எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. “ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சுத்தான் வேட்டை நாயா ஆக முடியுமுன்னு”, அது மாதிரி நானும் இந்த வலைப்பதிவை கவிதையில ஆரம்பிச்சு, அறிவியல எழுத முயற்சி பண்ணி அப்புறம் கொஞ்ச நாளைக்கு சினிமாவுக்கு தாவி, கடைசியில ஒருவழியா இன்னிக்கு இருக்குற அறிவியல் பிரதானமான ஒரு கலவை வலைத்தளத்துல வந்து நின்னுட்டேன்!
நின்னு கொஞ்சம் திரும்பி பார்த்தா, அட இது நம்ம 300-வது பதிவு! பொதுவா போரடிக்கிற அறிவியல பிரதானமா, ஆனா கொஞ்சம் சுவாரசியமா எழுதி, உங்க எல்லாரோட புண்ணியத்துல இன்னிக்கு 300-வது பதிவு வரைக்கும் வந்து சேர்ந்துட்டேன். அதுக்காக உங்க எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றிங்க!!
ஆனா என்ன, இந்த வலையை தொடர்ந்து படிக்கிற உங்கள்ல சிலருக்குத்தான், “மேலிருப்பான் வலைப்பதிவுகள் தொடர்ந்து வந்தா நல்லாயிருக்குமே” அப்படீன்னு தோனும்?! உண்மைதாங்க, அதுக்கு நீங்க என்னைக் கோவிச்சுக்கிறதுக்கு பதிலா என்னோட (ஆய்வுத்) துறையைத்தான் கோவிச்சுக்கனும்.
சரி அத விடுங்க, நாம இன்றைய பதிவுல என்னத்தப்பத்தி பார்க்கப்போறோம்னு பார்ப்போம் வாங்க……
மேலிருப்பான்ல கடந்த மே.21, 2010 ஆம் தேதி ”எய்ட்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!” அப்படீன்னு ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனா, அன்றைய நிலைமையில அந்த சிகிச்சையை மிக கடினமான, ஆபத்தான மற்றும் விலையுயர்ந்ததாகவும், ஒருத்தருக்கு வெற்றிகரமாக முடிஞ்ச இந்த சிகிச்சை மத்தவங்களுக்கும் சரிவருமா அப்படீங்கிற ஒரு சந்தேகத்தையும் குறிப்பிட்டு எழுத வேண்டியிருந்தது!
ஆனா, அந்தப் பதிவுல இருந்த சில சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி இருக்கிறது, உலக எய்ட்ஸ் தினமான கடந்த 12.1.2011 ஆம் தேதி வெளியான ஒரு மருத்துவச் செய்தி! அது என்ன செய்தி, அதுல என்ன பெரிய விசேஷம், அதனால மருத்துவ உலகத்துக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு என்ன நன்மை அப்படீங்கிறதயெல்லாம் உங்ககிட்ட சுருக்கமா சொல்லத்தான் இந்தப் பதிவு. வாங்க அது என்னன்னு கொஞ்சம் சாவகாசமா பார்ப்போம்……
செய்தி: உலக எய்ட்ஸ் தினத்தன்று ஒரு மருத்துவ அதிசயம்! “பெர்லின் பேஷன்ட்” என்றழைக்கப்படும் டைமொதி ரே ப்ரௌன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு, லியூக்கீமியா புற்று நோயை குணப்படுத்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது மருத்துவர்கள், பிரபல மருத்துவ வார இதழான ப்ளட் (ரத்தம்)-ல் அந்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்த சிகிச்சையின்மூலம் எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு கிடைத்துவிட்டது/எய்ட்ஸ் நோயை குணப்படுத்திவிட முடியும்” என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள்!
கூடுதல் சுவாரசியம்: கடந்த மாதம் பிரபல டைம் இதழின், 2010-க்கான டாப் 10 மருத்துவ சாதனைகளில் “எய்ட்ஸ் வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொண்ட ஆரோக்கியமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்தானது சுமார் 73% குறைவு” என்னும் ஒரு எய்ட்ஸ் ஆய்வையும் (கண்டுபிடிப்பை) சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!
“மரபனுமாற்ற ஸ்டெம் செல்”லும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையும்!
சிகிச்சை முறை: சி.டி 4 டி செல்கள் (CD4 T cells) என்னும், ஒருவகை நோய் எதிர்ப்பு அனுக்களின் படலங்களிலுள்ள சி.சி.ஆர் 5 (CCR5) என்னும் புரதத்தின் வழியாகவே எய்ட்ஸ் கிருமிகளான HIV நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து இறுதியில் நோயாளிகளைக் கொன்றுவிடுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சையில், இந்த புரதம் இல்லாத/நீக்கப்பட்ட (டெல்டா 32, Delta 32) ஸ்டெம் செல்களை டைமொதி ரே ப்ரௌன் என்னும் எய்ட்ஸ் நோயாளிக்கு செலுத்தி, எய்ட்ஸ் நோய் கிருமிகள் பெருகுவதை தடுத்து, எய்ட்ஸ் நோய் குணமாக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்தபின் இரண்டு வருடம் கழித்த பிறகும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் மீண்டும் வளராமல் இருப்பதற்கான காரணம், நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் தொடர்ந்து வளர்ந்து மேலும் லட்சக்கணக்கான HIV எதிர்ப்பு டி செல்களை உருவாக்கி, எய்ட்ஸ் நோயிலிருந்து பூரண குணமடையச் செய்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஊர்ஜிதப்பட்டுள்ளது!!
டைமொதி ப்ரௌனுக்கு செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் வெற்றியானது, இன்னும் பாதுகாப்பாகவும், தரமானதாகவும் மெறுகேற்றப்பட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலகின் சுமார் 33 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்க உதவக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்திருப்பது மறுக்க முடியாத உண்மையே!!
தொடர்புடைய சில பதிவுகள்:
















radhakrishnan gurusamy
ஜனவரி 20, 2011
Oru nalla pathivai padiththa thirupthi erppattathu.Nandri
padmahari
ஜனவரி 23, 2011
ரொம்ப நன்றிங்க, உங்கள் மற்மொழி மூலம் எனக்கும் அந்த உணர்வே!
jmms
ஜனவரி 20, 2011
மகிழ்வான தகவலை விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றிங்க
padmahari
ஜனவரி 23, 2011
நன்றிங்க, வருகைக்கும் கருத்துக்கும்!
Abraham Lingan
ஜனவரி 21, 2011
Very nice article, I am also from Cuddalore district doing research in Pondicherry University.
THank U sir
padmahari
ஜனவரி 23, 2011
Welcome Abraham lingan,
Thanks for the first visit and comment. Nice to know that you are from cuddalore, Happy blogging Abraham! Keep encouraging me….
Dakkalti
ஜனவரி 21, 2011
Asusual interesting post thala…
padmahari
ஜனவரி 23, 2011
Thanks a lot Dakkalti….!
kousalya
ஜனவரி 21, 2011
300 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் ஹரி.
சந்தோசமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிவிற்கு நீங்கள் மேற்கொள்ளும் பிரயத்தனம் பெரிது என்றே எனக்கு தோன்றும். இருந்தும் புதிய செய்திகளை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கணும் என்று அழகிய தமிழில் நீங்கள் எழுதும் விழிப்புணர்வு பதிவுகள் பாராட்டப்பட வேண்டிய ஓன்று.
இந்த பதிவு ஆச்சரியமாக இருக்கிறது..நல்ல விஷயம் ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள். மனிதர்களால் எல்லாம் முடியும் என்பதற்கு சரியான உதாரணம்…இந்த ஆய்வின் மூலம் பாதிக்கப்பட்ட பலருக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
நன்றி மீண்டும் வாழ்த்துகள்…
padmahari
ஜனவரி 23, 2011
ரொம்ப நன்றிங்க! உங்க வருகையும், ஆதரவும், ஊக்கமும் பெரிய உந்துசக்தி எனக்கு!
//சந்தோசமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிவிற்கு நீங்கள் மேற்கொள்ளும் பிரயத்தனம் பெரிது என்றே எனக்கு தோன்றும். இருந்தும் புதிய செய்திகளை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கணும் என்று அழகிய தமிழில் நீங்கள் எழுதும் விழிப்புணர்வு பதிவுகள் பாராட்டப்பட வேண்டிய ஓன்று. //
உங்கள மாதிரியான நண்பர்களின் ஊக்கமே, என்னுடைய பிரயத்தனத்துக்கு மூலதனம்! இந்த வலையின் மூலம் “தமிழ் மக்களுக்கு தமிழிலேயே அறிவியலை தரவேண்டும் வேண்டும், அதுவும் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட வேண்டும்” என்பதே என்னுடைய ஆசை! அதை இயன்றவரை முயற்சி செய்து வருகிறேன். அதில் நிறைகுறைகள் இருப்பினும், வாசகர்களாகிய நீங்கள் தரும் ஊக்கமே மேலிருப்பானுடைய பயணத்துக்கு துணை நிற்கிறது!
மீண்டும் நன்றிங்க, அடிக்கடி வலைப்பக்கம் வாங்க…..
callezee
ஜனவரி 21, 2011
This news for very exciting for me……..
padmahari
ஜனவரி 23, 2011
Nice to know
ஜெகதீஸ்வரன்
ஜனவரி 25, 2011
300 வது பதிவா!…
வாழ்த்துகள்,..
padmahari
ஜனவரி 26, 2011
மிக்க நன்றி ஜெகதீஸ்வரன்!
ஜெகதீஸ்வரன்
ஜனவரி 25, 2011
ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், எய்ட்ஸீன்னு ஒன்னு இருக்கிறதாலத்தான் நம்ம பயலுக அடக்கி வாசிக்கிறாங்க!…
இருந்தாலும் ஒன்னுமே தெரியாத குழந்தைங்களெல்லாம் பொழைச்சுக்கும் என்பது சந்தோசம்.
padmahari
ஜனவரி 26, 2011
ரெண்டுமே உண்மைதான்!
அப்பாதுரை
ஜனவரி 28, 2011
வாழ்த்துக்கள் – முன்னூறு! மலைப்பாக இருக்கிறது!
padmahari
ஜனவரி 31, 2011
ரொம்ப நன்றிங்க. இந்த முன்னூறுல பல (அறிவியல்லாத) குப்பைகளும் இருக்குங்க!
படைப்பாளி
பெப்ரவரி 4, 2011
சிறப்பான தகவல்…காலதாமதமானாலும் 300 வது பதிவுக்கு ,மேலும் எழுதவும் எனது வாழ்த்துகள்..
padmahari
பெப்ரவரி 5, 2011
மிக்க நன்றி நண்பா…..
Gopijatu
நவம்பர் 5, 2011
migavum
Gopinath
நவம்பர் 5, 2011
It’s very interesting sir.
But i don’t know about stem cell.
Can you send the detail of this to my email…?
Pls….Pls…