உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….
உடல்-மூளை தொடர்பு !
நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!
அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!
இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

படம்:கூகுள்
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து, சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை! இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!
யு.எஃப்.ஓ/UFOs
யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!
தேஜா வு (Deja vu)
“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம், நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!
பேய்/பிசாசு/ஆவி
நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும். எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ! சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!
மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)
பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே, நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?
ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)
நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!
மனிதன் போன்ற மிருகம்/Bigfoot
பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா நெறைய பேர் சொல்லியிருக்காங்க! அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?! ஆனா அப்படி ஒன்னையும் இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை! வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!
டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)
அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!















tamilian
நவம்பர் 7, 2009
Good article. There is a related article in youthful vikatan also check it out:
http://youthful.vikatan.com/youth/ganesan11082009.asp
he talks about similar stuff too.
Continue your good work.
Tamilian
padmahari
நவம்பர் 7, 2009
பாராட்டுக்கு மிக்க நன்றி தமிழன். யூத் விகடனில் அந்த பதிவை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு சொல்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. மேலிருப்பானுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!
ரோஸ்விக்
நவம்பர் 7, 2009
இந்த மர்மங்களோட முடிச்சை யாரு எப்ப அவுப்பாங்களோ தெரியலையே!
நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
padmahari
நவம்பர் 7, 2009
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி ரோஸ்விக்! கூடிய சீக்கிரம் இந்த மர்மங்களோட முடிச்சுகளை யாராவது அவிழ்ப்பார்கள் என்றே நம்புவோம்!
மேலும் பல சுவாரசியங்களை வாசிக்க, மேலிருப்பானோடு தொடர்ந்து இணைந்திருங்கள்! நன்றி.
விஷ்ணு
நவம்பர் 7, 2009
கொஞ்சம் இல்ல நிறையவே பிதிய கிளப்புறீங்க….
padmahari
நவம்பர் 7, 2009
நீங்க வேற விஷ்ணு, இது மொத்த பீதியோட ஒரு சின்ன பகுதிதான்! அதுக்குள்ள பயந்தா எப்படி?
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி விஷ்ணு!
உங்கள் ஆதரவு தொடரட்டும்! நன்றி.
Parthasarathi Subramanian
நவம்பர் 8, 2009
ரொம்ப நல்ல இருக்கு. கொஞ்சம் விவரமா எழுதினா இன்னும் நல்லா இருக்கும்.
ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு பதிவு போடுங்க.
padmahari
நவம்பர் 8, 2009
வணக்கம் பார்த்தசாரதி,
கண்டிப்பா முயற்ச்சி பண்றேங்க! இது பற்றிய சுவாரசிய தகவல்கள சேகரிச்சு பதிவு எழுத முயற்ச்சி பண்றேன்.
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி பார்த்தசாரதி. தொடர்ந்து இணைந்திருங்கள், மீண்டும் சந்திப்போம்.
rsa
நவம்பர் 8, 2009
romba super sir. am much interested in these mysteries. Thanks for sharing.
padmahari
நவம்பர் 8, 2009
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி ஆர்.எஸ்.ஏ.
உங்கள் ஆதரவு தொடரட்டும்!
பிரியா
நவம்பர் 10, 2009
“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம் — > தெரிந்த மர்மத்தின் தெரியாத பெயர். — தகவல்களை மிக அழகாக தொடுத்துள்ளீர்கள் ஹரி… வாழ்த்துக்கள்
padmahari
நவம்பர் 10, 2009
//தகவல்களை மிக அழகாக தொடுத்துள்ளீர்கள் ஹரி… வாழ்த்துக்கள்//
நன்றி ப்ரியா! இதுல எந்த அளவுக்கு எனக்கு தகுதி இருக்குன்னு எனக்கு இன்னும் சரியா தெரியல. ஆனா தொடர்ந்து அந்த தகுதிய வளர்த்துக் கொள்ள முயற்ச்சிப்பேன் ப்ரியா! தவறிருந்தா சொல்லுங்க. திருத்திக்கொள்ள முயல்கிறேன். மீண்டும் சந்திப்போம்.
naamam
நவம்பர் 11, 2009
ennanga ippidi beedhiya kelappuringa?
padmahari
நவம்பர் 11, 2009
வெறும் ட்ரெய்லருக்கே இப்படி பீதியானா எப்படி, இனிமேதான் படமே?!
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி நாமம்.மீண்டும் வாருங்கள்!
naamam
நவம்பர் 12, 2009
Ennanga ithu trailara? Escape.
padmahari
நவம்பர் 12, 2009
என்ன நாமம் இப்படிச் சொல்லிட்டீங்க……வாழ்க்கையில ஒரு கிக் வேணாமா? உங்கள விடற மாதிரி இல்ல…..ஹா ஹா ஹா! மீண்டும் சந்திப்போம்.
Vijay
நவம்பர் 17, 2009
this is really nice, but neenga sonnathula தேஜா வு mathri enaku nirayavae nadanthiruku. first time oru edathuku ponna naan erkanave anga vanthu irukura mathri oru feelings irukum, antha edatha ennoda kanavala partha feelings enaku irukum…. not for all the places but only for some…
Vijay,
Muscat.
padmahari
நவம்பர் 17, 2009
வாங்க விஜய்,
உண்மைதான், மேற்குறிப்பிட்டுள்ள மர்மங்களில் சிலவற்றை தாங்களும் உணர்ந்ததாக நண்பர்கள் சொல்லி நானும் கேட்டதுண்டு. பெயர்தான் வேறே தவிர உணர்வு ஒன்றுதான் என்று எண்ணுகிறேன்.
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி விஜய். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் சந்திப்போம்! தொடர்ந்து இணைந்திருங்கள்.
chokkar
நவம்பர் 27, 2009
super sir
padmahari
நவம்பர் 27, 2009
வாங்க சொக்கர். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி! உங்களுக்கு இந்த மர்மங்கள் தொடர்பான அனுவனங்கள் ஏற்பட்டதுண்டா?
முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி சொக்கர். அடிக்கடி வலைப்பக்கம் வாங்க. மீண்டும் சந்திப்போம்!
வெங்கடேஷ்
பெப்ரவரி 24, 2010
மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாததுன்னு சொலவாங்க
ஆனா இந்த மாற்றங்கள் எல்லாம் எப்ப மாறுமோ, அதாவது
இந்த புரியாத புதிர்களூக்கான விடைகள் எப்போ தெரியுமோ
தெரியலை
padmahari
பெப்ரவரி 25, 2010
இந்த மாதிரி புதிர்கள் இன்னும் தொடர்ந்துக்கிட்டே இருக்குறதுனாலதான் வாழ்க்கை இன்னும் சுவாரசியமா, ரசிக்கக் கூடியதா இருக்குன்னு நான் நெனைக்கிறேன் வெங்கடேஷ்.
மீண்டும் சந்திப்போம்! நன்றி.
வெங்கடேஷ்
பெப்ரவரி 26, 2010
மிகவும் சரி நண்பரே
naren
மார்ச் 3, 2010
hi
i just came across your blog.. very interesting..
Keep writing ..
naren
padmahari
மார்ச் 3, 2010
வாங்க நரேன்,
முதல் வருகைக்கும், ஊக்கமறுமொழிக்கும் மிக்க நன்றி!
Thanks a lot Naren! Its a boost to me and its been a pleasure writing science in tamizh and moreover getting a positive and encouraging response for the same from you (all)!
Keep visiting my page again and again, nice meeting you in my page! Cheers…..:-)
தணிகாசலம்
April 21, 2010
எல்லாம் சரிதான். ராத்திரி தூக்கத்துக்கு வேட்டு வச்சிட்டிங்களே.
கண்ண மூடினா வெள்ளப் புடவ கிழவி வந்து ஜிங்கு ஜிங்குன ஆடும்ன
நம்ப இ எஸ் பி சொல்லுதே. என்னதான் நடக்கும் பார்த்துப்புடரேன்.
padmahari
April 22, 2010
பரவாயில்ல….இங்க இ.எஸ்.பி வேலை செய்யுற வரைக்கும் உங்களுக்கும் பாதுகாப்புதான். சில பேருக்கு எஸ்.பியே (Sensory power) வேலை செய்யுறது இல்ல. அவங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருஙக
கருத்துக்கு நன்றி!
அன்பு
மே 2, 2010
இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு விடை கிடைக்காமல் இருப்பதால் மட்டுமே வாழ்க்கை சுவராசியமாக போகிறது. அப்புறம் அண்டார்டிக்கா பக்கம் (?) விமானம் போனால் மறைந்து விடுகிறதாமே, அதைப்பற்றி கொஞ்சம் எழுதுங்கள்
padmahari
மே 3, 2010
வாங்க அன்பு,
உண்மைதாங்க. மர்மங்கள் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. இந்த விமானம் மறையும் செய்தி எனக்குத் தெரியாது, படித்தபின் கண்டிப்பா எழுத முயற்ச்சிக்கிறேன்!
முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க. தொடர்ந்தும் இணைந்திருங்கள், மீண்டும் சந்திப்போம்!
Gangaram
ஜூன் 30, 2010
Nalla padhivugal… Thanks for sharing..
Really intersting facts are given in your blog.
k.Balakumar from sri lanka
ஜனவரி 11, 2011
This is a Question:
sir, pilli, sooniyam, peigal unmaya?. athilirunthu kadavul nammai kappara?
pls, atharangaludan bathil ethirparkindren.
thanks.
padmahari
ஜனவரி 16, 2011
வாங்க பாலகுமார்,
முதல் வருகைக்கும் கெள்விகளுக்கும் நன்றி. இதுக்கான பதிலை ஒரு பதிவா போட கொஞ்சம் நாள் ஆகும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்திருங்க. நன்றி! மீண்டும் சந்திப்போம்
சுதாகர்
பெப்ரவரி 23, 2011
ஒரு திகில் நாவல் படித்தது போல் இருந்தது.பெர்முடா முக்கோணம் பற்றி ஒரு பதிவை போடுங்க,சார்.
padmahari
மார்ச் 13, 2011
நன்றி சுதாகர், முயற்சி செய்கிறேன்…..
soorath kumar
April 15, 2011
Nan intha valayin pudiyavan.But it is intresting to read.
padmahari
மே 20, 2011
வாங்க சூரத்குமார். உங்கள் வரவு நல்வரவாகுக…..
siddhaiyans
April 28, 2011
super
padmahari
மே 20, 2011
மிக்க நன்றிங்க…..
siddhaiyans
April 28, 2011
i need this like information often.
padmahari
மே 20, 2011
எழுத முயற்சி பண்றேங்க…..
saran
ஜூன் 4, 2011
very interesting ,plz forward all new msg,
padmahari
ஜூன் 20, 2011
welcome saran,
Thanks for the visit and comments. Will sure share more interesting info on the mysteries in the future…… keep visiting!
தமிழ்
ஜூன் 9, 2011
எதார்த்தமான எழுத்துக்கள்…. என் வாழ்த்துக்கள்
அன்புடன் நெல்லை தமிழ்…
padmahari
ஜூன் 20, 2011
வாங்க நெல்லைதமிழ்,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
மீண்டும் சந்திப்போம்……
Mona
ஜூன் 18, 2011
It was interesting man ,keep it up
padmahari
ஜூன் 20, 2011
Welcome Mona,
Thanks for the visit and Encouragement! Keep visiting meliruppan for more in the future…….
perumal
ஜூன் 25, 2011
உங்கள் அணைத்து பதிவுகளும் மிக அருமை தொடரட்டும் நன்றி
padmahari
ஜூன் 29, 2011
மிக்க நன்றிங்க பெருமாள். தொடர்ந்தும் வருகை தாருங்கள்…… நன்றி!
vijay
December 2, 2011
good research my wishes
siraj
April 11, 2012
yappadio nalla kolappetenga sir.
ramya
April 16, 2012
very interested sir…..
C.Ilampooranan
April 16, 2012
Sir arumai arumai,innum sila vilakam vendum ungalai eppadi thodarpu kolvathu.Intha karuthuku nandri.