Browsing All Posts published on »மார்ச், 2010«

வயசுக்கு வந்தாச்சு;ஆனா மூளைக்கு என்னாச்சு?!

மார்ச் 31, 2010

6

“ஆத்தா நான் பாசாயிட்டேன்”னு ஊர் முழுக்க கேக்குற மாதிரி கத்தி சொல்லலாம். ஆனா, “ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்”னு யாரும் ஊருக்கெல்லாம் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சொல்றதில்ல! ஏன்னா, முதல்ல சொன்னது கொண்டாடப்பட வேண்டிய சந்தோஷம், ரெண்டாவது சொன்னது வெளியில் சொல்லமுடியாத, ஒரு இனம்புரியாத உணர்வு! ஆனா, சங்கர் பட “பசங்க” மாதிரி “எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா”ன்னு ஊரெல்லாம் பாடிட்டு திரியலாம் தப்பில்ல. ஏன்னா, அது வாலிப வயசு, ஹார்மோன் பண்ற சேட்டை, மனசு… [Read more…]

பெரிய “உடல்”, ஆனால் சிறிய “பாதங்கள்”; ஏன்?

மார்ச் 30, 2010

2

தலைப்பைப் படிச்ச உடனே பலருக்கு (ஏன் எல்லாருக்குமே), “மொட்டைத் தலையன் குட்டையில விழுந்தானாம்”, இப்படித்தான் இருக்கும். அதாவது, தலையும் புரியாம, வாலும் புரியாம ஒரு கதைன்னு அர்த்தம். ஆனா, நாம பார்க்கப்போற செய்தி அப்படியில்லீங்க. ஏன்னா, நாம மிருகங்களோட உடல் மற்றும் பாதங்கள், இவ்விரண்டுக்குமான ஒரு “வித்தியாசமான” தொடர்பு இவற்றைப் பற்றித்தான் இந்தப் பதிவுல பார்க்கப்போறோம்! நம்ம வீட்டுல நாய், பூனை இப்படி சில மிருகங்கள வளர்க்கிறோம். அதுங்களோட பாதங்கள நீங்க கண்டிப்பா பார்த்திருப்பீங்க. உடலுக்கேற்றவாறு ஒரு… [Read more…]

அறிவை வளர்க்க “மூளை” மாத்திரைகள்?!

மார்ச் 29, 2010

8

சின்ன வயசுல, என்னை மாத்திரை விழுங்க வைக்கிறதுக்குள்ள எங்கம்மாவுக்கு போதும் போதும்னு ஆயிடும். ஏன்னா, நாம மாத்திரை விழுங்காம தப்பிக்கிறதுல பெரிய கில்லாடி. இப்படித்தான் ஒரு முறை எதோ ஒரு உடல் உபாதைக்கு மாத்திரை சாப்பிட சொன்னப்போ, சாப்பிடவே மாட்டேன்னு ஓடிக்கிட்டு இருந்திருக்கேன். சரி, இவன்கிட்ட சாதுவா பேசினா வேலைக்காகாதுன்னு அதிரடியா என்னோட அக்காவை என்னை பிடிச்சிக்க சொல்லிட்டு மாத்திரையை போட முயற்ச்சி செஞ்சுருக்காங்க. நாம யாரு….சிங்கமுல்ல, எதேதோ சத்தம் போட்டு ஒன்னும் முடியலைன்ன உடனே, யாருக்குமே… [Read more…]

உங்க “பாக்டீரியா கையெழுத்து” தெரியுமா உங்களுக்கு?!

மார்ச் 27, 2010

0

என்ன நண்பர்களே, நல்லாயிருக்கீங்களா? சில நாட்களா மேலிருப்பான் வலைப்பக்கம் வந்து பார்த்துட்டு, “என்னது இது, 200வது பதிவ போட்டுட்டு மேலிருப்பான் எஸ்கேப் ஆயிட்டானோ”ன்னு நெனச்சிருப்பீங்க! அதெப்படிங்க, “அரைகுறை தமிழாயிருந்தாலும் பரவாயில்ல, அறிவியல் தமிழாச்சே”ன்னு நீங்களும், எதாவது ஒரு பதிவு எழுதியிருப்பான்னு “நம்ம்ம்ப்பீ”  வலைப்பக்கம் வரும்போது, பதிவு எழுதாம இருக்க முடியும்?! வேலைப்பளு காரணமா சில நாட்கள் பதிவு ஒன்னும் எழுத முடியல. சரி அத விடுங்க, உங்க எல்லாருக்குமே தெரியும் (மேலிருப்பான் பக்கத்துல இந்த பதிவையும் படிச்சிருப்பீங்க)… [Read more…]

பதிவு-200!

மார்ச் 24, 2010

12

எல்லாருக்கும் வணக்கமுங்கோ….. உங்க எல்லாருடைய ஆதரவு, ஊக்கத்துனால மேலிருப்பான் வலைப்பக்கத்துல இன்னைக்கு வெற்றிகரமான 200வது பதிவுங்கோவ்! அதனால, நம்ம வேர்டுப்ரஸ் கணக்குபுள்ள என்ன சொல்றாருன்னா…… சுமார் 129 நாடுகளிலிருந்து 29,786 பேர் வருகை இதுவரை மொத்தம் 47,708 பார்வைகள் 675 மறுமொழிகள் 50 மின்னஞ்சல் சந்தாதாரர்கள் தமிழிஷ் தளத்தில் பிரசுரமான 80 செய்தி/கட்டுரைகள் Kelvi.net topblogs-ல் 48-வது இடம், ஒரு நாளில் 221 சராசரி விருந்தினர்கள் Tamil10.com-ன் தரவரிசையில் 94வது இடம்….. இது எல்லாத்துக்கும் மேல வலைப்பதிவினால்… [Read more…]

“டாக்டர்” கூகுளும் “சைபர்காண்ட்ரியாவும்”?!

மார்ச் 23, 2010

4

பதிவுத் தலைப்பைப் படிச்சவுடனே உங்களுக்கு மனசுல ரெண்டு கேள்விகள் எழுந்திருக்கும். அதாவது,  “டாக்டர் கூகுள்”னு ஒருத்தர் இருக்கிறாரா (இருந்திருப்பாரோ?), சைபர்காண்ட்ரியாவுக்கும் டாக்டர் கூகுளுக்கும் என்ன தொடர்பு ? இப்படி விசித்திரமான ரெண்டு கேள்விகள்தான் அது. என்ன சரிதானே? “இதைவிட விசித்திரமான பல பதிவுத்தலைப்புகளை மேலிருப்பான் வலைப்பக்கத்தில் சந்தித்திருக்கிறோம், அதனால் இது ஒன்றும் பெரிதல்ல எங்களுக்கு”ன்னு சர்வ சாதாரணமா சொல்லிட்டு “பதிவப் பத்தி மேல சொல்லுப்பா”ன்னு கேக்குற நண்பர்கள்ல ஒருத்தர்தான் நீங்கன்னா நான் உடனே பதிவுச் செய்திக்கு போயிடறேன்…..… [Read more…]

பிரபஞ்சத்துக்கு விளிம்பு இருக்கிறதா?

மார்ச் 22, 2010

16

வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தி சொல்லும்போது சில பேர், “ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடினேன்” அப்படீன்னு சொல்லக் கேட்டிருப்போம். வாழ்க்கைக்கு ஓரம்/விளிம்பு அப்படின்னு எதுவும் இருக்கா? இந்தக் கேள்விக்கு பதில் “இறப்பு”ன்னு சில பேர் சொல்லலாம்.  ஆனா, இதேமாதிரி இன்னொரு கேள்வி இருக்கு தெரியுமா உங்களுக்கு?! உங்களுக்கு சுலபமா புரியனுங்கிறதுக்காக நம்ம பாளையத்தம்மன் படத்துல வர்ற, விவேக்கோட நீதிமன்றக் காட்சியை எடுத்துக்குவோம். அந்தக் காட்சியில விவேக், பராசக்தி படத்துல சிவாஜி கணேசன் பேசின சீரியசான ஒரு வசனத்த… [Read more…]

“தண்ணியடிக்கும்” எலிகளும் “குடி”மகன்களும்!

மார்ச் 20, 2010

7

ஐயோ…..ஐயோ…..ஐயோ….இந்தக் காலக் கொடுமையை நான் எங்கே போய் சொல்றது? பொல்லாதவன் படத்துல வர்ற கருணாஸ் மாதிரி “மச்சான் நீ கேளேன்……மச்சான் நீயாவது கேளேன்”னு நம்ம பசங்க கிட்ட போய் சொன்னாக் கூட கேக்கமாட்டாய்ங்க போலிருக்கே! அப்படியே கேட்டாலும் சுட்டுப்போட்டாக் கூட நம்ப மாட்டாய்ங்களே….! ஆனா, இந்த விஷயத்த இப்போ நான் யார்கிட்டேயாவது  சொல்லியே ஆகனுமே?!. இல்லன்னா என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே. நான் இப்போ என்ன பண்ணுவேன்….??? ஏய் ஏய்…..நிப்பாட்டு! இப்போ உன் பிரச்சினைதான் என்ன? அப்படீன்னு… [Read more…]

சூர்யாவுக்கு போட்டியாக “சிக்ஸ் பேக்”குடன் வானவில் மீன்?!

மார்ச் 19, 2010

2

வாரணம் ஆயிரம் சூர்யாவைப் (சிக்ஸ் பேக்கைப்) பார்த்துட்டு, “ஆ…..ன்னு வாயைப் பிளந்தவர்களும், ஹும்ம்….. நாமளும்தான் இருக்கோமே” அப்படீன்னு தங்களைத் தாங்களே நொந்துகொண்டவர்களும் ஏராளம்னு அந்த படத்துல வர்ற அழகான சூர்யாவைப் பார்த்த எல்லாருமே ஒத்துக்குவாங்க! ஆனா, இப்போ சூர்யாவோட சிக்ஸ் பேக்கையெல்லாம் “ப்ஃபூ…..ன்னு” எளக்காரமா பார்க்குற மாதிரி ஒரு மேட்டர் வந்திருக்கு சமீபத்துல! அது வேற ஒன்னுமில்ல, சமீபத்துல வெளிவந்த (10 ஆண்டுகாலமா தொடர்ந்து நடத்தப்பட்ட) ஒரு வினோதமான ஆனா வெவரமான ஆய்வுமுடிவு பத்தின செய்திதாங்க அது?!… [Read more…]

வலி வந்தால் நாம் ஏன் அலறுகிறோம்?

மார்ச் 18, 2010

12

கொஞ்சம் நிதானமா யோசிச்சு பார்த்தீங்கன்னா புரியும், நாம ஒரு நாள்ல எத்தனை முறை சிரிக்கிறோம், அழுகிறோம், அலறுகிறோம், கண் சிமிட்டுறோம்…..இப்படி நம்ம உடலையும், குறலையும் வச்சிக்கிட்டு இன்னும் பல விதமான/வினோதமான சைகைகள்,  உணர்ச்சிகள வீடு/பொதுவிடங்கள்ல வெளிப்படுத்துறோம்னு. இப்படி என்னதான் நாம (சில சமயங்கள்ல) வினோதமான சில உணர்ச்சிகள வெளிப்படுத்தினாலும், நம்மைப் பார்த்து யாரும் “ஐய்ய….உங்களுக்கு என்ன மூளை கீள குழம்பி போச்சா” அப்படீன்னு கேக்குறது இல்ல. ஏன்னா, இந்த உணர்ச்சிகள நம்மைச் சுத்தியிருக்கிற எல்லாருமே வெளிப்படுத்துறாங்கங்கிறதுனால! என்னங்க,… [Read more…]

விரைவில் உறைவது எது, வெந்நீரா குளிர்ந்த நீரா?

மார்ச் 17, 2010

8

பள்ளி, கல்லூரிகள்ல வேதியல் பாடம் படிச்சப்போ, “தண்ணீரின்” சில மர்மமான குணங்களைப் பத்தி படிச்சதுண்டு! உதாரணத்துக்கு சொல்லனும்னா,வேதியல் குடும்பத்துலயே தண்ணீருக்கு மட்டும்தான் “பிரபஞ்ச திரவம் (Universal solvent)” அப்படீன்னு பேரு. ஏன்னா, கிட்டதட்ட பிரபஞ்சத்துல உள்ள எல்லாப் பொருள்களையும் கரைத்துவிடும் தன்மை கொண்டது தண்ணீர் மட்டும்தான் அப்படீங்கிறதுனால! மேல சொன்னதவிட இன்னும் மர்மமான ஒரு குணம் உண்டுங்கிறாங்க தண்ணீருக்கு! அது என்னன்னா, தண்ணீருக்கும் “நியாபக சக்தி” இருக்குதாம். இதக் கேட்டுட்டு, உங்கள்ல சிலர் “வாய்யா வா…..கேக்குறவன் கேனைன்னா,… [Read more…]

“பேசும்” குளிர்சாதனப் பெட்டி?!

மார்ச் 15, 2010

8

தலைப்பைப் படிச்ச உடனே யோசிச்சிருப்பீங்களே, “ஆஹா…அப்படியா, இது எப்போலேர்ந்து, சொல்லவேல்ல?!” அப்படீன்னு! ஒரு உண்மையச் சொல்லனும்னா, இப்பெல்லாம் உலதத் தொழில்னுட்ப முன்னேற்றம் போற போக்கைப் பார்த்தா, அடுத்த நூற்றாண்டுல மனுசன் இருப்பானான்னு தெரியல, அப்படியே இருந்தாலும் சும்மா பேருக்குத்தான் மனுசனா இருப்பான் போலிருக்கு?! அதாங்க, இந்த “ஒப்புக்குச் சப்பானி”ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி! என்னங்க, “ஐய்யய்ய….என்னப்பா இப்படிச் சொல்லிட்ட” அப்படீன்றீங்களா? பின்ன என்னங்க, ஆரம்பத்துல என்னடான்னா மனிதனுக்கு உதவுறேன் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு எந்திர மனிதன (ரோபோ) கண்டுபிடிச்சாய்ங்க!… [Read more…]

“இலவச இணையவீடு வாங்கலையோ இணையவீடு”

மார்ச் 13, 2010

11

“சொந்த வீடு, வாடகை வீடு அப்புறம் இன்ஸ்டால்மென்ட்டுல கூட வீடு இருக்கு தெரியும். ஆனா, இது என்ன  புதுசா இணையவீடு(?) ஒன்னும் புரியலையே?!” அப்படீன்னு ரொம்ப குழம்புற மக்களே அமைதி, அமைதி! பொதுவா நம்ம வீட்டுல என்னென்ன வச்சிருக்கோம்? உண்ண உணவு, உடுக்க உடை இது தவிர ஆடம்பரத்துக்காக பல பொருட்கள் அப்புறம், ரொம்ப முக்கியமா சொல்லனும்னா, ” வயிற்றுக்கு உணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப் படும்”(அனுமதி இல்லாம ஒரு குறளை அப்படியே உல்டாவா சொன்னதுக்காக… [Read more…]

விக்கல் என்றால் என்ன?

மார்ச் 12, 2010

8

இருமல், தும்மல், விக்கல் இதெல்லாம் எப்போ வரும்னு சொல்ல முடியாது. நம்ம ரஜினிகாந்த மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்தா பரவாயில்ல, சந்தோஷப்படலாம். ஆனா, விக்கல் என்னவோ கரெக்டா வரக்கூடாத நேரத்துலதான் கண்டிப்பா வரும். அப்படி வரும்போது தடுக்கவும் முடியாது?! ஆனா, விக்கல் வந்தா எப்படி நிறுத்துறதுன்னு நான் நெறைய சினிமாவில பார்த்திருக்கேன். நீங்க கூட பார்த்திருப்பீங்கதானே? அந்த யுத்திகள்ல எனக்கு ரொம்ப பிடிச்சது “விக்கல் வரும்போது விக்குறவங்கள பயமுறுத்தி” அந்த விக்கல நிறுத்துறது! ஆனா, விக்கல்… [Read more…]

நாம் “இமைப்பது” ஏன்?

மார்ச் 11, 2010

14

“கண்மூடி கண் திறப்பதற்க்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது”, “கண் இமைக்கும் பொழுதில் அதைக் காணவில்லை”, இப்படி மிக குறுகிய கால இடைவெளியை குறிப்பிட “இமைக்கும் பொழுதை” உதாரணமாக பலர் பயன்படுத்தக் கண்டு/கேட்டிருப்போம். இல்லீங்களா? ஆமாம், இமைக்கும் பொழுது அப்படீங்கிறது உண்மையில எவ்வளவு கால அளவு? உங்களுக்குத் தெரியுமா? தெரியும்னா மறுமொழியில எழுதி எனக்குத் தெரியப்படுத்துங்க! சரி,இப்போ நாம அடுத்த மேட்டரைப் பார்ப்போம். இன்றைய பதிவின் முக்கிய செய்தி என்னன்னு தலைப்பைப் படிச்ச உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கேள்விக்கான… [Read more…]

ஆத்மாவின் எடை என்ன?

மார்ச் 10, 2010

19

“ஆத்மா” அப்படீங்கிற, கண்ணால் பார்க்க முடியாத ஒரு விஷயத்துல நம்பிக்கை இருக்குற பலர், அவங்கவங்க அம்மா/அப்பா (இன்னும் பல சொந்தங்களின்) ஆத்மா சாந்தி அடைய என்னென்னமோ செய்யுறாங்க உலகத்துல! நாமளும், நம் சொந்த பந்தங்களுக்காக சில சமயம் ஆத்மா  சம்பந்தமான சில (சம்பிரதாயமான) விஷயங்களைச் செஞ்சிருப்போம். ஆக, நம்மில் பலருக்கு ஆத்மா அப்படீங்கிற விஷயத்துல நம்பிக்கை இருக்கு! ஆனா, ஆத்மாவைப் பத்தி உண்மையில யாருக்குமே இதுவரைக்கும் புரியாத/தெரியாத சில அடிப்படையான விஷயங்கள் இருக்கு! அது என்னன்னா, ஆத்மா… [Read more…]

சிலர் குறட்டை விடுவது ஏன்?

மார்ச் 9, 2010

15

“நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இது ஒரு மேட்டருன்னு எழுதறாய்ங்க பாரு”, அப்படீன்னு உங்கள்ல சில பேரு அலுத்துக்கலாம். ஆனா, என்னங்க பண்றது “குறட்டை விட்ட ஒரே காரணத்துனால தன்னோட வாழ்க்கையையே(?) இழந்த சில பேரோட” கதையை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்! அதாங்க, “புருஷனோட குறட்டை சத்தம் தாங்க முடியாம விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு போன ஒரு பெண்மணியோட” கதையத்தான் சொல்றேன். “அது உண்மையா இல்லையான்னு உனக்கு எப்படி தெரியும்? தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி… [Read more…]

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

மார்ச் 8, 2010

9

பொதுவா பார்த்தோமுன்னா, உலக உயிரினங்கள்ல பெண்ணினம் மென்மையானது, தாய்மை உணர்வு நிறைந்து, கருணை குணம் உடையது இப்படியெல்லாம் சொல்லலாம். ஆனா, சில குறிப்பிட்ட உதாரணங்களை எடுத்துக்கிட்டோமுன்னா, மேலே சொன்னதையெல்லாம் அப்படியே உல்டாவா சொல்லலாம்! எப்படின்னு கேக்குறீங்களா? உதாரணத்துக்கு சொல்லனும்னா, நமக்கு நல்லா தெரிஞ்ச (ஒரு உயிரினம்) தேள். தேள் வகையில “Death Stalker Scorpion” அப்படீன்னு ஒரு வகை உண்டு. இந்த வகை தேள்கள்ல, பெண் தேள்களுக்கு ஒரு விஷேச(?) குணமுண்டு. அது என்னன்னா, ஆண் தேள்களுடன்… [Read more…]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 202 other followers