத்தில் அறிவியல் படிப்போம். என்ன சரிதானுங்களே?! உங்க ஆதரவு தொடரட்டும். மற்றுமோர் பதிவில் சந்திப்போம்! நன்றி

   மறுமொழி
 24. enakku thoninathai en blogil ezhithi irukken romba naal poittiruntha ninaivugal…padichittu sollunga…neriaya padochen unga blogil …will comment tomorrow bye

  மறுமொழி
  • உங்க வலைப்பக்கம் கொஞ்சம் படிச்சேன். நல்லா சிரிச்சேன். அதுக்கப்புறமாதான் உங்களுக்கு மறுமொழி எழுதினேன். உங்க எல்லா இடுகையையும் படிச்சிட்டு என்னோட கருத்தைச் சொல்றேன். என்னோட இடுகைகளுக்கான மறுமொழியை பொறுமையா எழுதுங்க, ஒன்னும் அவசரமில்ல சரிங்களா 🙂

   மறுமொழி
 25. I have mailed you to your mail IDs which you gave given above..please see it. thanks

  மறுமொழி
 26. அன்பருக்கு,

  தமிழில் ஏறத்தாழ ஏழாயிரம் வலைப்பக்கங்கள் உள்ளன என்று அறிகிறேன். ஆயினும் அறிவியலை விளக்கிச் சொல்லும் வலைப்பக்கங்கள் மிகக் குறைவு என்பதனை நாம் அறிவோம்.

  குறைவை ஓரளவேனும் நிறைவு செய்யும் முயற்சி உங்கள் முயற்சி; முயற்சி வெல்க!

  வாழ்க; வளர்க.

  அன்புடன்
  அ. நம்பி
  http://nanavuhal.wordpress.com/

  மறுமொழி
  • வாங்க நம்பி அய்யா,
   அழைப்பை ஏற்று வந்தமைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. இனியும் உங்களின் வருகையையும், கருத்துக்களையும் எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

   முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்!

   மறுமொழி
 27. ஹரி, பதிவெல்லாம் சூப்பர். வாழ்த்துக்கள். I think ‘தொழில்நுட்பம்’ is spelled like this, pls check if its right.

  மறுமொழி
  • மிக்க நன்றி ரூபன்! உண்மைதான், எழுத்துப்பிழையை நான் கவனிக்கலை. இப்போ மாத்திட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்!

   மறுமொழி

 28. Rameshkumar

  ஜூலை 25, 2010

  வணக்கம், திரு, பத்மஹரி அவர்களே,
  ஜெகதீஸ்வரன் அவர்களின் வலைப்பக்கத்தில் தங்களது
  இணய தளமுகவரியை கண்டு தங்களது பற்றி அரிந்தேன் மகிழ்ச்சி.
  என்னக்கு ஒரு கேள்வி எலுகிறது!
  ஏன் மர்மம் என்ற தலைப்பில்,
  உளவியல் மற்றும் பகுத்தரிவு ஆகியவை இருப்பதன் காரணம் என்ன ?
  உளநோய் மருத்துவர்
  சிக்மண்ட் பிராய்ட் பற்றி உங்களுக்கு தேரியுமா?

  மறுமொழி
  • வாங்க ரமேஷ்குமார்,

   //சிக்மண்ட் பிராய்ட் பற்றி உங்களுக்கு தேரியுமா?//
   பெருசா ஒன்னுந்தெரியாதுங்க…..
   சிக்மண்ட் ஃப்ராய்டு ஒரு நரம்பியல் விஞ்ஞானி. மனநல மருத்துவத்துல psychoanalysis என்னும் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தி, கையாண்டு மனநல சிகிச்சையை முதன் முதலாக அளித்தவர். கனவுகள் பற்றிய அவரது ஆய்வுகள் மிகவும் பிரபலமானவை. மனசாட்ச்சி குறித்த அவரது ஆய்வுகள் மிகவும் பேசப்பட்டவை! என்னுடைய இளங்கலையின்போது, Education psychology என்னும் பாடப்பிரிவின்கீழ் திரு.சிக்மண்ட் பிராய்டு அவர்களின் கோட்பாடுகளான Id, Ego and Super ego ஆகியவை குறித்து விளக்கமாக படித்ததுண்டு! மேலும் அவரின் பல உளவியல், செக்ஸ் உறவுகள் குறித்த அவரது கோட்பாடுகள் பல விவாதத்துக்கும், சர்ச்சைக்கும் உள்ளானதாக படித்ததுண்டு……இவ்ளோதானுங்க என்னோட சிற்றறிவுக்கு எட்டியது!

   சிக்மண்ட ஃப்ராய்டு பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதச் சொன்னீங்கன்னா, நானும் நம்ம வாசகர்களும் தெரிஞ்சிக்க வசதியாயிருக்கும்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மேலிருப்பானின் பதிவுகள் குறித்த உங்க கருத்துக்களையும் பதிவு செய்யலாமே….! தொடர்ந்தும் இணைந்திருங்கள், மீண்டும் சந்திப்போம்!

   மறுமொழி

 29. Rameshkumar

  ஜூலை 27, 2010

  இந்த கேள்விக்கு பதில்?
  ஏன் மர்மம் என்ற தலைப்பில்,
  உளவியல் மற்றும் பகுத்தரிவு ஆகியவை இருப்பதன் காரணம் என்ன ?

  மறுமொழி
  • ஆமா….நீங்க என்ன பள்ளிக்கூடத்துல வாத்தியாரா இருக்கீங்களா?
   மர்மம் அப்படீங்கிற தலைப்புக்குக்கீழே உளவியல் மற்றும் பகுத்தறிவு ஆகிய பதிவுகளை வச்சதுக்கு காரணம் பெருசா எதுவுமில்லை. உளவியல் சார்ந்த விஷயங்களும், பகுத்து அறியும்வரை பகுத்தறிவு சார்ந்த கேள்விகளும் அடிப்படையிலே மர்மமாவேதான் இருக்குங்கிறது என்னோட புரிதல், அதனாலதான்!
   (ஒரு சின்ன சந்தேகம், இந்த தளத்துல இருக்குற மத்த விஷயங்கள் பத்தி (ஆக்கப்பூர்வமான) ஒரு கேள்வி கேட்க உங்களுக்கு விருப்பம் இல்லையா? இல்ல கேட்கக்கூடாதா?)

   அது சரி, சிக்மண்ட் பிராய்டு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே, ஏன்?

   மறுமொழி
 30. நண்பர் மேலிருப்பானுக்கு வணக்கம். ஸ்டெம் செல் பற்றிய ஒரு செய்தி கோவையை சில மாதங்களுக்கு முன் கலைஞர் செய்திகளில் ஒரு செய்திகோவையாக பார்த்தேன், ஆச்சர்யமான விசயமாக தான் இருந்தது, உங்களது ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  மறுமொழி
  • வாங்க ஆதித்த கரிகாலன்,
   முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! என் பிற பதிவுகள் பற்றிய உங்களின் கருத்த அறிய ஆவல். அடிக்கடி வலைப்பக்கம் வாங்க. மீண்டும் சந்திப்போம்!

   மறுமொழி
 31. eppo oorukku?

  மறுமொழி

 32. vimarisanam - kavirimainthan

  மே 19, 2011

  வாழ்த்துக்கள் நண்பரே,

  நீண்ட நாட்கள் ஆயிற்று.
  ஏதேதோ பண்ணிக் கொண்டிருந்தேன் !
  இன்று ஆனந்த விகடன் இதழில்
  உங்கள் வலைத்தளத்தைப் பற்றிய செய்தியை
  பார்த்ததும் அடடா மறந்தே போனோமே
  என்று தோன்றியது.

  விகடன் அறிமுகம் உங்களை இன்னும்
  அதிக பரப்பளவிற்கு கொண்டு செல்லும்.

  மீண்டும் ஒரு முறை தங்கள் சிறப்பான பணி
  தொடர வாழ்த்துக்கள்.

  ஆமாம் -இந்தியாவிற்கு வந்து விட்டீர்களா ?
  இப்போது எங்கே இருக்கிறீர்கள் ?

  -அன்புடன்
  காவிரிமைந்தன்

  மறுமொழி
  • அய்யா, தகவலுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   வலை நண்பர் வெயிலானும் தொடர்பு அனுப்பியிருந்தார்.

   கண்டபின்பு ஒரு பெரிய ஆறுதல். என்னுடைய ஒன்றரை ஆண்டுகால உழைப்பு, விழலுக்கு இறைத்த நீராய் போய்விடுமோ என்றிருந்தேன். விகடனின் இந்த அங்கீகாரமும், அறிமுகமும் இவ்வலைக்கான தகுதியை மீண்டும் ஒருமுறை அதிகப்படுத்தியிருப்பதோடு, நல்ல பல விஷயங்கள் வெகுஜன மக்களைப்போய்ச்சேர உதவும் என்றே நம்புகிறேன். இத்தருணத்தில் விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்க கடமைப்பட்டுள்ளேன்.

   இந்தியா சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிவிட்டேன் அய்யா. முனைவர் பட்ட ஆய்வு முடிய இன்னும் 4 மாதங்கள் மீதமிருக்கின்றன. அதன்பின்னர் இந்தியா திரும்புவேன். இந்தியா வந்தபோது உங்களை தொடர்புகொண்டு சந்திக்க எண்ணினேன். நேரமின்மையால் அது முடியாமற்போனது. அடுத்த முறை கண்டிப்பாக சந்திக்க விரும்புகிறேன். தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லையெனில்……

   தங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா.

   அன்புடன்,
   பத்மஹரி.

   மறுமொழி
 33. வணக்கம் நண்பர் பத்மஹரி,

  செய்திகள் அறிந்தேன்.
  நேரம் வரும்போது அவசியம் நேரில்
  சந்திப்போம்.
  தொடர்ந்து அவ்வப்போது வலைத்தளத்தில்
  சந்தித்துக் கொண்டிருப்போம் !

  உங்கள் பணி தொடர்ந்து சிறக்க –

  வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

  மறுமொழி
  • அய்யா,
   மிக்க நன்றி. கண்டிப்பாக வலைத்தளத்தில்
   சந்தித்துக் கொண்டிருப்போம்.

   நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது சந்திப்போம்……

   வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அய்யா,

   நட்புடன்,
   பத்மஹரி.

   மறுமொழி
 34. dear sir
  please visit our website
  my website (www.mgptcaa.com)

  மறுமொழி
  • பார்த்தேன். ஆனா இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கிறது போலிருக்கே உங்க வலைத்தளம்???

   மறுமொழி

 35. S.Ranjeeth Kumar

  ஓகஸ்ட் 14, 2012

  hi hari i am ranjeeth kumar studied at ST.Pauls 1999 passout hope remember it seems gud about ur blog continue ur service

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: