இன்றைய உடல்நலக் குறிப்பு:
நீங்கள் மிகவும் சோர்வாக உணரும்போது, காஃபி அல்லது தேனீர் குடிப்பத்தற்கு பதிலாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது!
மனுசனுக்கு வர்ற உறக்கம் சார்ந்த கோளாறுகள்/குறைபாடுகள்ல நம்ம எல்லாருக்குமே பரிச்சயமானது, தூக்கத்தில் நடக்கும் ஒரு குறைபாடு. உறக்கம் சார்ந்த ஆனா நமக்குத் தெரியாத/பரிச்சயமில்லாத கோளாறுகள்னு ஒரு பெரிய பட்டியலே இருக்குதாம். அதுல நம்மில் சில/பலருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒன்னு இன்சோம்னியா. அதாவது, தூக்கமின்மை/உறக்கத்தை தொடர முடியாமை என்னும் ஒரு குறைபாடு!
இது தவிர, நமக்குத் தெரியாத உறக்கக் குறைபாடுகள்னு பார்த்தா…..
- ப்ரக்சிசம் (Bruxism): உறங்கும்போது, நம்மை அறியாமல்/தன்னிச்சையாக பற்களை நர நரவென்று கடித்து/தேய்த்துக்கொள்ளுதல்!
- ஹிப்னோயா சிண்ட்ரோம் (Hypopnea syndrome): உறங்கும்போது குறைவான சுவாசம்/இயல்பிலிருந்து மிகவும் அளவு குறைந்த சுவாசம் (ஆங்கிலத்தில் Hypopnea syndrome)
- நார்கோலெப்சி (Narcolepsy) : விருப்பமேயில்லாமல், நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உறங்குதல். முக்கியமாக உறங்கக்கூடாத நேரங்களில்
- இரவு வன்முறை (Night terror): இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று விழித்து வன்முறையான செயல்களில் ஈடுபடுவது! ஐய்யய்யோ….?!
- பாராசோம்னியா (Parasomnias): உறக்கத்தை கெடுக்கும் பலவிதமான செயல்களில் ஈடுபடும் ஒரு கோளாறு. உதாரணத்துக்கு தூக்கத்தில் நடப்பது, இரவு வன்முறை போன்றவற்றைச் சொல்லலாம்!
இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்
தூக்கக் கோளாறுகளைப் படிக்கப்போய் அப்படியே கெளம்பிடாதீங்க, ஏன்னா நான் சொல்ல வந்த மேட்டரே வேற! நீங்க படிச்ச/படிக்கப்போற அந்த விக்கிப்பீடியா பட்டியல்ல இல்லாத ஒரு வினோதமான ஆனா கொஞ்சம் சுவாரசியமான (?) ஒரு உறக்கம் சார்ந்த குறைபாடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைப் பத்தின ஒரு சிறு அறிமுகத்தைத்தான் இனிமே நாம பார்க்கப்போறோம்…..
செக்சோம்னியா, ஒரு வினோதமான செக்ஸ்!
உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்படும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதாவது, உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒருவித குறைபாடு. இத்தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம்னியா குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய இந்த ஆய்வு!
இக்குறைபாடு ஆண்களுள் 11% மற்றும் பெண்களுள் 4% என்றும், இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உறவில் ஈடுபட்டு துணை சொல்லும்வரை உறவுவைத்துக்கொண்ட நினைவே இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது! உறக்கக் குறைபாடுள்ள சுமார் 832 பேர் கலந்துகொண்ட ஆய்வு சொல்லும் முடிவு பொதுமக்களுக்கு (ஆரோக்கியமானவர்கள்) இல்லை என்பதை நினைவில் கொள்க என்கிறார் டொரோன்டோவின் சுகாதாரப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஷேரான் ஏ சங்! (Sharon A. Chung in the department of psychiatry at the University Health Network in Toronto, Canada)
இம்முடிவில் முன்வைக்கப்படும் அதிகபட்ச (8 %) என்பது உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கே! ஆனால், பொதுமக்களுக்களை இக்குறைபாடு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிக்கக்கூடும் என்கிறார் ஷேரான்! இக்குறைபாடுள்ள நோயாளிகள் உறக்க குறைபாடுகளின் மற்ற தொந்தரவுகளிலிருந்தும் தப்புவதில்லையாம். உதாரணத்துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமின்மை போன்றவற்றை சொல்லலாம்!
செக்சோம்னியா பற்றிய ஒரு அறிவியல் விளக்கக் காணொளி உங்களுக்காக…..
செக்சோம்னியாவின் பின்னனி?!
இவ்வினோதமான குறைபாட்டுக்குக்கான அறிவியல்பூர்வமான காரணம் என்னவாக இருக்கும் என்று சோதித்ததில், 15.9 % செக்சோம்னியா நோயாளிகள் போதைப்பழக்கம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது! மேலும், செக்சோம்னியா நோயாளிகள், தங்களின் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது!
பொதுவாக குழப்பமான நிலையிலுள்ளபோதும், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் நடக்கும்போதும் இக்குறைபாடு ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஷேரான்! பாராசோம்னியா வகையினுள் அடங்கும் செக்சோம்னியா, தூங்கத்தொடங்கும்போது, தூங்கும்போது அல்லது விழிப்பதற்க்கு சற்றுமுன் என பலவேறு கால நிலைகளில் ஏற்படுகிறது என்கிறது ஷேரானின் இந்த ஆய்வு!
இன்றைய உடற்பயிற்ச்சிக் குறிப்பு:
நீங்கள் தினமும் ஓடும் பழக்கமுள்ளவர் என்றால், ஓடி முடிக்கும்போது ஓட்டத்திலிருந்து வேகம் குறைத்து கொஞ்ச தூரம் மெதுவாக ஓடி பின், கொஞ்ச தூரம் நடந்து பின்பு ஓட்டத்தை முடித்துக்கொள்வது சிறந்தது. இவ்வகையான ஓட்ட முறையே உடலின் தசைகளுக்கு சீரான ஓய்வை கொடுக்கும்!
(டிஸ்கி: மேலிருப்பானில் இனி வரும் பதிவுகளில் ஆரோக்கியம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்ச்சி மற்றும் தொடர்பான இரு குறிப்புகள் இடம்பெறும். அக்குறிப்புகள் நான் படித்தவையும், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளவையுமே என்பதால், அதை ஒரு குறிப்பாக மட்டுமே எடுத்துக்கொண்டு, மேலதிக தகவல்களுக்கு மருத்துவர்களை கலந்தாலோசித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்!)
தொடர்புடைய சில பதிவுகள்:
















raji
ஜூன் 28, 2010
padmahari
ஜூன் 30, 2010
வாங்க ராஜி,
கருத்துக்கு நன்றி.
//enna ore sex mayam….:)//
செக்ஸ் விழிப்புணர்வும் வாழ்க்கைக்கு அவசியம்தானே?!
யூர்கன் க்ருகியர்
ஜூன் 28, 2010
நண்பரே..
ஒருத்தன் நல்லா தூங்கிகிட்டு இருக்கும்போது திடீரென ஓட ஆரம்பித்து சிறிது நேரம் கழித்தே சுய நினைவுக்கு வந்து மீண்டும் தூங்க சென்றான். இவ்வாறு இருமுறை நடந்துள்ளது. என்னவாய் இருக்கும் ?
அந்த ஒருத்தன் நான்தான்
யூர்கன் க்ருகியர்
ஜூன் 28, 2010
இத பத்தி நான் என்னுடன் பணிபுரிபவரிடம் பேசி கொண்டிருந்தேன்..
அவர் சொன்னது ” நல்லா தூங்கிகிட்டு இருந்த ஒரு ஆளு,, தானா எழுந்து போய் வீட்டுக்கு வெளியே இருந்த சாக்கடை அருகே போய் படுத்து தூங்கினார்”
நானே பரவாயில்லை போலேருக்கு !
யூர்கன் க்ருகியர்
ஜூன் 28, 2010
//மேலிருப்பானில் இனி வரும் பதிவுகளில் ஆரோக்கியம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்ச்சி மற்றும் தொடர்பான இரு குறிப்புகள் இடம்பெறும்.//
super sir..
padmahari
ஜூன் 30, 2010
//என்னவாய் இருக்கும் ? //
அனேகமாக நீங்க ஓட்டப்பந்தைய வீரராகனும்னு சின்ன வயசுலேர்ந்தே கனவு கண்டுட்டு இருந்திருப்பீங்க. அப்படி ஆக முடியலையேன்னு, தூக்கத்திலயாவது ஓடி ஆசையை நிறைவேத்திக்க முயற்ச்சி பண்ணியிருப்பீங்க……அவ்வளவுதான்! இதுல பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல யூர்கன்
ஏதோ நம்ம கற்பனைக்கு எட்டியது
Ashok
ஜூலை 20, 2010
ஹலோ டாக்டர்,
நானும் சிறுவயதில் தூங்கும் போது ,பற்களை கடிப்பேன் என்று சொல்லுவர்,ஆனால் அவற்றை என்னால் ஏன் உணர முடிவதில்லை.(எ.கா) குறட்டை விடுபவர்கள்,
ஏன் மதியம் தூங்கினால் மட்டும் குண்டாகி விடுகிறோம் ?
இரவில் தூங்காமல் இருந்தால் உடல் இலைக்கிறோம் ?
தூக்கத்திற்கும், உணவிற்கும் என்ன தொடர்பு? அதிகமாக உண்டாலும் தூக்கம் வருகிறது, பசியாலும் மயக்கம் வருகிறது.
தூங்குவதற்கும் இட சூழ்நிலைக்கும் தொடர்பு இருக்கிறதா?
பதிலுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி
பாராட்டுக்கள்.
padmahari
ஜூலை 22, 2010
வாங்க அஷோக்,
) இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்ச்சி பண்றேன்!
முதல்ல ஒரு சின்ன திருத்தம். நான் மருத்துவர் (Doctor) இல்லை. (ஆனா, இன்னும் ஒரு வருஷத்துல Ph.D டாக்டர் ஆகிடுவேன்
1. குறட்டை விடுவது, பற்களை கடிப்பது, பினாத்துவது போன்றவை சுயநினைவில்லாத உறக்கத்தின்போது ஏற்படுவதால் நம்மால் உணர முடியாது என்றே நினைக்கிறேன்.
//ஏன் மதியம் தூங்கினால் மட்டும் குண்டாகி விடுகிறோம் ?
இரவில் தூங்காமல் இருந்தால் உடல் இலைக்கிறோம் ?//
இந்த ரெண்டு கேள்விக்குமான நேரடியான பதில் எங்கிட்ட இல்ல. ஆனா, உடல் இளைப்பதும் பருமனாவதும் செரிமானத்துடனும், Circadian rythm/Biological clock என்னும் சூரிய வெளிச்சம் (பகல்/இரவு சுழற்ச்சி) கட்டுப்படுத்தும் உடலியக்கங்கள் சார்ந்தது. ஆக, மிதியம் தூங்கினால் குண்டாவதற்க்கு காரணம், உண்டவுடன் செரிமானம் தொடங்கி சர்க்கரை, புரதம், கொழுப்பு ஆகியவை உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு பயன்பட்டது போக தசை வளர்ச்சிக்கும், சேமிப்புக்காகவும் பிரித்தனுப்படும். இயற்க்கை அப்படியிருக்க, செரிமான பொருள்கள் (முக்கியமாக கொழுப்புச்சத்து) உடலுழைப்புக்கு பயன்படாமல் சேமிப்பாக மாறும்போது உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது! அதேமாதிரி, இரவு தூங்காமல் இருந்தால் உடல் இளைப்பதற்க்கு காரணம், செரிமான பொருள்கள் கண்விழிப்பு நிலைக்கும், இதர உடல் பாகங்களின் இயக்கத்துக்கும் தொடர்ந்து பயன்படுவதால் சேமிப்பு குறைந்து, உடல் இயக்கத்தால் இளைக்க வாய்ப்புண்டு!
//தூக்கத்திற்கும், உணவிற்கும் என்ன தொடர்பு?//
தூங்கினால் உடல் உழைப்பில்லை. உணவிலிருந்து பெறப்படும் சக்தி அப்படியே சேமிப்பாக மாறுகிறது. உடலுழைப்புடன் தூக்கமில்லையென்றால், உணவு மொத்தமும் உடலியக்கத்துக்கு பயன்பட்டு விடுகிறது. அதிகமாக உண்டால் தூக்கம் வருவது, உணவுச் செரிமானம் தொடங்குவதால் ஏற்படும் அயற்ச்சியினால் என்று நினைக்கிறேன்?! பசியால் மயக்கம் வருவது, உடலியக்கத்துக்கு தேவையான சக்தியின்றி, உடல் சோர்ந்து விடுவதால்!
//தூங்குவதற்கும் இட சூழ்நிலைக்கும் தொடர்பு இருக்கிறதா?//
உங்க கேள்விக்கான நோக்கம் புரியல! ஆனா, தூங்குவதற்க்கும் இட சூழ் நிலைக்கும் நிச்சயம் தொடர்புண்டு என்பது என் அடிப்படை புரிதல்!
கேள்விகளுக்கு நன்றி. ஆனா, நீங்க திருப்தியடைகிற அளவுக்கு என் பதில்கள் இருக்கா இல்லையான்னு இனி நீங்கதான் சொல்லனும்!
முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள். மீண்டும் சந்திப்போம்!
Ashok
ஜூலை 22, 2010
பதிலுக்கு மிக்க நன்றி.
நான் மிக திருப்தியடைந்தேன் , தெளிவான விளக்கத்துக்கு மீண்டும் நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
தணிகாசலம்
ஜூலை 22, 2010
இந்த sexsomnia பிரச்சினை உள்ள ஆண்கள்/பெண்களால் பாதிக்கப்பட்டவர்களால் மேலைநாடுகளில் ஏதும் வழக்குகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா ஹரி?
padmahari
ஜூலை 24, 2010
இல்லீங்க. ஆனா, குறட்டை விட்டதுனால விவாகரத்துக் கேட்டதாக நகைச்சுவையான சில வழக்குகள் பற்றி கேட்டதுண்டு