Browsing All Posts published on »ஜூலை, 2010«

ரெக்ஸ்: அதிநவீன “செயற்க்கை” கால்கள்; “நடக்கும்” பக்கவாத நோயாளிகள்!!

ஜூலை 31, 2010

10

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: ஒமேகா கொழுப்பு (Omega fatty acids) என்னும் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புச்சத்தினை அதிகமான அளவில் கொண்ட ஒரு உணவு மீன்கள். அந்த ஒமேகா கொழுப்பு இருதயத்துக்கு மிகவும் உகந்தது. அதனால், நிறைய மீன்கள் சாப்பிட்டு உங்கள் இருதய நலனை பேணிப் பாதுக்காத்துக்கொள்ளுங்கள்! இந்த உலகத்துல பிறக்கிற எல்லாருக்குமே, உலகியல் விஷயங்களையெல்லாம் ரசிக்கனும், செயற்கரிய செயல்கள் பல செய்து பெயரும் புகழும் அடையனும், எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கனும் இப்படி நிறைய ஆசைகள்… [Read more…]

“சூப்பர் ப்ளாஸ்டிக்”: களிமண்ணிலிருந்து ஒரு புதுயுக ப்ளாஸ்டிக்?!

ஜூலை 29, 2010

4

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: இரவு உணவு எப்போதும் மிகவும் எளிதில் ஜீரனமாகக்கூடிய, எண்ணை அதிகமில்லாத, உப்பு-காரம் குறைந்த சாதாரணமான உணவாக இருப்பது இருதய நலனுக்கு மிக மிக அவசியம் என்கிறார்கள் இருதய நல மருத்துவர்கள்! இந்த உலகத்தை அழிக்க அணுகுண்டு, உயிரியல் ஆயுதம், உலகப் போர் இப்படி எதுவுமே வேணாம். பொதுமக்களாகிய நாம நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பொருட்களே போதும். என்ன அப்படிப்பார்க்குறீங்க? அட உண்மையத்தாங்க சொல்றேன். ஏன்னா, சுற்றுச்சூழல் பாதிப்பு அப்படீங்கிற… [Read more…]

உலக அழிவு: இன்னும் 100 வருடங்களில் அழியப்போகும் ‘மனித’ இனம்!!

ஜூலை 27, 2010

20

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: உடல் ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகளை ஆறப்போடாதீர்கள். (உதாரணமாக, புகைப்பிடிப்பதை நிறுத்துவது, உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்ச்சி செய்வது போன்றவை). எதையும் நன்றே செய், அதையும் இன்றே செய் என்பதைப்போல, ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகளை இப்போழுதே செயல்படுத்தத் தொடங்குங்கள்! தலைப்பைப் படிச்ச உடனே, “ஆஹா…..ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா. திரும்பவுமா…..முடியல” அப்படீன்னு வடிவேலு ரேஞ்சுக்கு முனுமுனுத்திருப்பீங்களே…?! உங்களச் சொல்லி குத்தமில்ல. ஏன்னா, நம்ம ஆளுங்க ஆ….ஊ…ன்னா, ஒன்னுந்தெரியாத சின்ன பசங்கள “அதோ பாரு வெள்ளக் காக்கா”ன்னு சொல்லி… [Read more…]

செக்ஸ்: ஜேம்ஸ் பாண்டும் செக்ஸும்; காரணங்களுடன் ஒரு ஆய்வு?!

ஜூலை 25, 2010

12

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: செல்ஃபோன்கள் (கைத்தொலைபேசி) நம்மை அடிமைப்படுத்தும், மனஅழுத்தத்தைக் கொடுக்கும் தன்மையும் உடையவை! உங்க கைத்தொலைபேசியை (சாப்பிடும்போது, சினிமா பார்க்கும்போது இப்படி) சதா சர்வகாலமும் கூடவே வச்சிக்கிட்டு இருக்காதீங்க! பொதுவா நம்ம வைகைப்புயல் வடிவேலு மாதிரி, “நான் ரொம்ப நல்லவன்”னு சொல்லி நல்லவனாவே இருக்குற பசங்களைத்தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு நம்ம சமுதாயத்துல ஒரு கருத்து இருக்குன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். அதுக்குக் காரணம், “எந்த மாதிரியான பையனை உங்களுக்குப் பிடிக்கும்” அப்படீன்னு நம்ம பொண்ணுங்கள… [Read more…]

உளவியல்: ‘மனிதவெடிகுண்டு’களின் மூளை/மனதுக்குள்ளே ஒரு பயணம்?!

ஜூலை 23, 2010

2

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மன உளைச்சல்/மன அழுத்தம் நிறைந்த வேலையுள்ளவர்களுக்கு, சோம்பேறித்தனம் மிகுந்த ஒரு விடுமுறை நாளும், சுவாரசியமில்லாத ஒரு வேலையுள்ளவர்களுக்கு, மலையேற்றம் மற்றும் இயற்க்கை நிறைந்த இடங்களில் நடைபயணமும் அவசியமென்கிறது இருதய மருத்துவம்! இந்த உலகத்துல உருவான உயிர்கள் எல்லாவற்றுக்குமே சுகமான, அமைதியான, விருப்பத்திற்கேற்ற வாழ்க்கை வாழ்வதற்க்கான அடிப்படை உரிமையும், ஆசையும் இருக்குங்கிறத உங்கள்ல யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். ஆனா, இந்த இயற்க்கை நியதிக்கு எத்தனையோ தடைகள் இயற்க்கையாலும், மனிதன் உருவாக்கும் செயற்க்கையான… [Read more…]

அதிசயம்: அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!!

ஜூலை 21, 2010

12

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: கோபம், சோகம், சந்தோஷம் இப்படி எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்ச்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்படுத்தி வைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இருதய நோய் வருவதற்க்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்கிறீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்! நவீன கண்டுபிடிப்புகள் பத்தி ஒரு நல்ல பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சேன்னு நேனச்சிக்கிட்டு இருந்தேன். அந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு செய்தி கெடைச்சது, அதான் எழுதிடுவோமேன்னு இந்தப்  பதிவை எழுதுறேன். நவீனம் அப்படீங்கிற வார்த்தைக்கு அர்த்தம்… [Read more…]

ஜப்பான்: ‘ஒகோனோமியாக்கியும்’ ஹிரோஷிமாவும்; ஒரு தொடர்பு!

ஜூலை 20, 2010

7

இன்று ஒரு இருதய நலக்குறிப்பு: சிரிப்பு சிகிச்சை (Laughter therapy) என்பது ஆரோக்கியத்தை கூட்டுகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது! உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மன உளைச்சல், எல்லாவற்றிற்க்கும் மேலாக, இருதய நோய்களை குறைக்க வல்லதாம் சிரிப்பு! அதனால சிரித்து வாழுங்கள், இருதய நோயை எதிர்த்து வாழுங்கள்! ‘ஹிரோஷிமா’ அப்படீன்னு சொன்னாலே கூடவே ‘நாகசாக்கி’ என்கிற பெயரும் ஒட்டிக்கொண்டு, ”அணுஆயுதம்-உலக அழிவு-குண்டு விழுந்த இடத்துல இன்னும் புல், பூண்டுகூட முளைக்கல” இப்படியான விஷயங்கள்தான் மேலோங்கி இருக்கிறது நம்… [Read more…]

மர்மம்: பரிணாமத்தின் “தொலைந்த தொடர்புகள்”

ஜூலை 18, 2010

4

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: சிவப்பு மதுரசம் (Wine) அருந்துவதால், இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 60% குறைவதோடு, மாரடைப்பு  வராமல் பாதுகாக்கிறதாம்! ரத்தத்திற்க்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் சிவப்பு மதுரசம், கொலஸ்டிராலையும் குறைக்கிறதாம். அதீரோஸ்க்ளீரோசிஸ்  (Atherosclerosis) என்னும் இருதய நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறதாம் இந்த சிவப்பு மதுசரம்! பள்ளிக்கூடத்துல பரிணாமம் படிக்க ஆரம்பிச்சப்போலேர்ந்து (சமீபகால வரைக்கும்) பரிணாமப் பாடத்துல, தொலைந்த தொடர்புகள் அப்படீன்னு ஒரு பகுதி இருக்கும். ரொம்ப சுவாரசியமான விலங்குகளையும், படிக்கிறவங்க மனசுல பரிணாமம்… [Read more…]

மனிதர்களால் ஏன் “தண்ணீருக்குள் சுவாசிக்க” முடிவதில்லை?

ஜூலை 16, 2010

18

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: கொஞ்சம் அதிகமா கொலஸ்டிரால் இருக்குதுன்னு ரொம்ப நொந்து நூலாகிடாதீங்க. கொஞ்சம் அதிகமா இருக்குற கொலஸ்டிராலைவிட புகைப்பழக்கமும், உடல் பருமனும் இருதய நலனுக்கு மிகவும் மோசமானது! அதனால, இந்த ரெண்டு பழக்கத்தையும் முதல்ல விடுங்க அல்லது குறைங்க! கேள்வியை படிச்சவுடனே பல பேருக்கு, “என்னாதிது….? இதெல்லாம் ஒரு கேள்வியா?” அப்படீன்னு கேட்கத்தோனலாம். ஏன்னா, தண்ணீருக்குள்ளே மனிதனால சுவாசிக்க முடியாததுக்கு காரணம், தண்ணீருக்குள்ள சுவாசிக்க முயற்ச்சி செஞ்சா நுரையீரலுக்குள்ள தண்ணி போயி, பரலோகத்துக்கு மனுசன்… [Read more…]

செக்ஸ்: ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்து, செக்ஸ்; ஒரு மர்மத் தொடர்பு?!

ஜூலை 14, 2010

8

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: கொலஸ்டிரால் என்னும் இருதய எதிரியை அழிக்கவல்ல ஆயுதங்கள்: பூண்டு, மீன்கள், பழரசம் (Wine) மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்ச்சி என்கிறது மருத்துவ உலகம்! இந்த மில்லியன் டாலர் கேள்வி, மில்லியன் டாலர் கேள்வி அப்படீன்னு (ரெண்டு இல்ல!) ஒன்னு அமெரிக்காவுல சொல்லுவாங்க தெரியுமில்ல உங்களுக்கு? கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்! அதான் ஒலகமயமாக்கலுன்னு ஒன்னு வந்து, ஒலகத்தையே புரட்டிப்போட்டது மட்டுமில்லாம, நம்ம ஊரு பாதாம் கீரெல்லாம் காணாமப் போயி, குளிர்பானம்ங்கிற பேர்ல பூச்சிமருந்தையெல்லாம் ரசிச்சி, ருசிச்சி… [Read more…]

ஆபத்து: மாரடைப்புக்கு பலியாகிக்கொண்டிருக்கும் இந்தியா!!

ஜூலை 11, 2010

15

இன்றைய இருதயநலக் குறிப்பு: உணவுக்கு முன் இயன்றவரை ஒரு சூப் அருந்த முயற்ச்சியுங்கள். அது நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். குறைவாகவே சாப்பிடுங்கள் ஆனால் நாளில் பலமுறை! இது உணவுச் செரிமான வேதியல் மாற்றங்களை அதிகரிக்கும். சில வருடங்களுக்கு முன்புவரை ‘மாரடைப்பு’ அப்படீன்னா நம்ம மக்கள் மத்தியில ஒரு சில கருத்துக்கள் இருந்தது. அது, மாரடைப்பு ஏற்படுற ஒருத்தருக்கு குறைந்தது அறுபது வயதாவது ஆகியிருக்கனும், சம்பந்தப்பட்டவர் சில காலங்களேனும் ரத்தக் கொதிப்பினால பாதிக்கப்பட்டு மாத்திரைகள் சாப்பிட்டிருக்கனும்,… [Read more…]

வினோதம்: புலனறிவில் மனிதர்களைத் தோற்கடிக்கும் 10 விலங்குகள்-2

ஜூலை 9, 2010

2

இன்றைய உடல் நலக்குறிப்பு: சாப்பிடுவதற்க்கு/சமைப்பதற்க்கு முன் எல்லா வகையான பழங்கள், காய்கறிகளையும் நன்கு சுத்தம் செய்தல்/கழுவுதல் மிக மிக அவசியம். இது கடையில் வாங்கும் மற்றும் வீட்டில் விளைந்த காய்கறி/பழம் எல்லாவற்றிற்க்கும்  பொருந்தும்! “வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்திலும் உண்டு”, அப்படீன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். ஆனா, அந்த வல்லவனுக்கு வல்லவன் யாரு, அவனோட/அதோட திறமைகள் என்னென்னன்னு ஒருவர் ஆய்வு செய்து சொல்லும்வரை நம்மில் நிறையபேருக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம்! தொடர்ந்து இப்பதிவை வாசிப்பதற்க்கு முன், இதன்… [Read more…]

வினோதம்: புலனறிவில் மனிதர்களைத் தோற்கடிக்கும் 10 விலங்குகள்!!

ஜூலை 8, 2010

9

இன்றைய உடல் நலக் குறிப்பு: உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் BMI (உடல் எடை கணக்கு) அளவானது 18.5 முதல் 24.9 வரை இருந்தால் ஆரோக்கியமானது. 25 முதல் 29.9 வரை இருந்தால் உடல் பருமன் அல்லது அதிக எடையுள்ளவர்கள் பட்டியலில் வருவோர் என வரையறுக்கப்பட்டுள்ளது! இந்த மனுசன் இருக்கானே, உலகத்துலயே எனக்குத்தான் 6 அறிவு இருக்கு, நான் சகல கலா வல்லவன், என்னால இது செய்ய முடியும், அது செய்ய முடியும்னு, இப்படி எப்பப் பார்த்தாலும் ஒரே… [Read more…]

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

ஜூலை 6, 2010

4

இன்றைய உடல்நலக் குறிப்பு: நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியென்றால்  அடுத்தமுறை  நொறுக்குத் தீனி சாப்பிடத்தோனும்போது, உலர்ந்த திராட்சை/ வேறு உலர்ந்த பழங்களை சாப்பிட்டுப் பாருங்கள்! இப்பெல்லாம் சிக்ஸ் பேக் வச்சிக்கிறதுன்றது ஒரு சப்ப மேட்டராகிப்போச்சுன்னு நெனக்கிறேன். அட ஆமாங்க, வாரணம் ஆயிரம்ங்கிற படத்துக்காக சிக்ஸ் பேக் வேணுமுன்னு, நம்ம சூர்யா மாதிரி கிட்டத்தட்ட ஒரு வருஷம், தினமும் மாங்கு மாங்குன்னு உடற்பயிற்ச்சி செஞ்சி சிக்ஸ் பேக் வரவச்சதெல்லாம் அந்தக் காலம்! ஏன் அப்படிச் சொல்றேன்னு தெரிஞ்சிக்கனுமுன்னா,… [Read more…]

பெட்ரோல்:ஆச்சரியமூட்டும் 7 உண்மைகள்!!

ஜூலை 4, 2010

10

இன்றைய உடல்நலக் குறிப்பு: தாவரம் சார்ந்த உணவுகளை மட்டுமே உண்ணும் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு, போதுமான அளவு கால்சியம் கிடைப்பதில்லையாம். இது விலங்குகளிலிருந்து கிடைக்கும் பால் சார்ந்த உணவுகளையும் தவிர்ப்பவர்களின் நிலை மட்டுமே! மற்ற சைவர்களுக்கு அல்ல! நம்ம ஊருல, பெட்ரோலைப் பத்தி ஒரு சர்ச்சை இருக்குன்னா, எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அது நம்ம ராமர் பிள்ளையோட மூலிகைப் பெட்ரோல் சர்ச்சைதான்!  ஏன்னா, பெட்ரோலே இல்லாம உலகப் போக்குவரத்தெல்லாம் தடைபட்டு, மொத்த உலகமும் ஸ்தம்பித்துவிடும் அப்படீன்னு ஒரு… [Read more…]

ரகசிய ஆய்வு: ஆஸ்கர் விருது பரிந்துரைகள் பற்றிய ரகசியங்கள்!

ஜூலை 2, 2010

12

இன்றைய உடல்நலக் குறிப்பு: நீங்கள் உட்கொள்ளும் பல வகையான வைட்டமின் மாத்திரைகளும், தாது மாத்திரைகளும் ஆரோக்கியமான உணவுக்கு ஒருபோதும் ஈடானவையல்ல. அதனால், வைட்டமின்கள்/தாதுக்கள் நிறைந்த இயற்க்கை உணவு வகைகளை உண்பதை பழக்கமாக்கிக்கொள்வது மிகவும் உகந்தது! நம்ம உலக நாயகன் கமலஹாசன், நாயகன்ல ஆரம்பிச்சு இதுவரைக்கும், எப்படியாவது ஒரு ஆஸ்கார் விருதையாவது வாங்கியே தீருவேன்னு கங்கனம் கட்டிக்கிட்டு சும்மா நடிச்சு தள்ளிக்கிட்டேதான் இருக்காரு! ஆனா பாருங்க, கழுத அந்த ஆஸ்கார் விருதைத்தான் இன்னும் குடுக்கவே மாட்டேங்கிறாய்ங்க அமெரிக்காகாரைங்க! ஆனா,… [Read more…]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 202 other followers