இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:
பணியிடத்தில் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து விடுதலைபெற ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு சிறு நடைபழகுங்கள். இதையே அன்றாட பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். மேலும் மூச்சுப்பயிற்ச்சியும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்!
சரியா மூச்சுவிடகூட நேரமில்லாத அளவுக்கு, வேலை வேலை வேலைன்னு ஓடிக்கிட்டு இருக்குற நாம எல்லாருமே ஒரு விஷயத்துல ஒத்துப்போவோம். அது என்னன்னா, குடும்பத்தலைவர்களுக்கு வேலை, குடும்பச் சுமை, குழந்தைகளின் கல்வி இப்படி பலவகையான பொறுப்புகளை சுமந்து, எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவங்கவங்களோட ஆரோக்கியத்தை பத்தி பெருசா அலட்டிக்கமாட்டாங்க.
மாணவர்களைப் பொறுத்தவரை, எப்படியாவது படிச்சு வாழ்க்கையில முன்னேறனும் அப்படீங்கிற ஒரு லட்சியவெறியோட கல்வியில ஈடுபடுறதுனால, ஆரோக்கியம் பத்தி பெருசா கவலைப்படமாட்டாங்க. ஏன்னா, இந்த வயசுல நமக்கு என்ன ஆயிடப்போகுது, வயசான காலத்துலதான பிரச்சினை அப்போ பார்த்துக்கலாம் அப்படீங்கிற ஒரு அலட்சியப்போக்கு!
இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் நாம், வேகமான இந்த வாழ்க்கையில தினமும் இழந்துபோகிற ஒரு முக்கியமான விஷயம் உறக்கம்! வார நாட்கள்ல திங்கள் தொடங்கி வெள்ளிவரை சரியான உறக்கமின்மை அப்படீங்கிறது ஒரு தொடர்கதையாகவே மாறியிருக்கும் நம்மில் பலருக்கு! தினமும் ஏற்படுற இந்த உறக்க இழப்பு பத்தி அதிகமா அலட்டிக்காத சிலர் நம்மிடையே இருந்தாலும், பலரோட நிலைப்பாடு என்னன்னா, “சரி வார நாட்கள்ல தூங்க முடியலைன்னா என்ன, அதான் வாரக்கடைசியில ரெண்டு நாள் விடுமுறை இருக்குதே அப்போ ஒரு 2 மணி நேரமோ இல்லைன்னா ஒரு 4 மணி நேரமோ அதிகமா தூங்கினா சரியாப்போயிடப்போகுது” என்பதுதான்!
ஆனா, உறக்க இழப்பு பத்தின நம்மோட இந்த கணிப்பு தவறானது என்று சொல்கிறது அமெரிக்காவின் பென்சிவேனியா பல்கலைக்கழக மருத்துவத்துறையின் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ் அவர்களின் சமீபத்திய உறக்கம் தொடர்பான ஒரு ஆய்வு! இந்த ஆய்வில் எட்டப்பட்ட முடிவுகள், முன்வைக்கப்படும் கருத்துக்கள், பரிந்துரைகள் என்னென்ன, நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க நம் அன்றாட உறக்கம் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்களைத்தான் நாம இந்தப் பதிவுல மேற்கொண்டு பார்க்கப்போகிறோம்…..
தூக்கக்கடனும் வாரக்கடைசி தூக்கமும்!
பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தினசரி உறக்க அளவு 6 முதல் 8 மணி நேரம் வரை! ஆனால், சராசரியாக நம்மில் பலர் தினமும் பணி முடிந்து இரவு உறங்கச்செல்லும் நேரம் குறைந்தது 12.30 என்று வைத்துக்கொள்வோம். பின்பு அடுத்த நாள் பணிக்குச் செல்ல வேண்டிய நேரம் 8.30 அல்லது 9 என்றால், நாம் உறக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் 6 அல்லது 7 மணி என்று வைத்துக்கொள்வோம். ஆக, தினசரி நாம் 5.30 முதல் 6.30 மணி நேரம்வரை உறங்குகிறோம். இது பரவாயில்லை!
ஆனால், சிலர் இரவு 1 மணி அல்லது 2 மணிக்கு உறங்கச் சென்று காலை 5 அல்லது 6 மணிக்கு எழுவதும் உண்டு. இப்படியான உறங்கும் பழக்கம் இருப்போருக்கு தினசரி உறக்கம் வெறும் 4 மணி நேரமே! இது ஆரோக்கியமான உறக்க நேரத்தைவிட 2 முதல் 4 மணி நேரம் குறைவு. இப்படியே வாரம் 5 நாட்கள் தூங்கினால், தினமும் 4 மணி நேரம் சேர்ந்து மொத்தம் 10 முதல் 20 மணி நேர உறக்க இழப்பு (Sleep deprivation) சேர்ந்துவிடுகிறது. இத்தகைய உறக்க இழப்பு சேர்வதையே உறக்கக் கடன்/தூக்கக் கடன் (sleep debt) என்கிறார்கள். இந்தக் கடனை அடைக்க வாரக்கடைசியில் ஒரு நாள் இரவு 10 மணிக்கு உறங்கி, அடுத்த நாள் காலை 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ எழுந்தால் போதும் என்பதுபோன்ற ஒரு பொதுவான கருத்து இதுவரை நிலவி வந்தது.
ஆனால், இது போன்று தூக்கக் கடனை வாரக்கடைசியில் அடைத்துவிட்டாலும், பணியில் கவனக்குறைவு மற்றும் செயல்திறன் குறைவு ஆகிய பிரச்சினைகளை மக்கள் சந்திக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது! இந்த ஆய்வு முடிவானது முந்தைய சில ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஆய்வாளர் டேவிட்!
சமீபத்திய ஆய்வின்படி, அன்றாட வாழ்க்கையில் கவனக்குறைவு, செயந்திறன்குறைவு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க வாரக்கடைசியில் தூங்கும் 10 மணி நேரம் உறக்கம் போதாது என்றும், மேலும் பல இரவுகள் அதே போல உறங்க வேண்டியது அவசியம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தூக்கக்கடனை அடைக்காமல் அதிகரித்துக்கொண்டே போவதால் பணியில் கவனக்குறைவு மற்றும் வேறு சில தவறுகளையும் இழைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவருகிறது என்கிறார் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ்!
சராசரியாக 30 வயதான, ஆரோக்கியமான சுமார் 159 பேரை ஆய்வுக்குட்படுத்திய இந்த ஆய்வு, இதுவரை சோதனைக்கூடத்திலேயே வைத்து மேற்கொள்ளப்பட்ட “உறக்கக் கட்டுப்பாடு” ஆய்வுகளிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது!
உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்தல் அவசியம்!
பல்வேறு உடல் பாகங்களைக் கொண்ட நம் உடலியக்கமானது, சூரிய ஒளி தொடங்கும் பகலில் விழித்து இருப்பதற்க்கும், சூரிய ஒளி மறைந்துவிடும் இரவில் உறங்குவதற்க்குமே இயற்க்கையால் வடிவமைக்கப்பட்டது. சூரிய ஒளியை மையமாக/அடிப்படையாகக் கொண்டு, பகல் இரவு நேரத்திற்க்கேற்ப இயங்கும் ஒரு கடிகாரமான உயிரியல் கடிகாரத்தின் (Biological clock) இயக்கத்தின் அடிப்படையிலேயே நம் உடலியக்கம் நிகழ்கிறது. இதற்க்கு பகல்-இரவுக்கு அடிப்படையான சூரிய ஒளி தொடங்கி மறையும் ஒரு சுழற்ச்சியே (circadian rhythm) அடிப்படைக் காரணம்.
ஆக, 5 வார நாட்கள் தொடர்ந்து 4 மணி நேரம்வரை மட்டுமே உறங்கிவிட்டு, திடீரென்று ஒரு நாள் அதிக வேலை வந்துவிட, சரி இன்று இரவு உறங்காமலேயே இந்தப் பணியை முடித்துவிட்டு நாளை முழுதும் உறங்கிவிடுவோம் என்று சில சமயம் இரவுமுழுக்க உறங்காமல் விழித்திருப்பதால், ஒருவரின் ‘கவனம்’ குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது அல்லது சம்பந்தப்பட்டவர் கவனச்சிதறல்/கவனக்குறைவு பிரச்சினையால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கிறார் டேவிட்!
அதனால், இயன்றவரை தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதை பழக்கப்படுத்திக்கொண்டு, அடிக்கடி இரவு முழுக்க விழித்திருக்கும் பழக்கத்தை தவிர்த்தல் நலம் என்கிறார் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ்! சரி, இந்த ஆய்வு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
தொடர்புடைய சில பதிவுகள்:
















எஸ். கே
ஆகஸ்ட் 20, 2010
நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் உண்டு எனவும் அதற்கு ஆதாரமாக அப்துல்கலாம் அவர்களை பற்றியும் போட்டிருந்தார்கள். ஆனால் எனக்கு இதில் உடன்பாடில்லை.
ஏனெனில் நான் சில நாட்கள் வேலை காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக நான்கு மணி நேரமே தூங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அப்போது தாங்கள் கூறியபடி கவனச்சிதறல் பிரச்சினையை அனுபவித்துள்ளேன். மனரீதியான பிரச்சினைகளை தவிர உடல்ரீதியாகவும் தலைவலி, கண் சோர்வு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
தங்கள் பதிவு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!
padmahari
ஆகஸ்ட் 23, 2010
உண்மைதாங்க. உறக்கம் இல்லாமல் போனாமல் உடல் ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்கவேண்டி வரும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றே! ஆனா, அந்தப் பிரச்சினைகளை அதிகமான நேரம் தூங்கினால் சரி செய்து விட முடியுமா முடியாதா என்பதெ சற்று குழப்பமானது! கருத்துக்கு மிக்க நன்றிங்க!
K.Jayadeva Das
ஆகஸ்ட் 20, 2010
Like eating, sleep also has its quota for each day. Each day’s quota must be given on that day, and in the worst case next day. More than that it will spoil our health. For example, we may take four chappatis for dinner. If we wish not to take the dinner for a whole week and on Saturday can we compensate it by eating 35 Chappatis? No. We can have just four Chappaatis. Sleep is not like some loan borrowed from a bank, to be paid later with interest!
padmahari
ஆகஸ்ட் 23, 2010
That’s an interesting take on sleeping! One may have to consider your approach to sleeping to avoid complications later. Thanks for the interesting view on sleeping and its connection with health!
vasedevan
ஆகஸ்ட் 20, 2010
// இயன்றவரை தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதை பழக்கப்படுத்திக்கொண்டு, அடிக்கடி இரவு முழுக்க விழித்திருக்கும் பழக்கத்தை தவிர்த்தல் நலம் என்கிறார்…. //
இயன்றவரை தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதை பழக்கப்படுத்திக்கொண்டு, அடிக்கடி *பகலில் ஆபீசில்* விழித்திருக்கும் பழக்கத்தை தவிர்த்தல் நலம் என்கிறார் எங்க ப்ரெண்டு!
padmahari
ஆகஸ்ட் 23, 2010
?????
Manick
ஆகஸ்ட் 21, 2010
A related article in NYT:
http://consults.blogs.nytimes.com/2010/08/20/a-night-owl-with-insomnia/?hp
padmahari
ஆகஸ்ட் 23, 2010
That’s a nice article! Thanks for sharing
Ashok
ஆகஸ்ட் 22, 2010
Yes, it seems to be good to sleep more than 6 hours per day depend upon the age.
padmahari
ஆகஸ்ட் 23, 2010
Iam not sure about the connection between age and sleeping in relation to health????
யூர்கன் க்ருகியர்
ஆகஸ்ட் 23, 2010
வாழும் நேரத்தில் சராசரியாக கால் பகுதி நேரம் தூங்கியே கழிப்பது… கேட்கவே கஷ்டமா இருக்கு இல்ல ?
அத விடுங்க .. தூக்கம் வந்தா தூங்கிட வேண்டியதுதான் அது ஆபீஸ் ஆக இருந்தா என்ன வீடா இருந்தா என்ன ??
padmahari
ஆகஸ்ட் 23, 2010
ஏங்க, உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான உறக்கத்துக்கு தேவையான நேரத்தை கண்டிப்பா தூங்கித்தாங்க செலவழிக்கனும்! மத்தபடி அலுவலகத்துல தூங்கினா என்ன ஆகும்ங்கிறது அவங்கவங்க அலுவலகத்தைப் பொறுத்தது இல்லீங்களா?!
Ashok
ஆகஸ்ட் 24, 2010
I am not sure, but I have read one article.
A infant has to sleep some hours.
A school boy has to sleep some hours.
A young people has to sleep some hours
A middle age and old people has to sleep some hours,
Fortunatley I am not remember exact hours duration.
Is it true?
padmahari
செப்டம்பர் 3, 2010
Yeah you are right. The sleeping hours of infants and adults are very different but Iam not sure about whether there’s a difference between young, middle aged and old people in their sleeping hours, guess not significantly different. Will get back to you when I find some info on this (Busy with research work and conferences since a week. so couldn’t update the blog. Kindly bear with me!) Thanks.
தணிகாசலம்
ஆகஸ்ட் 30, 2010
எல்லாம் சரிதாங்க ஹரி. தூக்கக்கடன் வைக்கக்கூடாதுதான். புரிகிறது. ஆனால் சில வேளைகளில் அவ்வாறு 6-8மணி நேர தூக்கத்தை மேற்கொள்ள முடிவதில்லையே! circardian rhythm படி Biological clock இயங்கிறது எனவேதான் இரவில் தூக்கம் என்கிறீர்கள். ஆனால் பகலில் மதிய உணவுக்குப் பிறகு நம்மையறியாமல் சில வேளைகளில் தூங்கிவிடுகிறோமே அப்பொது circardian rhythm படி Biological clock என்ன செய்கிறது?
padmahari
செப்டம்பர் 3, 2010
நல்ல கேள்வி! பொதுவாக சர்கேடியன் ரிதம் வெளிச்சம்/இருட்டு சுழற்ச்சிப் படி வேலை செய்வதால், எல்லோருமே காலையில் விழித்திருந்து இரவில் தூங்கினால்தான், சர்கேடியன் ரிதம் சரியாக வேலை செய்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நீங்கள் கேட்டுள்ளபடி மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் தூங்கிவிடுவதால் சர்கேடியன் ரிதம் பெரிய பாதிப்புக்கு உள்ளாவதில்லை. அதனால், பயலாஜிக்கல் க்ளாக்கும் அப்படியே! ஆனால், ஷிஃப்ட் வேலை செய்பவர்களைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். காலையில் உறங்கி, இரவில் விழித்திருந்த வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ள இரவு ஷிஃப்ட் வேலை செய்பவர்களின் சர்கேடியன் ரிதம் பாதிக்கப்படுகிறது. அதனால், அவர்களின் பயலாஜிக்கல் க்ளாக்கும் தன் உடலியக்கங்களை பகலிலிருந்து இரவுக்கு மாற்றி வேலை செய்யத் தொடங்குகிறது. இது இயற்க்கைக்கு எதிரான திசையிலான ஒரு மாற்றம். காலப்போக்கில் இந்த மாற்றத்துக்கு உடல் பழகிப்போகும் என்றாலும், இதனால் குடல் புண் மற்றும் இருதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் சொல்வதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். விவாதத்துக்கு நன்றிங்க. (இரண்டு வாரங்களாய், கான்ஃபெரென்ஸ் மற்றும் ஆய்வுப்பணிகள் அதிகமானதால் வலைப்பக்கத்தை இற்றைப்படுத்த இயலவில்லை. இந்த வாரக் கடைசியில் ஒரு பதிவு எழுத முயற்ச்சிக்கிறேன்.)
வாசகர்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி!
K. Jayadeva Das
ஆகஸ்ட் 30, 2010
//ஆனால் பகலில் மதிய உணவுக்குப் பிறகு நம்மையறியாமல் சில வேளைகளில் தூங்கிவிடுகிறோமே அப்பொது circardian rhythm படி Biological clock என்ன செய்கிறது?// கடின உழைப்பாளிகள் மதிய உணவுக்கப்புறம் 15 to 30 நிடங்கள் தூங்குவது நல்லது, தூங்கி எழுந்த பின்பு அவர்களின் செயல்திறன் [Efficiency] அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. நீங்களும் இதைப் பின்பற்றலாம். அதற்க்கு மேல் போவது நல்லதல்ல. மேலும் ஒரு நாளைக்கு 6 to 8 மணி நேர தூக்கம் தவிர்க்க கூடாதது, மீறினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.