உலகின் எல்லாவிதமான மர்மங்களுமே, பொதுவா நமக்குள்ளே ஒரு வித அதீத ஆர்வத்தை, ஈர்ப்பை உண்டு பண்ணும். ஏன்னு கேட்டா….. எந்தவொரு மர்மமானாலும், அதைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். சில விஷயங்கள் கேள்விப்பட்டுத் தெரிந்திருந்தாலும், அவை உண்மைதானா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். மர்மங்களைக் கதைகளாக மட்டுமே கேட்டிருக்கும் பட்சத்தில் அவற்றைக் காட்சி வடிவில் காண வேண்டும் என்ற பேராவல் உருவாகும்! கேள்விப்பட்ட மர்மங்களின் பாதிப்பிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள (?), அம்மர்மங்கள்… [Read more…]
“தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” அப்படின்னு சொல்லியிருக்காரு இரண்டடியில் உலகளந்த புலவர் திருவள்ளுவர். தீப்புண்ணாவது உள்ளே ஆறி வடுவாகிப்போகும், ஆனால் சுடும் சொற்களால் ஏற்படும் புண் என்றுமே ஆறாது. அப்படீன்னா வலிச்சிகிட்டே இருக்கும் அப்படீங்கிறாரு! இது தொடர்பான இன்னொரு பழமொழிய, “நெல்லை கொட்டினாக்கூட அள்ளிடலாம், ஆனா சொல்லைக்கொட்டினா அள்ளவே முடியாது” அப்படீன்னு பெரியவங்க சொல்லக் கேட்டதுண்டு! இந்த ரெண்டு விஷயங்களுமே கடும்/தீய சொற்களால் ஏற்படும் வலி (பாதிப்பு) நீண்ட காலம் (நெருப்பு போல)… [Read more…]
இந்த ஊருக்கு (ஜப்பானுக்கு) படிக்க வந்ததுக்கப்புறம், பொழுதுபோக்கு அப்படீங்கிற வார்த்தைக்கு அர்த்தம் மாறிப்போச்சா இல்ல சுத்தமா இல்லாமையே போய்ட்டுதாங்குற ஒரு சந்தேகம், மனசுல அப்பப்போ வந்துபோகும். ஏன்னா, படிக்கும்/ஆய்வு செய்யும் நேரம் போக, பொழுதை வேறுவிதமாய் கழிக்க கிடைக்கும் சில சனி, ஞாயிறுகளில் பௌலிங், கராஒக்கே இப்படி எங்கேயாவது போவதுண்டு! அப்படிப்போகும் விளையாட்டு மையங்களிலெல்லாம் (கேம் சென்டர்கள்), சில பல தளங்களைத் (ஃப்ளோர்கள்) தாண்டியே பௌலிங் பகுதி இருக்கும். அந்த ஆரம்ப தளங்களைத் தாண்டும்போது, லொட்டு….லொட்டு…..லொட்டு என்று… [Read more…]
தலைப்பைப் படிச்சிட்டு உங்கள்ல சில/பல பேரு, “அடப்பாவி நீயும் ஆரம்பிச்சிட்டியா? மேலிருப்பான் வலைக்கு வந்தா, ஏதோ நாலு புது அறிவியல் செய்தி படிச்சிட்டு போகலாமேன்னு பார்த்தா…..” அப்படீன்னு உணர்ச்சிவசப்பட்டு, பதிவுச் செய்தியை பத்தி என்னென்னமோ கற்பனை பண்ணிடாதீங்க நண்பர்களே…… உங்க எல்லாருக்குமே தெரியும் “வெட்கம்” அப்படீங்கிறது ஒரு அழகான, கவிதை போன்றதொரு உணர்ச்சின்னு! அதனாலதான, நம்ம கவிஞர்கள் “நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்”னு எல்லாம் சினிமா பாட்டுல சும்மா பூந்து விளையாடுறாங்க?! ஆனா, அடிப்படையில கூச்ச சுபாவம்… [Read more…]
கல்லூரிகள்ல படிக்கத்தொடங்கும்போது (இப்பெல்லாம் பள்ளிகள்லேயே)…. நண்பன் 1: “மச்சி, தம்மடிச்சா எப்படி மச்சி இருக்கும்? நண்பன் 2: ஹே தோடா….மச்சான், நீ அடிச்சதே இல்லீயா? அதெல்லாம் சொன்னா புரியாது நண்பா, ஒரு முற அடிச்சிப்பாரு அப்புறம் தெரியும். படையப்பா பாட்டுல வர்றது மாதிரி “ஓ ஒ ஓ….கிக்கு ஏறுதே…..தான்?!” இப்படி தொடக்கத்துல ஒரு மப்புக்காகவும், கிக்குக்காகவும் ஆரம்பிக்கிற புகைப்பழக்கம், அப்படியே ரேஸர் (தல) அஜித் மாதிரி டாப் கியர்ல போயி, கடைசியில “புண்பட்ட மனச புகைவிட்டு ஆத்துற… [Read more…]
சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?). ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்ய…..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே… [Read more…]
பொதுவா புழுன்னு சொன்னாலே சில/பல பேருக்கு ஒரு விதமான அருவருப்பான உணர்வு ஏற்படும்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். அதுக்குக் காரணம் புழுக்களோட உடல் அமைப்பு, உருப்புகள், ஊர்ந்து செல்லும் நடை இப்படி நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்! ஆனா, நாம நடந்துபோகிற வழியில நகர்ந்து போன ஒரு புழுவை, நமக்கேத் தெரியாம எதேச்சையா மிதிச்சிட்டோம்னு வைங்க, உடனே அந்த புழு உடல் நசுங்கி பரிதாபமா செத்துப்போயிடும். அப்போ சில பேருக்கு தோனும், “அடடா, அதுபாட்டுக்கு சிவனேன்னு போய்க்கிட்டிருந்த புழுவ… [Read more…]
காட்டுக்கு ராஜா யாருன்னு கேட்டா சின்ன குழந்தை கூட சொல்லும் சிங்கம்னு! நாட்டுக்கு ராஜா யாரு, மனுசன்தான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். பொதுவா பார்த்தீங்கன்னா, காட்டுராஜா (சிங்கம்) பெரும்பாலும் தன்னோட இரைவேட்டைய காட்டுக்குள்ளேயே முடிச்சிக்கிறதுனால, காட்டை விட்டு வெளியே வர்றது இல்ல. ஆனா, நாட்டுராஜா (மனுசன்) அப்படியில்ல?! இரைக்காக இல்லாம பெரும்பாலும் தன்னோட வீர தீர செயல்கள காட்டவும், நல்ல சாப்பாடு சாப்பிடும்போதே நாக்கு அரிப்பு எடுத்துப்போயி (?), பாவப்பட்ட மான்கள வேட்டையாடுறதுக்காக காட்டுக்குப் போறத பத்திரிக்கைகள்,… [Read more…]
வைரஸ் ஒன்னு, தண்ணியடிக்கலாம்னு டாஸ்மாக்குக்கு போச்சாம் வைரஸ் வர்றதப் பார்த்த கடைக்காரர் சொன்னாராம்….. “வைரஸுக்கு எல்லாம் நாங்க மது விற்பனை செய்யுறதில்ல” உடனே அந்த வைரஸ் அவரை போட்டுத்தள்ளிட்டு, வரவேற்பு மேஜைல நின்னுக்கிட்டு சொல்லுச்சாம்…. “இப்போ நாங்க செய்யுறோம் மது விற்பனை, வைரஸுக்கு?!” இந்த நகைச்சுவை புரியாதவங்க, பதிவை இறுதிவரை தொடர்ந்து படிச்சிட்டு மீண்டும் ஒரு முறை நகைச்சுவையை படிங்க கண்டிப்பா புரியும்! நகைச்சுவை புரிஞ்சவங்களும் பதிவை தொடர்ந்து படிங்க, வைரஸ் பத்தி இதுவரைக்கும் உங்களுக்குத் தெரியாத… [Read more…]
எரிமலை பத்தி பெருசா நமக்கு ஒன்னுந்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, எரிமைலைன்னா என்ன, உலகத்துல அது எங்கெங்கே இருக்குங்கிற மாதிரியான சில செய்திகள மட்டும் படிச்ச அனுபவமுண்டு. நம்ம ஊருல இல்லைங்கிறதுனால அதப் பத்தி பெருசா அலட்டிக்கிட்டதில்லை இதுவரைக்கும்?! ஆனா, சில வருடங்களா ஜப்பான்ல (கல்வி நிமித்தமா வந்து) இருக்குறதுனால அப்பப்போ, தொலைக்காட்சியிலேயோ, ஜப்பானிய நண்பர்கள் மூலமாகவோ, இங்குள்ள சில எரிமலைகள் பத்தி சில விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டதுண்டு. எரிமலையப் பத்தி நெனச்சாலே, ஏதோ திடீர்னு நம்ம வீட்டுக்குப் பக்கத்துல… [Read more…]
அறிவியல் துறையல்லாத வேறு துறையைச் சேர்ந்த நிறைய பேருக்கு , “மரபனுவியல், உயிர்தொழில்னுட்பவியல், மூலக்கூறு அறிவியல், க்ரோமோசோம், டி.என்.ஏ, ஜீன்”னு, பரிச்சயமில்லாத பல அறிவியல் கலைச்சொற்களைப் பார்க்கும்போதும், படிக்க நேரிடும்போதும் தோனலாம், “என்னடா இது, கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கேன்னு?!”. ஆனா, மரபனுக்களின் செயல்பாடு குறித்த அறிவியல படிச்சுத் புரிஞ்சிக்கிறதப் பொறுத்தவரையிலாவது, அறிவியல் படிக்கிறதுல அப்படி ஒன்னும் பெரிய பிரச்சினையெல்லாம் இல்லீங்கன்னு தைரியமா சொல்லலாம்னு நெனக்கிறேன்! ஏன்னா, சமீபத்துல வெளியாகியிருக்கிற மரபனுவியல் குறித்த செய்தி… [Read more…]
சட்டவிரோதமான செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடுற பல பேர்ல சிலர, சில வித்தியாசமான(?) காரணங்களுக்காக நீதிமன்றம் தண்டிக்காம விடுவது சில நேரங்களில் நம்ம சமுதாயத்துல நடக்கும். உதாரணமா, புத்திசுவாதீனம் இல்லாத ஒருத்தர் ஒரு வன்முறையைச் செய்திருந்தாலும் அவரோட மன நிலைய காரணமா காட்டி, மருத்துவமனையில அனுமதிப்பாங்களே தவிர தண்டிக்க மாட்டாங்க. ஆனா, வேடிக்கையான சில காரணங்களுக்காகவும், வன்முறையில் ஈடுபட்ட சிலர தண்டிக்காம விட்டுடுவாங்க. நிஜ உலகத்துல இது எந்த அளவுக்கு சாத்தியம், நடைமுறையில இருக்குன்னு எனக்கு சரியா தெரியல… [Read more…]
நாம மனுஷங்கங்கிற ஒரே காரணத்துனால, பெரும்பாலும் நம்ம உருவாக்கின கட்டிடங்கள், பிரமிடுகள், கோவில்கள்னு இப்படி எதையோ ஒன்னத்தான் நாம உலக அதிசயம்னு சொல்லிக்க ஆசைப்படுறோம். பல்வேறு கால உலக அதிசயங்களாக நாம பட்டியலிட்டிருக்கிற பல உலக அதிசய பட்டியல்களே அதுக்கு சாட்சி (இங்கே)! ஆனா, மனிதர்களால (நம்மால) கண்டுகொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத இயற்கை அதிசயங்கள் எத்தனையோ இருக்கு இந்த உலகத்துல. அப்படிப்பட்ட அதிசயங்கள்ல ஒன்னத்தான் நாம் இன்றைய பதிவுல பார்க்கப் போறோம்! தந்திரக்கார வில் மீன் (Archer fish)!… [Read more…]
நம்ம எல்லாருக்குமே நூறு வருஷம் உயிர்வாழனுங்கிற ஆசை இருக்கும். ஆனா சில பேரு, “என்னது நூறு வருஷமா, இது என்ன ஆசையா இல்ல பேராசையா?” அப்படீன்னு கேக்கலாம். சரி, 100 வருஷங்கிறதே பேராசைன்னா, ஜப்பான் அமெரிக்கா போன்ற சில நாடுகள்ல 120/130 வருஷமெல்லாம் சில பேரு வாழுறாங்களே அதுக்கு பேரு என்ன?! இம்மாதிரியான பயனில்லாத விவாதங்களை விட்டுட்டு, நூறு வருஷம் வாழுறவங்களுக்கும் அதுக்கு குறைவான ஆயுட்காலம் வாழுறவங்களுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சோமுன்னா, அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொருவரும் செய்யும்… [Read more…]
“எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான்”னு பதிவுகளை எழுதிக்கிட்டிருந்த எனக்கு, இணைத்த பதிவுகளில் தரமுள்ளவற்றை மட்டும் பிரசுரித்து, தமிழ் வலையுலகில் (இணையத்தில்) ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது தமிழிஷ்! தமிழிஷ் தந்த அங்கீகாரம், வலைப்பயணப் பாதையில் நான் தடம்மாறிடாமல், எப்போதும் நேராகச் சென்றிடவேண்டியிட்ட கடிவாளம் போலாகிப்போனது! விளைவு, என் எழுத்துக்களின் போக்கை அறிவியல்/ஆய்வுகளின் திசையில் மட்டுமே இட்டுச்செல்லத் தொடங்கினேன்! தமிழிஷ் தளத்தில் பதிவுகளை இணைக்கச் செல்லும்போதெல்லாம், தமிழ்மீடியாவின் ஆனந்தி என்றொரு விளம்பரப்பலகை, “சிந்தையைக் கவரும் சுவாரசியமான பல செய்திகளுடன்… [Read more…]
என்ன நண்பர்களே, ஏப்ரல் மீன் கதையைப் பார்க்கலாமா? ஆனா, இன்றையப் பதிவுச் செய்திய படிக்கிறதுக்கு முன்னாடி, ரெண்டு விஷயத்தப் பத்தி நாம தெரிஞ்சிக்கனும். ஒன்னு, ஜூலியன் நாளேடுக்கும் க்ரிகோரியன் நாளேடுக்கும் உள்ள வித்தியாசம், ரெண்டாவது இந்த ரெண்டு நாளேடுகளுக்கும் முட்டாள்தினக் கொண்டாட்டத்துக்குமான தொடர்பு என்ன?(இதன் முந்தைய பதிவு இங்கு உள்ளது) ஜூலியன் நாளேடு! கி.மு 46-ல் ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த ஜூலியன் நாளேடு. இதற்கு முன்பு ரோமானிய நாளேடு பழக்கத்தில் இருந்திருக்கிறது. இந்த நாளேட்டில் தற்போது… [Read more…]
பள்ளியில படிச்ச காலங்கள்ல, பொதுவா ஏப்ரல் மாசம் வரப்போகுதுன்னாலே மனசுக்குள்ள ஒரு குதூகலம், சந்தோஷம் எல்லாம் வந்துடும். ஏன்னா, கோடை விடுமுறை நெருங்கிடுச்சிங்கிறதுனால. ஆனா, அத விட பெரிய சந்தோஷம் ஒன்னு இருக்கு ஏப்ரல் மாசத்துல. அதாங்க “முட்டாள்தின” கொண்டாட்டம்! பள்ளியில படிக்கும்போது, ஏப்ரல் 1-ஆம் தேதி மத்த பசங்கள ஏமாத்துறோமோ இல்லையோ, அவிய்ங்களுக்கே தெரியாம எப்படியாவது, அவிங்க முதுகுல “இன்க்” அடிச்சிருவோம். அடுத்த நாள் சம்பந்தப்பட்ட அந்த பையனோ/பொண்ணோ, தம்மேல இன்க் அடிச்சது யாருன்னு கண்டுபிடிச்சிட்டு,… [Read more…]
நாம் ஏன் பொய் சொல்கிறோம்னு தொடங்கி, இதுவரைக்கும் நான் வெற்றிகரமாக உண்மைய மட்டுமே (?) சொல்லிக்கிட்டு வர்றேன் . வாங்க, பணியிடங்கள்ல பரிமாறிக்கொள்ளப்படுகிற ‘சுவாரசியமான’ சில பொய்களைப் பத்தியும், அதன் உளவியல் கூற்றுகள் பத்தியும் ‘அல்பெர்டா பல்கலைக்கழக’ உளவியல் ஆய்வாளர் திரு.ஜெனிஃபர் ஆர்கோ என்ன சொல்றாருன்னு பார்க்கலாம். (இப்பதிவின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு செல்லுங்கள்) பணியிடங்களில் பொய்கள்! பள்ளிப்பருவம் தொடங்கி தள்ளாடும் முதுமை நாட்கள் வரை நாம் ஒவ்வொருவரும், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் பொய்களை… [Read more…]
April 30, 2010
12