ஏங்க…..உங்களுக்கு தெரியுமா டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதாமே? அப்படின்னு உங்ககிட்ட யாராவது சொன்னா…..அடக்கொடுமையே அப்படியா? ஐய்யையோ….நான் இன்னும் ஒன்னுமே அனுபவிக்கலியே முருகா?! அப்படின்னு பொலம்புர கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்ல, ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடா திரும்பவும்! ஏண்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? அதான் 2000-துல ஒருமுற இப்படியெல்லாம் பிட்டப்போட்டு படுத்திட்டீங்களேடா….அது போதாதா? அப்படின்னு கடுப்பாகிற கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா? நீங்க எந்தக் கூட்டத்துல ஒருத்தரா இருந்தாலும் சரி, 2012-ல உலகம் அழியப்போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு பிட்டு, இன்டர்னெட்டுள சுத்திகிட்டு இருக்குங்கோவ்!
நம்பிக்கையில்லன்னா இங்க போய் பாருங்க! இது ஒரு உதாரணம்தாங்க….ஆனா இது மாதிரி நூத்துக்கணக்குல இன்டர்னெட் முகவரிங்க இருக்கு! இதெல்லாம் ஒரு பொழப்பானு கேட்டாலும் சரி, ஆமா உண்மையிலே உலகம் 2012-ல அழியப்போகுதானு சந்தேக/பயப்பட்டாலும் சரி, இது ஒரு புரளி….புரளி….புரளி மட்டுமே! அப்படின்னு நான் சொல்லலீங்க! இந்த புறளியப்படிச்சுட்டு/பார்த்துட்டு உலக மக்கள்ல பல பேரு நாசாவைச் சேர்ந்த, உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர் டேவிட் மோரிசனுக்கு மின்னஞ்சல் மழையா பொழிஞ்சாங்களாம்! அந்த மின்னஞ்சல் மழையில் தொப்பலா நனஞ்சி?! இம்ச தாங்காம இந்த புறளியில என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆய்வையே மேற்கொண்டதாகச் சொல்றாரு மோரிசன்.அந்த ஆய்வின் மூலம்தான் அது வெறும் புரளின்னு கண்டுபிடிச்சிருக்கார் அவர்!
சரி, அப்படி என்னதான் அந்த புரளின்னு கொஞ்சம் வெளக்கமாப் பார்போம் வாங்க. அதாவது, சமீபத்துல திடீர்னு இணையதளத்துல ஒரு புரளி கெளம்புச்சி. அது என்னன்னா, மாயன் நாள்காட்டி அப்படின்னு ஒரு நாள்காட்டி இருக்காம்.அந்த நாள்காட்டி இப்பொ நாம் பயன்படுத்துற “க்ரிகோரியன் காலண்டர்” மாதிரி இல்லையாம்.அது கிட்டத்தட்ட மூனு நாள்காட்டி ஒன்னா சேர்ந்த நாள்காட்டியாம் (சொல்லப்போனா இன்னும் நெறைய பிட்ட போடராங்கோ….!).இந்த மாயன் காலண்டர்லதான் டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதுன்னு போட்டிருக்காம்.அதாவது, ஒரு பெரிய விண்வெளிக்கல் தாக்கி நம்ம பூமி சுக்கு நூறா ஒடஞ்சி தூள் தூளாகப் போகுதாம்!?

மாயன் காலண்டர்?! ( படம்:கூகுள்)
இந்த கதை எல்லாமே உடான்ஸு/டுபாக்கூருங்க கெளப்பின வெறும் புரளின்னு தெளிவா சொல்லிட்டாரு மோரிசன்! அதாவது, நம்ம வடிவேலு காமெடியில வர்ர மாதிரி பல பேரு கெளம்பி, ஊர ஏமாத்தி பணம் சம்பாதிக்க போட்ட பிட்டு/பீலான்னு சொல்லிட்டாரு அவரு! ஹாங்…..அது எப்படி? அப்படிச் சும்மா சோலிட்டா வுட்ருவோமா? வெவரத்தக் கேப்போமுல்ல….அப்படின்னு நீங்க சட்டையப் புடிப்பீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் மக்களே.அதுக்குத்தான் அவரு எப்படி இது ஒரு புரளின்னு சொல்றாருன்னு அவரையே கேப்போம் வாங்க!
ஐய்யய்ய….என்னங்க அவரு, ஆய்வு பத்தி எதாவது சொல்லுவாருன்னு பார்த்தா, ஆய்வறிக்கை இருக்கிற இந்த பி.டி.எஃப் காப்பியக் குடுத்துட்டு கம்பி நீட்டிட்டாரு?! சரி சரி, ஒன்னும் டென்சன் ஆகாதீங்க.எனக்குப் புரிஞ்ச வரைக்கும் நான் சொல்றேன் (உண்மையச் சொல்லனும்னா விண்வெளின்னாவே நமக்கு “கண்ண கட்டி காட்டுல வுட்டது மாதிரி இருக்கும்!?). அதாவது, உலகம் எப்படி அழியப்போகுதுங்கறதுக்கு பல யூகத்தை சொல்ற விஞ்ஞானிங்க/டுபாக்கூருங்க, நிபிருங்கர ஒரு கிரகம் இருக்கறதாவும், அந்த கிரகத்தோட மோதிதான் உலகம் சுக்கு நூறாப் போகப்போகுதுன்னும் புரளியக் கெளப்பி விட்ருக்காங்க இணையத்துல! ஆனா மோரிசன் என்ன சொல்றாருன்னா, இது எல்லாம் ஒரு வித விண்வெளி சம்பந்தப்பட்ட பயம்னும், அந்த வகையான பயத்துக்கு “காஸ்மோ ஃபோபியா” அப்படின்னு பேருன்னும் சொல்றாரு!
உலகப் புகழ் பெற்ற டேவிட் மோரிசன் அவர்கள், நாசாவின் விண்வெளித்துறை ஆராய்ச்சியில் ஒரு புலின்னு சொல்றாங்க. ஆனா அவருதான், நாசாவோட ஒரு பொதுமக்கள் சேவையான “கேளுங்கள் ஒரு விண்வெளித்துறை ஆய்வாளரை” (“Ask an Astrobiologist”) சேவையோட பொதுமக்கள் விஞ்ஞானியாம்.அந்த சேவையில அவரு, பொதுமக்களோட விண்வெளி சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லுவாராம். இந்தச் சேவை மூலமாத்தான் அவரு 2012 உலக அழிவப் பத்தி , பொதுமக்கள்கிட்ட இருந்து பல கேள்வி வர்ரத பார்த்துட்டு இதுல என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆராய்ச்சி பண்ணாராம்!
அந்த ஆய்வோட முடிவில அவரு கண்டுபிடிச்ச விஷயங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்றதுக்காக கேள்வி-பதில் அடங்கிய ஒரு ஆய்வறிக்கைய தயாரிச்சிருக்காங்க.அதவிட முக்கியமா/சுவாரசியமா அவரு கண்டுபிடிச்சது என்னன்னா, இந்த உலகம் அழியபோகுதுங்கற புரளியைப் பயன்படுத்தி மக்கள குழப்புரதுக்காகவே “2012″ அப்படின்னு ஒரு திரைப்படத்த எடுத்துருக்காங்க அமெரிக்காவுல! அந்த படம் வர்ர நவம்பர்ல திரைக்கு வருதாம். அது பத்தின ஒரு ட்ரெய்லர நீங்க கீழே பார்க்கலாம்…..
மோரிசன் அவர்களோட ஆய்வைப் பத்தியும், 2012-ல உலக அழிவு அப்படிங்கறது வெறும் புறளிதான் உணமையில்ல அப்படிங்கறத புரிஞ்சிக்கிறதுக்கும் வசதியா ஒரு உரை தயாரிச்சிருக்காங்க.அதாங்க….. நம்ம கோணார் தமிழ் உரை மாதிரி! அந்த உரையை நீங்கள் இங்கு சென்று படிக்கலாம்.
இந்த புரளி சம்பந்தப்பட்ட இன்னொரு குறும்படமும் இருக்கு மக்களே! இந்த படத்தைப் பாருங்க இது ஒரு புரளிதான்னு உங்களுக்கே நல்லாப் புரியும்……
சரி நட்புகளே….இப்போ நீங்க இந்த புரளி பத்தி என்ன நெனைக்கிறீ ங்கன்னு, முடிஞ்சா ஒரு மறுமொழி எழுதி சொல்லிட்டுப் போங்களேன்!















அடலேறு
அக்டோபர் 27, 2009
நல்லாத்தாய்யா கெளப்புராங்க பீதிய?
நானும் இதை பத்தி கேள்விபட்டேன் நண்பா.
ஆனா ஒன்று உறுதி உலகம் முழுக்க அந்த படம் வசூலில் வாரிக்குவிக்க போவது
நல்ல பகிர்வு
padmahari
அக்டோபர் 28, 2009
ம்ம்ம்….யாருக்குத் தெரியும்? உலகம் 2012-ல அழியத்தான் போகுதோ என்னவோ?! ஹி…ஹி….ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு பொதுச்சேவை?!!
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.
Ananth
அக்டோபர் 28, 2009
இத பத்தி கொஞ்ச நாளா நான் படிச்சிட்டு இருக்கேன். நீங்க ரொம்ப நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
2012 survival kit (http://www.2012supplies.com/) விற்க்கரங்க. மத்தவங்க பீதில இவங்க காசு பண்றாங்க.
padmahari
அக்டோபர் 28, 2009
வாங்க ஆனந்த்.வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! சினிமா எடுக்கிறது கூட பரவாயில்லை ஆனந்த், ஆனா இந்த சர்வைவல் கிட் விக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்!
தகவலுக்கு நன்றி ஆனந்த.தொடர்ந்து வலைக்கு வாங்க!
kuttysamy
அக்டோபர் 28, 2009
புரளியை புரட்டிஎடுத்து விட்டீர்கள் மேலிருப்பான்…அருமை .
padmahari
அக்டோபர் 28, 2009
வாங்க குட்டிசாமி.எப்பொழுதுமே புரளிதானுங்க நம்மல புரட்டி எடுக்குது.அதான் ஒரு முறை நம்ம அதச் செஞ்சு பார்ப்போமேன்னுட்டு…..?!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குட்டிசாமி.
செல்வா
நவம்பர் 10, 2009
இச் செய்தியை நம்புவதற்கு இல்லை
padmahari
நவம்பர் 10, 2009
உண்மைதான் செல்வா. இச்செய்தி ஒரு புறளி என்பதையே நானும் சொல்ல முற்பட்டிருக்கிறேன்!
முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி. மேலிருப்பானுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!
jeeva
ஜனவரி 29, 2010
2012 is end of the
RAJI
பெப்ரவரி 5, 2010
Edhu ellam Puralinna, Kadandha sila varudangalukku Munbu Rash’yavil 2 Sooriyan therinthathagaum, varum 2011 may madham ulagil ulla anaivarum edhai kaana mudium endrum sollgiraangalea, ethu dooppa?
padmahari
பெப்ரவரி 5, 2010
வாங்க ராஜி,
நீங்க சொல்ற இந்த வினோதமான விஷயத்தை இப்போதான் முதன்முதலில் கேள்விப்படிகிறேன் நான். அதனால், என்னிடம் உங்கள் கேள்விக்கு பதில் எதுவும் தற்போது இல்லை. தெரிந்தால் சொல்கிறேன்.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. மீண்டும் சில விந்தையான விஷயத்தில் சந்திப்போம். தொடர்ந்து இணைந்திருங்கள்!
ranjith
ஜூன் 18, 2010
HI I LIKE THIS WELCOME U WOLD SHE THIS
padmahari
ஜூன் 19, 2010
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க ரஞ்சித். அடிக்கடி வலைப்பக்கம் வாங்க, மீண்டும் சந்திப்போம்!
Harry
மே 11, 2011
இவங்க சொல்றது தான் நடக்குமுன்ன அப்புறம் கடவுள் எதுக்குங்க ….. உலகம் எப்ப அழியும் எப்படி அழியும் எண்டு
யாருக்கும் தெரியாது அழிய வேண்டிய நேரத்தில கண்டிப்பா அழியும் தல
padmahari
மே 20, 2011
உண்மைதான். ஏதோ அறிவியல்பூர்வமா சிந்திச்சு, ஆய்வுகள் செஞ்சு சொல்றாங்க. பொறுத்திருந்து பார்க்கலாம் உண்மை என்னன்னு……
ram
ஜூன் 20, 2011
dear friends don’t learn no more question the world is going to ends……..
padmahari
ஜூன் 20, 2011
Welcome Ram,
Thanks for visit and keep visiting……
SURESHKUMAR.K
ஆகஸ்ட் 10, 2011
வேலைஇல்லதவர்கள் பொழுதை போக்குவதற்க்கு செய்யும் சிலுமிசங்கள்
உங்கள்
சுரேஷ்குமார்.க
padmahari
ஆகஸ்ட் 19, 2011
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள்
M.G.JEBARAJ
ஆகஸ்ட் 25, 2011
I BELIEVE ON THE ETERNAL LIFE IN HEAVEN WHICH IS DESCRIBED IN THE HOLY BIBLE.SO, I DON’T FEAR ABOUT IT. LET COME WHAT MAY………
cnna
செப்டம்பர் 20, 2011
yaaruku theriyum nadakalaam
thanalakshmi
அக்டோபர் 1, 2011
ithaye velaiya vachite oru kumbal alauthu pa .ivanga elam kuthavachi yosipangalo
அணு
நவம்பர் 22, 2011
செய்திக்கு நன்றி…உலகம் அழிந்து கொண்டேதான் இருக்கிறது ,, ஜப்பான், இலங்கை தமிழர்கள், இந்தோன்ஏசியா என்று. பாதிக்கபடாதவர்கள் உலக அழிவை பற்றிய செய்திகளை தேடுகிறார்கள்.
hari
December 31, 2011
ulagam aliyum nu soli en makala bayathu la althuranga ungala mudinja inum nala satchigal arpaduthi solunga nandri
govindaraj
December 31, 2011
don’t waste ur time,vallum varai valldhu sathippom.happy newyear.
lakshmanan
ஜனவரி 1, 2012
Be happy till the end of world
mohamed jassim
பெப்ரவரி 5, 2012
enna koduma sir ithu……………………………………………………………………………!!!!!!!!!!!!!
ராம்
மார்ச் 11, 2012
உலகம் ஒரு ஒரு பார்ட் டா தான் அழியனும். அத அவுங்க கண்ணால பார்கனும். அப்பொ தான் மக்களுக்கு பயம் வரும்.
saminathan
April 12, 2012
the world does not destroyed.
kaathu
April 12, 2012
etho ivangalum soldraga namalum namburom
jenifer
April 15, 2012
ayo ulagam azhiya pogutha enk ennum kalyanam nadakalaye
jenifer
April 15, 2012
samy jesus pls enna mattum kapathu
Krishna
மே 11, 2012
All is Well……