செக்ஸு….. செக்ஸு….. செக்ஸு……
“செக்ஸுன்னா, ஏன்யா இப்படி அலையுறீங்க”, அப்படீன்னு யாராவது கேட்டா, சுத்தமா யோசிக்காமகூட, “ஏன்னா, அதுல ஒருவிதமான சுகம், கிளர்ச்சி, இன்பம் இப்படி நெறைய இருக்குங்கிறதுனாலதான்”ன்னு எல்லாரும் கோரசா கத்திச் சொல்லனும்னாவது நெனைப்பாங்க அப்படீங்கிறதுதான் நிதர்சன உண்மை?! ஆனா, சொல்வாங்களா மாட்டாங்களாங்கிறது ஆளைப் பொறுத்தது!
ஆமா, ஏன் செக்ஸ் விவரங்கள், படங்கள், காணொளிகள், கிசுகிசுக்கள்னு இப்படி எதுவா இருந்தாலும் ‘தீ’ மாதிரி, அப்படியே பத்திக்கிட்டு எரியுது நம்ம (மனித) சமுதாயத்துல மட்டும்?! இதுக்கு ஒரு முக்கிய காரணம், செக்ஸ் பற்றிய செய்திகள (முண்டியடிச்சிக்கிட்டு) முதல் பக்கத்துலயோ, பிரத்தியேகமாகவோ பிரசுரிக்கிற நம்ம ஊடகங்கள்தான்னு சொல்லனும்!
“செக்ஸுங்கிறது ஒரு வகையான பசி! தினமும் மனிதனுக்கு ஏற்படுற உணவுப்பசி மாதிரி, ‘செக்ஸுங்கிறது’ ஒரு உடல் பசி” அப்படீன்னு நம்ம பத்திரிக்கை ஊடகத்துலதான், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர்/நடிகையோட பேட்டியில படிச்சதா நியாபகம்! உண்மைதான், செக்ஸ் ஒரு பசிதான். ஆனா, நம்ம சமுதாயத்துல அது வெறும் பசியா மட்டுமே பார்க்கப்பட்டிருந்தா, செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிக மிக குறைவுங்கிறது என்னோட புரிதல்!
“ஏய்….என்னப்பா இது இழுவ! சீக்கிரம் மேட்டருக்கு வாப்பா”ன்னு நீங்க சவுண்டு விடுறதுக்கு முன்னாடி நான் பதிவுச் செய்திக்கு வந்துடறேன். செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் மக்களுக்கு இருக்க ஒரு முக்கிய காரணம், அதுல இருக்குற பல சுவாரசியங்கள், புதுசு புதுசா வெளிவருகிற/நமக்குத் தெரியாத பல செய்திகளே. அப்படிப்பட்ட 10 சுவாரசியமான, செக்ஸ் குறித்த ஆய்வுகளைப் பத்தித்தான் நீங்க இப்போ படிக்க போறீங்க…..
செக்ஸுக்கு வயதில்லை! (Sex Is Ageless, for Some)
பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, 75 முதல் 85 வயதானவர்கள், மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டில் New England Journal of Medicine என்னும் மருத்துவ வார இதழில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை! பொதுவான நம்பிக்கை என்னன்னு கேட்டீங்கன்னா, இளம் வயதினரே அதிகம் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதே?!
செக்ஸ் ஆயுட்காலத்தில் ஆண்களுக்கே முதலிடம்! (Men Outlive Women Sexually)
பெண்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த ஆயுட்காலம்/வாழ்நாளை கொண்ட ஆண்கள், செக்ஸ் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தலைகீழாக இருக்கிறார்கள்! அதாவது, 55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், செக்ஸ் வாழ்க்கை/ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம்! (இது அமெரிக்கர்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதை நினைவில் கொள்க)
செக்ஸ் குற்றஉணர்வு பாலினத்தை பொறுத்தது! (Guilt Is Gender-Dependent)
செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும்/ஏமாற்றுதல், பெண்களின் குற்ற உணர்ச்சி ஒரு சமுதாய கட்டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது! ஆனால், செக்ஸ் துரோகம் என்பது அடிப்படையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்!
செக்ஸ் துணையை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் பொறுத்திருக்கிறார்கள்! (Why Women Wait)
தனக்கு சரியான செக்ஸ் துணையை, தன் இயற்கை உணர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்வரை ஒரு பெண் பொறுத்திருக்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பது தான் போட்டிக்கு/சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கிறது ஒரு ஆய்வு!
துன்பத்துக்கு அடிப்படையாகும் இன்பம்! (Pleasure Can Hurt)
தங்களின் 20, 30 வயதுகளில் செக்ஸில் மிகுந்த ஆர்வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலைக்கழக ஆய்வு! ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்க்கும் பின்னுமான செக்ஸ் செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம்!
செக்ஸும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்தைவை! (Sex and Happiness Go Together)
செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். செக்ஸில் அதிகமாக ஈடுபடுபவதால் சந்தோஷமாக இருக்கிறார்களா, சந்தோஷமாக இருப்பதால் அதிகம் செக்ஸில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! அதுமட்டுமில்லாமல், ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!
ஆண்குறி நீளப்படுத்தும் சிகிச்சைகள் பலன் தரலாம்! (Penis Extenders Might Work)
செக்ஸ் மர்மங்கள்ல ஒன்றான ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க சிகிச்சைகள் பற்றிய செய்திகள் சமுதாயத்தில் ஏராளம். அதுபோன்ற சிகிச்சைகள் சில பலன் தரலாம் என்கிறது ட்யூரின் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து, ஆண்குறியை ஒரு இன்ச் நீளம்வரை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்கள்! அது எந்த நிறுவனம்னு கேக்காதீங்கோவ்…..ஏன்னா அவங்க அதை சொல்லல?!
இல்லாத ஒரு செக்ஸ் உச்சகட்ட புள்ளி?! (The G-Spot May Not Exist)
இதுவரைக்கும் பல பேர அல்லோ கல்லோலப் பட வைக்கிற உலக மகா கேள்விகள்ல ஒன்னு, “ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி அப்ப்டீன்னு ஒன்னு இருக்கா இல்லியா?” அப்படீங்கிறது! ஆனா, அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!
செக்ஸ் வாசனைகள்! (Sex Smells)
செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனை/ நாற்றத்தைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது The Journal of Neuroscience என்னும் மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கை!
செக்ஸை தூண்டும் ஆன்மீகம்?! (Spirituality is Sexy)
ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண்டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன்மீகத்தின்பால் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வு!
நண்பர்களே, தயவு செஞ்சு சந்தேகமெல்லாம் கேட்டுடாதீங்க. அப்புறம் நான், ஒரு நாலு நாளைக்கு வலைப்பக்கமே வரமாட்டேன். அதனால வர்ற பாதிப்பு உங்களுக்குத்தான் சரிங்களா



























ஜெகதீஸ்வரன்
மே 6, 2010
ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்
பயம்முறுத்திறீகளே!!
padmahari
மே 6, 2010
ஐய்யய்ய…..நீங்க வேற! உண்மைதாங்க, உங்களுக்கு வேணுமுன்னா அந்த ஆய்வறிக்கையோட PDF நகல அனுப்புறேன். நம்பித்தான் ஆகனும்ங்கிற மாதிரிதான் இருக்கு அந்த் ஆய்வு!!
ஜெகதீஸ்வரன்
மே 6, 2010
செக்ஸை தூண்டும் ஆன்மீகம்.
இது ரொம்ப புதுசு. ஆனால் செக்சிக்கான முறையான முறைகளையும், விளக்கங்களையும் இந்து மதம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. காமத்தை கொண்டாட தமிழர்கள் அமைத்த கடவுள் தான் லிங்கமும், ஆவுடையாரும்….
padmahari
மே 6, 2010
இது பத்தி நான் படிச்சதுண்டு. ஆனா, அது எந்த அளவுக்கு உண்மைன்னு இந்த ஆய்வைப் பத்தி படிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சது! கருத்துக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்!
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
பதிவு சூப்பரோ சூப்பரு!!
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
இது ஒரு நல்ல இடுகை
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
அருமை
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
அட்டகாசம்
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
சும்மா பின்னிட்டீங்க
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
பதிவ போட்டு பட்டைய கெளப்பிட்டீங்க
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
வேற எப்படி பாராட்டுறதுன்னே தெரியல
padmahari
மே 6, 2010
யூர்கன்……
உங்க அன்புக்கும், பாராட்டுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
ஆனா ஒரு சந்தேகம். இது என்ன வலைப்பதிவுல மறுமொழிய புதுசா கண்டுபிடிச்சிருக்குற யுக்தியோ? இல்ல நீங்க அறிமுகப்படுத்துற புது பாணியா? எது எப்படியோ, மறுமொழி எழுதி அப்படியே திக்கு முக்காட வச்சிட்டீங்க போங்க!!
யூர்கன் க்ருகியர்
மே 6, 2010
//மெதுவாக! நீங்கள் மிக வேகமாக மறுமொழி இடுகின்றீர்கள்.
//
க்கும்.. இது வேறயா??
padmahari
மே 6, 2010
உண்மையிலே இதுதான் அட்டகாசம்
யூர்கன்…..,
இதுவரைக்கும் நான், குசும்பை நீங்க மொத்தமா குத்தகைதான் எடுத்திருக்கீங்கன்னு நெனச்சேன். ஆனா, இப்பத்தான் தெரியுது குசும்புல நீங்க PhD முடிச்சிருக்கீங்கன்னு
BTW இந்த மறுமொழியப் படிச்சிட்டு நான் விழுந்து விழுந்து சிரிச்சதுல, உடம்பெல்லாம் ஒரே சிராய்ப்பு. இப்போ மருத்துவமனைக்குத்தான் போய்கிட்டிருக்கேன். பில் அனுப்புறேன், தயவு செஞ்சு மருத்துவச் செலவுக்கான பணத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிடுங்க சரிங்களா
பத்மஹரி,
27, மகாத்மா காந்தி தெரு,
அண்ணா நகர்,
ஹிரோஷிமா,
ஜப்பான் 123456
வெங்கடேஷ்
மே 6, 2010
நண்பரே செக்ஸை பத்தி எல்லா விஷயத்தையும் புட்டு புட்டு வைச்சிட்டீங்க இதுல இனிமே விளக்கம் கேட்கிறதுக்கு எதுவுமே இல்லைங்க. நீங்க பயப்படாதிங்க.இவ்வளவு கருத்தையும் நீங்க இந்தியாவுல இருந்து சொல்லியிருந்தீங்கனா, கலாச்சாரம்,பண்பாடு,
எல்லாத்தையும் மீறிட்டீங்கன்னு ஒரு வழக்கு போட்டிருப்பாங்க குஷ்பு மேல வழக்கு போட்டா மாதிரி ஏன்னா செக்ஸை பத்தி வெளிப்படையா பேசறதே தப்புன்னு ஒரு குரூப் ஆளுங்க சொல்லிட்டு திரியறாங்க. செக்ஸ் என்பது குற்றமென்றால் இந்தியாவில் கிட்டதட்ட நூறு கோடிக்கும் அதிகமான குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன
padmahari
மே 6, 2010
நல்ல வேளை நான் தப்பிச்சேன். இப்படி ஒரு மறுமொழிய எழுதி வயித்துல பால வாத்தீங்க வெங்கடேஷ்!
//இவ்வளவு கருத்தையும் நீங்க இந்தியாவுல இருந்து சொல்லியிருந்தீங்கனா, கலாச்சாரம்,பண்பாடு,
எல்லாத்தையும் மீறிட்டீங்கன்னு ஒரு வழக்கு போட்டிருப்பாங்க குஷ்பு மேல வழக்கு போட்டா மாதிரி ஏன்னா செக்ஸை பத்தி வெளிப்படையா பேசறதே தப்புன்னு ஒரு குரூப் ஆளுங்க சொல்லிட்டு திரியறாங்க. //
அப்படி எதாவதுன்னா, “வலைப்பதிவர் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வெறியர்களை கைது செய்யும்வரை சாகும்வரை உண்ணாவிரதம்” அப்படீன்னு ஒரு போர்டைப் போட்டு உக்காந்துடுவோமில்ல (ஆமா, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நீங்களும் வருவீங்கல்ல???)
அதுக்காக குஷ்பு சொன்னதையெல்லாம் ஒத்துக்க முடியாதுங்கோவ்!!
வால்பையன்
மே 6, 2010
//ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்//
இதுவரை கேள்விபடாத தகவல்!
வேறு யாராவது மனநல மருத்துவரை விசாரித்தீர்களா?
சில மதவாத டாக்டர்கள் வேண்டுமென்றே கூட புரளியை கிளப்பக்கூடும்!
padmahari
மே 6, 2010
//வேறு யாராவது மனநல மருத்துவரை விசாரித்தீர்களா?
சில மதவாத டாக்டர்கள் வேண்டுமென்றே கூட புரளியை கிளப்பக்கூடும்!//
இது என்னங்க வம்பாப் போச்சு. ஆமா, மனநல மருத்துவருக்கும் ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம்?? எனக்குப் புரியல கொஞ்சம் விளக்கிச் சொன்னா நல்லாருக்கும்!
அதிக சுய இன்பப் பழக்கம்/செக்ஸ் செயல்பாடுகள் இருந்தால் ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது என்பது சில காலமாய் மருத்துவ உலகில் இருந்துவரும் ஒரு கூற்று. அதை சமீபத்திய ஒரு ஆய்வு மேலும் உறுதி செய்திருக்கிறது. அதற்கான சுட்டிகள் கீழே…..
http://www.sciencedaily.com/releases/2009/01/090126082343.htm
http://www.webmd.com/prostate-cancer/news/20090127/masturbation-and-prostate-cancer-risk
வால்பையன்
மே 6, 2010
செக்ஸாலஜி டாக்டர்கள் பெரும்பாலும் மன்நல மருத்துவராக தான் இருக்கின்றனர், அதனால் தான் கேட்டேன்! எனக்கு அம்புட்டு அறிவு கிடையாதுங்கண்ணா!
padmahari
மே 7, 2010
ஐய்யய்ய, தப்பா எடுத்துக்காதீங்க வால்பையன்! நானே ஒரு அரைகுறைதான், அதனால நீங்க எங்கிட்ட தாராளமா உங்க சந்தேகங்களக் கேக்கலாம்!
அதாவது, மனநல மருத்துவரையும் புற்றுநோய் மருத்துவத்தையும் தொடர்புபடுத்தி பார்க்க எனக்கு அறிவு போதலையோன்னுதான், அது தொடர்பான கட்டுரை எதுவும் படிச்சிட்டுக் கேக்குறீங்களோன்னு உங்களக் கேட்டேன்! அந்த மருத்துவ செய்தியில இருக்குற உண்மையை உங்களுக்குப் புரிய வைக்கனும்னுதான் அப்படி எழுதினேன். இந்தத் துறையைச் (ஆய்வு) சாராத உங்களுக்கு இது மாதிரியான செய்திகள் ஏற்றுக்கொள்ள கடினமாயிருக்கும்ங்கிறத யோசிக்கத் தவறிட்டேன்! தவறா எடுத்துக்காதீங்க!
முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிங்க. உங்க ஆதரவு தோடரட்டும், மீண்டும் சந்திப்போம்!
வன்னிராயன்விம்மல்
மே 7, 2010
நம்ம சமூகத்துல இதை எப்பவுமே பெரிய பிரச்சனையாத்தான் பார்ப்பாங்க அதனூடு வளர்ந்ததாலத்தான் நான்கூட பாருங்க இந்த இடுகையைத்தான் முதலில பார்த்தேன்………..அதுசரி நித்தியானந்தா (ஆ)சாமியக்கூட நித்தின்னு செல்லப்பெயர் வச்சில்ல ஊடங்கள் அலங்கரிக்குது…
நம்ம பக்கத்திற்கும் இருதடவ வந்து ஆக்கபூர்வமா ஏதாவது சொல்லலாமே…
padmahari
மே 7, 2010
//நம்ம பக்கத்திற்கும் இருதடவ வந்து ஆக்கபூர்வமா ஏதாவது சொல்லலாமே…//
நீங்க வலைப்பக்கம் வச்சிருக்கீங்களா? உங்க முகவரியக் குடுங்க, எது வேணும்னாலும் தாராளமா சொல்றேன். அது ஆக்கபூர்வமா இல்லை அரைவேக்காட்டுத்தனமான்னு நீங்க அப்புறமா எனக்குச் சொல்லுங்க! நன்றி.
வன்னிராயன்விம்மல்
மே 11, 2010
பதிலுக்கு நன்றி
http://www.vannirayanvimmal.wordpress.com
மேலுள்ளதுதான் நம்ம அலட்டல் பக்கம்
நன்றி
raji
மே 13, 2010
I am coming to your blog after a while…enna allame Sex pathi irukku
Nadathunga…en pathil solla koodathu?, therincha pathil enraal sollalaame
padmahari
மே 13, 2010
//enna allame Sex pathi irukku //
இது என்னங்க வம்பா போச்சு?! நாட்டு மக்களுக்கு செக்ஸ் பத்தின விழிப்புணர்வும் அவசியம்ங்க
//Nadathunga…en pathil solla koodathu?, therincha pathil enraal sollalaame //
பதில் தெரியற அளவுக்கு நமக்க அனுபவம் இல்லீங்கோவ்
amk_345
மே 14, 2010
பின்னிட்டிங்க போங்க.
padmahari
மே 15, 2010
வாங்க amk_345,
முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. உங்க ஆதரவு தொடரட்டும், மீண்டும் மற்றுமோர் சுவாரசியத்தில் சந்திப்போம்!
Naangai kannnan
ஜூன் 10, 2010
உங்கள் ப்ளாக் பயனுள்ளதாக தான் இருக்கிறது…சிலது ….புரியிது… ஆனா ….புரியல….தற்பொழுது…டாஸ்மார்க் புண்ணியத்தில்…இப்பொழுது எல்லாம் செக்சில் ஆர்வம குறைந்து கொண்டு தான் போகிறது…நிறைய கள்ள உறவுகளும்….செக்ஸ் குற்றங்களும் ஏற்படுகிறது…உணவின் தன்மை ….மதுவின் புண்ணியத்திலும் செக்ஸ் என்பதே இப்பொழுது கேள்வி குறியாகியுள்ளது…முன்பெல்லாம் அம்மாவும்…பெண்ணும்…ஒன்றாக கறு உற்ற காலம் எல்லாம் உண்டு….அப்பொழுது ஆண்களிடம் வலிமை இருந்தது… இப்போழுது …..
padmahari
ஜூன் 10, 2010
கருத்துக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றிங்க கண்ணன்!