இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:
மிகக்குறைந்த தூக்கம் உங்கள் இருதயத்துக்கு மிகவும் ஆபத்தானது. மிக அதிகமான தூக்கம் மனச்சோர்வு நோய்க்கான அறிகுறி! அதனால், உடலுக்கு ஆரோக்கியமான 6-8 மணி நேர அளவான தூக்கத்தை கடைப்பிடிக்க முயற்ச்சியுங்கள்!
ஜப்பான் நாட்டு உணவுகள்ல பொதுவா உப்பு, காரம், இனிப்புன்னு எல்லா சுவைகளுமே கொஞ்சம் குறைச்சலாதான் இருக்கும். வேலைப்பளு அதிகம் இருக்குறதுனால, நம்ம உணவு சமைச்சு சாப்பிட முடியாம பெரும்பாலும், பல்கலைக்கழக உணவகத்துல, ஜப்பான் நாட்டு உணவுகள சாப்பிடுறது வழக்கம். இப்படியே தொடர்ந்து சாப்பிட்டு நாக்கு செத்துப்போய், ஜப்பானிய நண்பர்கள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது, எங்க ஊருல நல்லா காரமா சாப்பிடுவோம்னு தெரியாத்தனமா சொல்லப்போக…..
“அடப்பாவமே அப்படியா? சரி, இப்போ என்ன உங்களுக்கு, நல்லா காரமாண உணவு வகைகள சாப்பிடனும் அவ்வளவுதானே” அப்படீன்னு சொல்லி ஒரு சீன நாட்டு உணவகத்துக்கு கூட்டிட்டு போனாங்க! சரி, நம்ம ஊரை விடவா காரமா இருந்துட போகுதுன்னு, வெளங்காத பேருல (அட, சீன மொழியில்ல அதாங்க!) ஏதோ நாலு உணவு அயிட்டங்கள சொன்னான் நம்ம சீன நண்பன்.
இதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான போய்க்கிட்டு இருக்குன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே, காய்கறி உணவு அயிட்டம் ஒன்னு வந்தது. பக்கத்துல இருந்த நண்பர் உடனே, அடடே நீங்க ஆவலா எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்த காரமான உணவு வந்துட்டுது, பூந்து வெளையாடுங்கன்னு சொன்னாரு! ஆனா பார்த்துங்க, சீன நாட்டு உணவு வகைகள்லேயே ரொம்ப ரொம்ப காரமான உணவு இதுன்னு ஒரு மேலதிக தகவலையும் வேற சேர்த்து சொன்னாரு!
சரி, நம்ம ஊரு காரத்தைவிடவா அதிகமா இருந்துடப்போகுதுன்னு நம்பி பார்த்தா, தம்மாத்தூண்டு வெங்காயத்தோட வெறும் பட்ட மிளகாயா (அதாங்க காய்ந்த மிளகாய்!) இருந்தது கிண்ணம் நிறைய?! அடப்பாவிகளா, என்னய்யா இது காரமான உணவு கேட்டா வெறும் காய்ந்த மிளகாயா கொடுத்து சாப்பிடச்சொல்றீங்களேன்னு அன்னிக்கு எடுத்த ஓட்டம்தான். இன்னிக்கு வரைக்கும் அந்த உணவகம் பக்கம் தல கூட வச்சிப் படுக்கலைன்னா பார்த்துக்கோங்களேன்!
“அதெல்லாம் சரி, இந்த கதைக்கும் (?) இந்தப் பதிவோட தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?” அப்படீன்னுதானே யோசிக்கிறீங்க? அட நிறைய இருக்குங்க…..
நான் போன அந்த உணவகத்தோட பேரு சிஷென் (Sichuan) உணவகம்! சிஷென் அப்படீங்கிறது, தென் சீனாவின் ஒரு பகுதி. மிளகாய் அதிகமாக சேர்த்து, உணவுவகைகள சமைத்து சாப்பிடக்கூடிய பழக்கமுள்ளவங்க அந்த பகுதி சீன மக்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆய்வாளரின் சமீபத்திய ஒரு ஆய்வில், மிளகாய் அதிகமாக உண்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்னு கண்டுபிடிக்கப்பட்டிருக்கு! அதப்பத்திதான் இந்தப் பதிவுல, இனி நாம விவரமா பார்க்கப்போறோம்…..
மிளகாய்-கேப்சைசினும், சில சாதகமான பின்விளைவுகளும்!
மிளகாய்க்கு காரத்தைக் கொடுக்கும் கேப்சைசின் (capsaicin) என்னும் ஒரு வேதியல் பொருளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என்பது முந்தைய சில ஆய்வுகள்மூலம் தெரிந்த செய்தியே! ஆனால், கேப்செய்சின் குறித்த இதுவரையிலான ஆய்வுகளில், மிகவும் அதிக அளவிலான, குறுகிய கால கேப்செய்சின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த, ஆனால் சர்ச்சைக்குறிய முடிவுகளே எட்டப்பட்டது என்றும், சமீபத்திய இந்த ஆய்வின்மூலம், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவில் இருக்கும் கேப்செய்சின் அளவுகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்கிறார், சீனாவின் மூன்றாவது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் திரு. ஷிம்மிங் ஷு! (Zhiming Zhu of Third Military Medical University in Chongqing, China)
மிளகாயில் உள்ள கேப்செய்சின் என்னும் வேதிப்பொருள் எப்படி ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்?
ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள ஒருவகை புரதமான transient receptor potential vanilloid 1 (TRPV1) என்னும் புரதத்தை தூண்டும் கேப்செய்சின், நைட்ரிக் ஆக்சைடு என்னும் ஒரு வகை வேதியல் பொருளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. காற்று வடிவிலான இந்த வேதியல் பொருள் ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களுக்கு எதிராக செய்ல்பட்டு ரத்த நாளங்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டது! மேலும் இந்த வினைகள் எல்லாம் சேர்ந்து, ரத்த நாளங்களைத் தளர்ச்சியடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்கிறார் ஷிம்மிங் ஷூ!
ரத்தக் கொதிப்புள்ள எலிகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவிலிருக்கும் கேப்செய்சின் அளவுகளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உள்ளது என்று கண்டறியப்பட்டாலும், இதே மாதிரியான ஒரு ஆய்வை, நீண்டகாலமாய் அதிகம் மிளகாய் கலந்த உணவுகளை உண்டுவரும், ஆயிரக்கணக்கான மக்களில் மேற்கொண்டு, இம்முடிவை நிரூபிக்கவேண்டியது அவசியம் என்றும், ஆனால், அத்தகைய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டால் நிச்சயம் முடிவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதற்க்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறார் ஷூ!
அது எப்படி?
மிளகாய் கலந்த உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கமுள்ள மக்கள் வாழும், தென்சீன பகுதிகளான சிஷென், கோஷொ, யுன்னான், ஹூனான் மற்றும் சாங்கிங் ஆகிய பகுதிகளில் ரத்தக்கொதிப்புடன் வாழும் மக்கள் 10-14% என்றும், ஆனால் மிளகாய் அதிகம் சாப்பிடாத உணவுப்பழக்கவழக்கமுள்ள மக்கள் வாழும் வடகிழக்கு சீன பகுதிகளில் 20% என்றும் கூறுகிறார் ஷூ!
அதெல்லாம் சரிதான், ஒரு நாளைக்கு எத்தனை மிளகாய் சாப்பிட்டா ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்?
அதாங்க தெரியாது! அட, என்ன அப்படிப் பார்க்குறீங்க? அப்படீன்னு நான் சொல்லலீங்க. நம்ம ஷூ தான் சொல்றாரு. ஆமாங்க, ஒரு நாளைக்கு கேப்செய்சின் இருக்கும் எத்தனை மிளகாய் உண்டால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க/கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து சரியான/திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வர, மேலும் ஆய்வுகள் செய்தால்தான் கண்டறிய முடியும் என்று சொல்கிறார் ஷூ!
“அடப் போங்கப்பா…., தங்கவேலு சமையல் கேக்குற எல்லாத்துக்கும், “ஓ…. தெரியுமே”ன்னு சொல்லிட்டு, சரி அடுத்து என்னன்னு கேட்டா…..அதாங்க எனக்குத் தெரியாதுன்னு சொல்ற அவர் மனைவி மாதிரியில்ல இருக்கு நம்ம ஆய்வாளர் ஷூ சொல்றது” அப்படீன்னு ஒன்னும் உணர்ச்சிவசப்படாதீங்க! கூடிய சீக்கிரமே நம்ம ஷூ, நாம எதிர்பார்க்குற அந்தக் கேள்விக்கான பதிலோட ஒரு ஆய்வறிக்கையை வெளியிடுவாருன்னு நம்புவோம்!
தொடர்புடைய சில பதிவுகள்:















உமாபதி
ஆகஸ்ட் 13, 2010
நல்ல பதிவு
padmahari
ஆகஸ்ட் 15, 2010
மிக்க நன்றிங்க!
AbdulAlim
ஆகஸ்ட் 13, 2010
Sir, Your Blog is very useful and interesting one. Now only i heard about ur blogs. Its really very nice. Now i am keep on reading all of ur articles.
Could U please explain me about Low Blood Pressure. I need to know about Low Blood Pressure, And how to increase this to normal BP.
Is any food control or any treatment is available for increase a hearing power.
Thanks In Advance
padmahari
ஆகஸ்ட் 15, 2010
வாங்க அப்துல் அலிம்,
குறைந்த ரத்த என்பதையே hypotension/low blood pressure என்கிறார்கள் ஆங்கிலத்தில்! சராசரி ரத்த அழுத்தமான 120/80mmHg அளவிலிருந்து வெகுவாக குறைந்து 90/60mmHg ஆக இருப்பதுதான் குறைந்த ரத்த அழுத்தம்!
சிகிச்சைகள்:
1. ரத்தத்தின் சர்க்கரை அளவை 80-150 அளவுக்குள் வைத்திருப்பது
2. அடிப்படையான காரணத்தை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிவது போன்றவை என்கிறது விக்கிப்பீடியா….
“In physiology and medicine, hypotension is abnormally low blood pressure. This is best understood as a physiologic state, rather than a disease. It is often associated with shock, though not necessarily indicative of it. Hypotension is the opposite of hypertension, which is high blood pressure. Blood pressure is the force of blood pushing against the walls of the arteries as the heart pumps out blood. If it is lower than normal then it is called low blood pressure or hypotension. Pressure below 90/60mmHg is considered low.”
http://en.wikipedia.org/wiki/Hypotension#Treatment
தங்களின் காது கேட்கும் திறன் குறித்த கேள்விக்கான பதிலை கூடிய விரைவில் தெரியப்படுத்துகிறேன் (நான் மருத்துவன் அல்ல என்பதையும் நினைவில் கொள்க!)
முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அப்துல் அலிம். தொடர்ந்தும் இணைந்திருங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! மீண்டும் சந்திப்போம்!
palaniraj
ஆகஸ்ட் 13, 2010
உங்கள் பதிவு நன்றாக உள்ளது.கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
padmahari
ஆகஸ்ட் 15, 2010
தகவலுக்கு மிக்க நன்றி பழனிராஜ்!
தணிகாசலம்
ஆகஸ்ட் 14, 2010
என்னங்க ஹரி! பதிவ ஜோரா கொண்டுபோயிட்டு கடைசியில எவ்வளவு சாப்பிட்டா போதுமுன்னு சொல்றாறுன்னு பாப்போமே அப்பிடின்னு படிச்சிகின்னு பொய்கின்னே இருந்தா கடைசியிலே கப்புன்னு கவுத்துட்டாரே ஷிம்மிங்கு.
padmahari
ஆகஸ்ட் 15, 2010
சரி விடுங்க…..சீக்கிரமா, அதுக்கான பதிலோட அடுத்த ஆய்வறிக்கை வந்தவுடனே எழுதிப்புடுவோம்
Shajith
ஆகஸ்ட் 15, 2010
In the middle east especially in Egypt, red chillies are used for abortion.
padmahari
ஆகஸ்ட் 15, 2010
Weclome Shajith,
Thanks for the visit and a very surprising information on chilli! I have never heard of such a use for chilli, but at the same I wonder How does chilli and to be specific what in chilli is responsible for the abortion???
Keep visiting meliruppaan,
regards,
Padmahari.
Sarangan
ஆகஸ்ட் 20, 2010
Good to see your blog Hari….this is the first time I`m knowing about our hot chillies…usually in north Indian people say chillies are good to control acidity in stomach….so UP people they take every day two chillies with their meals….hope there may be some connection with your message….let see….
padmahari
ஆகஸ்ட் 23, 2010
Yeah…..chillies do seem to have some benefit when it comes to blood pressure but we gotta wait and see if thats for real. Thanks for the visit and comment sarangan. Keep in touch! see you again at meliruppaan